பேதமில்லை இறைவனிடத்தில்
இறைவன்
ஆலமரம்போன்றவன்
அவன் அனைவருக்கும் புகலிடம் அளிப்பவன்
அவனுக்கு, ஜாதி, மதம், இனம், மொழி என
எந்த வேறுபாடுகளும் கிடையாது
அவனுக்கு மனிதர்கள் விலங்குகள், சிறு உயிர்கள்,
பறவைகள், உடலின்றி திரியும் ஆவிகள்
என எந்த பாகுபாடும் கிடையாது.
ஒரு ஆலமரத்தின் நிழலில் மனிதர்கள்,
விலங்குகள் தங்கி இளைப்பாறுகின்றன
பொந்துகளில், பாம்பும், புழு பூச்சிகளும் ,
பறவைகளும் மற்றும் எண்ணற்ற
பிராணிகளும் தங்குகின்றன
அவைகள் அனைத்திற்கும், இலைகளையும், காய்களையும்
கனிகளையும், குளிர்ந்த காற்றையும் மரம் வழங்குகிறது.
உயிர்களை தின்று வாழும் உயிர்களுக்கு
உயிர்களையும் இருக்கும் இடத்திலேயே
கிடைக்கும்படி செய்திருக்கிறான் இறைவன்.
இவைகளை உணர்த்தும் முகத்தான்
ஈசன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து
ஞானத்தை போதித்தான்.
எல்லா மனிதர்களும்
இந்த உண்மையை மனதில் கொள்வோம்
அன்பான உலகைப் படைப்போம்
ஆனந்தமாக வாழ்வோம்.
பேதங்களை விட்டொழிப்போம்
வேதம் கூறும் உண்மையை
வாழ்வில் கடைபிடிப்போம்.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
அனைவரும் ஒருவொருக்கொருவர்
உதவி செய்து கொண்டு பகைமை
ஒழித்து பாங்காய் வாழ்வோம்.
இறைவன்
ஆலமரம்போன்றவன்
அவன் அனைவருக்கும் புகலிடம் அளிப்பவன்
அவனுக்கு, ஜாதி, மதம், இனம், மொழி என
எந்த வேறுபாடுகளும் கிடையாது
அவனுக்கு மனிதர்கள் விலங்குகள், சிறு உயிர்கள்,
பறவைகள், உடலின்றி திரியும் ஆவிகள்
என எந்த பாகுபாடும் கிடையாது.
ஒரு ஆலமரத்தின் நிழலில் மனிதர்கள்,
விலங்குகள் தங்கி இளைப்பாறுகின்றன
பொந்துகளில், பாம்பும், புழு பூச்சிகளும் ,
பறவைகளும் மற்றும் எண்ணற்ற
பிராணிகளும் தங்குகின்றன
அவைகள் அனைத்திற்கும், இலைகளையும், காய்களையும்
கனிகளையும், குளிர்ந்த காற்றையும் மரம் வழங்குகிறது.
உயிர்களை தின்று வாழும் உயிர்களுக்கு
உயிர்களையும் இருக்கும் இடத்திலேயே
கிடைக்கும்படி செய்திருக்கிறான் இறைவன்.
இவைகளை உணர்த்தும் முகத்தான்
ஈசன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து
ஞானத்தை போதித்தான்.
எல்லா மனிதர்களும்
இந்த உண்மையை மனதில் கொள்வோம்
அன்பான உலகைப் படைப்போம்
ஆனந்தமாக வாழ்வோம்.
பேதங்களை விட்டொழிப்போம்
வேதம் கூறும் உண்மையை
வாழ்வில் கடைபிடிப்போம்.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்.
அனைவரும் ஒருவொருக்கொருவர்
உதவி செய்து கொண்டு பகைமை
ஒழித்து பாங்காய் வாழ்வோம்.
வாழும் வழி! சிறப்பாக வாழும் வழி!
ReplyDeleteஅன்பே அனைத்தும், அறிந்தால் என்றும் இன்பம் என்பதை சிறப்பாக சொன்னீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDelete