Wednesday, April 2, 2014

செங்கதிர் தேவனைப் போற்றுவோம்.

செங்கதிர் தேவனைப் 
போற்றுவோம். 



ஓவியம்-தி ரா.பட்டாபிராமன் 


நன்மையையும் தீமையும்.
கலந்ததுதான் உலகம்

நாம் நோக்கும் பார்வையில்தான்
இந்த உலகம் தோற்றமளிக்கிறது.

ஏனெனில் இந்த உலகில் ஒரு நாணயத்தின்
இரு பக்கங்களைப் போல் நன்மையையும்
தீமையும் சேர்ந்து இணைபிரியாமல் இருக்கின்றன

எப்படி நிலவின் மறு பக்கத்தை நாம் பார்க்க இயலாதோ
அது போல் எல்லா செயல்களிலும் நன்மையே பார்ப்பவர்கள்
மனதில் தீமைகளை காண இயலாது

அதுபோல்தான் எதைப் பார்த்தாலும்
அதில் தீமைகளையே காண்பவர்கள் கண்களுக்கு
 நன்மைகளே தோன்றாது.

நன்மையே காண்கிறவன் அவனும் மகிழ்ச்சியடைகிறான்.
அவனால் இந்த உலகமும் நன்மை  அடைகிறது

குறைகளை காண்பவன் எதிரிகளை
உருவாக்கி கொள்கிறான்.

பிறரின் மன அமைதியையும் கெடுக்கிறான்
அவனும் அமைதி  இழந்து தவிக்கிறான்.

இருளும் ஒளியும்
கலந்ததுதான் இந்த உலகம்.

மனம் இருண்ட பகுதியையே
கண்டு கொண்டிருந்தால்
வாழ்வு இருண்டு போகும்.

அதனால்தான் காலையில்
கண் விழித்தவுடன்
கண் கண்ட  தெய்வமாம்
செங்கதிர் தேவனை போற்றி மகிழ்வோம்.

காயத்ரி மந்திரத்தின் பொருளை அழகு தமிழில்
"செங்கதிர்தேவனின் ஒளியைத் தேர்கின்றோம்
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி  நடத்துக '
என்ற மங்களம் வாய்ந்ததோர் சுருதி மொழி
என்று நமக்கு அளித்த  
பாரதியை  பாராட்டுவோம்.

அனைத்து செயல்களிலும்,
மனிதர்களிலும் நன்மைகளை மட்டும் காண
நம் மனத்தை பயிற்றுவிப்போம் .

இந்த உலக வாழ்வை
இன்பமாக வாழ்வோம்.

2 comments:

  1. மகிழ்ச்சி என்பது மனதைப் பொறுத்ததுதானே.. குணம் நாடி குற்றமும் நாடி அவற்றில் மிகை நாடி மிக்க கொளல் என்றாலும் குணமும் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது என்பதை மனதில் நிறுத்தி அவற்றைப் பார்க்கப் பழகினால் போதுமே..

    ReplyDelete
  2. அனைத்தும் நம் மனதைப் பொறுத்தே என்பதை அருமையாகச் சொல்லி உள்ளீர்கள் ஐயா...

    ReplyDelete