அகந்தை கொண்டு அலையாதீர்
அடிபட்டுச் சாகாதீர் !
எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்
அதாவது தலையே முதன்மையானது
தலையில்லாதவற்றை
முண்டம் என்று கூறுவர்
இந்த உடலோ அல்லது இந்த உலகமோ
இயங்க ஒரு தலை(மை) வேண்டும்.
இந்த அண்ட சராசரங்களையும்
இறைவன்தான் நெறி பிறழாமல்
ஆட்டிவைக்கின்றான்.
அவன் ஆணைக்கு கட்டுப்பட்டு
பஞ்ச பூதங்களும்
செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன
அவன் ஆணைக்கு கட்டுப்பட்டு
இயங்கவேண்டியவர்கள்தான் நம்
போன்ற மனிதர்களும்.
உயிருள்ள,மற்றும் உயிரற்ற பொருட்களுக்கும்
இந்த விதிபொருந்தும்.
ஒரு சாதாரண ஆணிக்கும் தலை இருக்கிறது.
அது ஒரு மரத்திற்குள் இறங்குவதர்க்கோ அல்லது ஒரு சுவற்றில் இறங்குவதர்க்கோ சுத்தியால் பலமுறை அடி வாங்குகிறது.
அதுபோல்தான் மனிதர்களும் தலைக்கனம் பிடித்து அலைந்தால் இறைவனிடம் இழப்புகள், தீராத நோய்கள், ஏமாற்றம், மரணம் என பலவிதமான அடிகளை தொடர்ந்து வாங்கிக் கொண்டேதான் இருக்கவேண்டும்.
கோள்களே சூரியனை சுற்றி
ஒளியையும் சக்தியையும் பெறுகின்றன.
அதுபோல்தான் சக்தியூட்டப்பட்ட ஆலயங்களில் உறையும் இறை மூர்த்தங்களை சுற்றி வந்தால் நம் துன்பங்கள்
விலகும், மனம் அமைதி பெறும் வினைகள் அகலும்.
ஆலயங்களில் இறைவனைத் தவிர இதர சிந்தனைகளை விடுத்து
நம் மனதை ஒருமுனைப்படுத்திவணங்கவேண்டும்.
அப்போதுதான் ஆலயம் செல்வதின் நோக்கம் நிறைவேறும். .
.
இந்த உண்மையை உணர்ந்த ஞானிகள்
அகந்தையை விடுத்து இறைவனின்
விளையாட்டை ரசித்து இன்புறுகிறார்கள்.
அகந்தையை அவர்கள் விட்டுவிட்டதால்
அவர்களுக்கு எந்த பொருளின் மீது மோகமும் இல்லை
அதனால் விருப்பும் இல்லை, வெறுப்பும் இல்லை.
அவர்கள் உள்ளம் தெளிவாக இருக்கிறது
மனதில் எந்த அசுத்தமும் இல்லை.
சுத்தமான நீர் நிலையில் உள்ள அனைத்தும்
தெளிவாக தெரிவதுபோல் முக்காலமும்
உணர்ந்தவர்களாக தன்னை அண்டி வருபவர்களின்
துன்பத்தை இறைவனின் அருள் கொண்டு
அறிந்து அதை போக்குகிறார்கள்.
அகந்தை கொண்டவர்களின் மனது காம குரோதம், சுயநலம் இவற்றால் கலங்கி குழம்பி போய் உள்ளதால் அவர்களால் எந்த தெளிவான் முடிவும் எடுக்க முடியாது .
அவர்களும் துன்பப்பட்டு பிறருக்கும் துன்பத்தை தருகிறார்கள்.
அவர்களால்தான் இந்த உலகம் இன்று கொடும் துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறது.
எனவே தலைக்கனம் இல்லாமல் இருப்போம்.
தலைவனான இறைவனின் ஆணைக்குட்பட்டு இயங்குவோம்.
நாமும் இன்பமாக இருப்போம்.
நம்மை சுற்றியுள்ள இந்த உலக உயிர்களுக்கும் இனபமாய் இருக்க உதவுவோம்
ராம நாமத்தை எப்போதும் சிந்தையில் வைப்போம்
சிரமமின்றி இவ்வுலக வாழ்வை சிறப்பாக வாழ்வோம்

இறைவனின் ஆணைக்குட்பட்டு இயங்குவோம்.
ReplyDeleteநாமும் இன்பமாக இருப்போம்.
நம்மை சுற்றியுள்ள உலக உயிர்களும்
இன்பமாய் இருக்க உதவுவோம்!..
சீரிய சிந்தனை.. வாழ்க நலம்!..
அகந்தையை ஒழிப்போம். அன்பைப் பரப்புவோம்.
ReplyDeleteசொன்ன உதாரணமும் நச்...
ReplyDelete