Monday, April 7, 2014

கடைத்தேற்றும் ராம நாமத்தை நாவினால் சொல்லி சொல்லி !

கடைத்தேற்றும் ராம நாமத்தை நாவினால் 
சொல்லி சொல்லி !


அன்பின் வடிவமே இராமன்
அழகின் வடிவமே இராமன்
ஆற்றலின் வடிவமே இராமன்.



உன் வடிவம் கண்டாலே
உள்ளத்தில் ஆனந்தம்
ஊற்றெடுக்கும்

அன்பு பெருக்கெடுக்கும்
அழுக்காறு வறண்டுவிடும்.

மனமே ராம நாமம்
சொல்லிப் பழகு தினமே

கொடிய மிருகங்கள் வாழும்
வனத்தில் சுற்றி திரிந்த
வால்மீகியைகடைதேற்றியது
ராம நாமம்

அகந்தை என்னும் புலியும்,
காம குரோதங்கள் என்னும்
கொடிய விலங்குகள் வாழும் உன்
மனமென்னும் காட்டில் சுற்றி  திரியும் நீ
உன்னைக் காத்துக்கொள்ள
இன்றே ராம நாமத்தை உச்சரிப்பாயாக


நாவினால் நச்சுப் பூச்சிகளை
பிடித்து உண்ணும் பல்லியைப் போல்
பாரினில் உழன்று பாம்பின்
வாயில் சிக்கி மாளுவதைப்  போல்
வீணே மாண்டு போகாதே.

நம்மைக் கடைத்தேற்றும்
ராம நாமத்தை நாவினால்
சொல்லி சொல்லி
நமனிடமிருந்து
உன்னைக் காப்பாற்றிக்கொள்

அனுப் ஜலோடாவின் அருமையான குரலில்-
ராம பஜன். கேளுங்கள். இன்புறுங்கள்.



https://www.youtube.com/watch?v=WmBosNP38HQ

4 comments:

  1. ராம் பஜன் அருமை ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. ஸ்ரீ ராமஜயம்.. ஸ்ரீ ராமஜயம்!..

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ ராமஜயம் -நம்பிய பேருக்கு ஏது பயம்?

      Delete