Monday, April 14, 2014

சத்குருவின் பாதங்கள்தான் நம்மை காக்கும்

சத்குருவின் பாதங்கள்தான் 
நம்மை காக்கும் 




சத்குருவின் பாதங்கள்தான் நம்மை
அனைத்து இன்னல்களிடமிருந்து காக்கும்.

சத்குரு யார்?

சத்  என்றால் உண்மை.
உண்மை  என்றால் பிரம்மம்.
அதை உள்ளபடி உணர்ந்தவர்.
மரண பயத்தை வென்றவர்.
எந்த நிலையிலும்
தன் அமைதியை இழக்காதவர்.

சீலம் உடையவர்.
குறை காணாதவர்.
எதற்கும் அஞ்சாதவர். அபயம் அளிப்பவர்.
ஆபத்துக் காலத்தில் அஞ்சி  ஓடாதவர்.

அன்புடையவர். ஆசைகளற்றவ்ர்
நன்மைகளை அளிப்பவர்.
தீமைகளை அகற்றுபவர். என்று
சொல்லிக்கொண்டே போகலாம்.
அவர்தான்  சத்குரு. .

மற்றவர்களெல்லாம்
வெறும் சத்தை  குரு

எவர் முன்பு ஒருவன் மனதில் ஐயங்களே
எழவில்லையோ அல்லது அவன் மனதில்
உள்ள கேள்விகளை அவன் கேட்காமலேயே
அனைத்திற்கும் பதில் கிடைத்துவிடுகிறதோ
அவர்தான்சத்குரு.

எவரை நினைக்கயிலேயே மனதில்
ஒரு இனம் புரியாத ஆனந்தம்
ஏற்படுகிறதோ அவர்தான் சத்குரு.

அப்படிப்பட்ட குரு ஒருவனுக்கு கிடைத்துவிட்டால்
அவன் எதற்கும், எங்கும், எதையும் நாடி
ஓடவேண்டியதில்லை.
அவனுடைய தேடல் முடிந்துபோயிற்று.

காமத்தை தெய்வங்களாலும்
வெல்ல முடியாது

சிவனை காமத்தில் ஆழ்த்த நினைத்த மன்மதனை சிவன் தன் நெற்றிக்கண்ணால் எரித்து    சாம்பலாக்கிவிட்டார்.

பரந்தாமன் மோகினி வேஷம் போட்டுக்கொண்டு வந்தபோது சிவபெருமானே உலகிலேயே பேரழகியான் பார்வதி தேவி அருகில் இருந்தும் காமத்தை அடக்கமுடியாமல் மோகினி மீது மோகம் கொண்டான்( நாரயணீயம்)

சூர்ப்பனகை  ராம லட்ச்மணர்கள்  மீது மோகம் கொண்டதை  தடுக்க இயலாமல் அவளை பங்கம் செய்து அனுப்பிவிட்டனர்.

பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்த விஸ்வாமித்திரர்.
மேனகையின் அழகின் முன் தோற்றுப்போனார்.

சிவபெருமானையே தரிசித்து வரம்
பெற்ற பராக்ரமசாலியான  இராவணனே
சீதையின் அழகில் மயங்கி அழிந்து போனான்.

பகவான் ராமக்ருஷ்ண பரமஹம்சர்
தன்னை சோதிக்க அனுப்பப்பட்ட அழகிய விலை மாதர்களை
காளியின் திருவடிகளை நினைத்த அடுத்த கணமே உடல் விரைத்துப்போனார். அதைக் கண்ட  மாத்திரத்தில் அவர்கள் அலண்டு ஓடிவிட்டார்கள்.

காமம் எப்போது ஒழியும்?

காண்பதனைத்தும் பிரம்மம் என்ற நிலையை
அடைந்தால்தான் ஒழியும்.

புலன்களை வென்றால்தான்
காமம் தொலையும்.

தான் ஆண் அல்லது பெண் என்ற தேகாமிமானம்
தொலைந்தால்தான் காமம் அகலும்.

பெண் மீது கொண்ட மோகத்தினால்
நாரதரே பல துன்பத்திற்கு உள்ளானார்

எந்நேரமும் பகவானைப் பற்றியே சிந்தித்துக்கொண்டே
இருப்பவர்களைக் கூட ஒரு கணம் மாயை மயக்கி
பள்ளத்தில் தள்ளிவிடும்.

காமத்தை ஒழிக்க ஒரே வழி மனமே
இல்லாமல் செய்ய வேண்டும்.
மனம் இருக்கும்வரை ஆசைகள் இருக்கும்.
அதை தொடர்ந்து எல்லாம் இருக்கும்.

அதற்க்கு ஒரே வழி சத்குருவின பாதங்களை
சரணடைவதுதான். 

அகந்தை கொண்டு 
நம்மாலே எல்லாம் சாத்தியம்
என்று எண்ணினால் என்றும் வெற்றி காண்பது அரிது. 

2 comments:

  1. //பெண் மீது கொண்ட மோகத்தினால்
    நாரதரே பல துன்பத்திற்கு உள்ளானார்//

    இது கேள்விப் பட்டதில்லையே...

    ReplyDelete
  2. உண்மை தான் ஐயா.... ஆசையை தொடர்ந்து எல்லாமே தொடரும்...

    ReplyDelete