Sunday, April 27, 2014

ஒளியும் இருளும்.

ஒளியும் இருளும். 



விளக்கின் அடியில் இருள்
இருள் இருக்கிறது

அதைப் போக்க அந்த
விளக்கினால்  இயலாது

அந்த இருளைப் போக்க
மற்றொரு விளக்கு தேவைப்படும்

ஏன் பல விளக்குகள் கூட
தேவைப்படலாம்.

அதைப்போல்தான்
நமக்குள் ஆன்ம ஒளி  உள்ளது.

அதனால் அஞ்ஞானம் என்னும்
இருளில் மூழ்கியுள்ள ஜீவனின்
அறியாமையை  நேரடியாக அகற்றமுடியாது.

அந்த இருளைப்போக்க வேறொரு
விளக்கு தேவை .அந்த விளக்குதான்
சத்குரு

சத்குரு தன்னுடைய ஞான ஒளியினால்
பல பிறவிகளில் நாம் தேக்கி வைத்த
இறைவனைப் பற்றிய பல பொய்க்
கோட்பாடுகளை அகற்றி நமக்கு
உண்மையை உணர்த்தி ஞானத்தை
அளிக்கிறார்.

சூரியனை மறைத்த மேகம் விலகியவுடன்
சூரியன் பிரகாசிப்பதுபோல் நம்முடைய
ஆன்மாவை மறைத்துள்ள திரை விலகியவுடன்.
உள்ளத்தில் ஒளியுண்டாக
ஆன்ம தரிசனம் பெறுகிறோம்

எப்படி என்றால் விளக்கின் அடியில்
ஒளி  படர்ந்தவுடன்.  விளக்கின் ஒளியும்
அதனுடன் சேர்ந்துகொண்டு
அனைத்தும்ஒளிமயமாய்த்  திகழ்கிறது.

8 comments:

  1. நல்ல ஒரு குரு அமையவும் கொடுப்பினை வேண்டும்!

    ReplyDelete
    Replies
    1. கொடுப்பினை என்றால் என்ன?

      கொடுக்கும் வினை. அதாவது
      தான் உழைத்து நேர்மையான வழியில் ஈட்டிய
      பொருளை இல்லாதவர்க்கு கொடுக்கும் செயல் கொடுப்பினை. (பிறர் சொத்துக்களை தானம் வழங்குவதால் பயன் ஏதும் இல்லை)

      அடுத்தது நல்ல குருவை அளிக்க வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்யவேண்டும்(பொருளை அல்ல)

      இறைவனிடம் பரிபூரண சரணாகதி அடைந்துவிட்டால் அவன் நல்ல குருவை அடையாளம் காட்டுவான். அல்லது அவனே குருவாக வந்து உதவுவான்.

      Delete
  2. Replies
    1. உண்மையை உண்மையால்தான் அடையமுடியும்.
      பொய்யால் முடியாது .ஆனால் பொய்யாது ஒழுகின் உண்மையை அடையமுடியும்.

      Delete
  3. சூரியனை மறைத்த மேகம் விலகியவுடன்
    சூரியன் பிரகாசிப்பதுபோல் நம்முடைய
    ஆன்மாவை மறைத்துள்ள திரை விலகியவுடன்.
    உள்ளத்தில் ஒளியுண்டாக
    ஆன்ம தரிசனம் பெறுகிறோம்
    // அருமையான விளக்கம்! நன்றீ ஐயா!

    ReplyDelete
    Replies
    1. எல்லா விளக்கும் விளக்கல்ல
      சான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு
      என்றார் திருவள்ளுவர்.

      அவர் அறிவுரை சான்றோர்க்கும் ஆன்றோர்க்கும் மட்டும்தான் போலும்.
      மற்றவர்க்கு அல்ல என்று தவறாக
      பொருள்கொண்டுவிட்டனர் போலும்
      அனைத்து மனிதர்களும்.

      அதனால்தான் இந்த உலகம் பொய்யர்களின் கூடாரமாகிவிட்டது.

      Delete