Sunday, May 4, 2014

குருவடி திருவடி

குருவடி திருவடி


குருவடி திருவடி
மலரடி மாணடி
பணிவேன் என்றும்
உன் சேவடி

உண்பதும் உறவு கொள்வதும்
உறங்குவதும் எல்லா உயிர்களுக்கும்
பொதுவான செயல்

இரை  தேடுவதும் இரைப்பையை
நிரப்புவதும் அதற்காக போராடுவதும்
விலங்கின்  தன்மை

ஏதும் செய்வதறியாது மற்ற உயிர்களை
கொன்று தின்று வயிறு வளர்ப்பது
சில பிராணிகளின் இயல்பு.

ஆனால் மனித பிறவியை அடைந்தும்
விலங்கு போல் வாழ்க்கை நடத்துபவர்களை
என்னவென்று சொல்வது?

மதியை இறைவன் அளித்திருந்தும் அதை
மதி சூடிய மகேசனை நினையாது ,மதியைப் பழிக்கும்
முகவொளி கொண்ட மாயவனை வணங்காது
மாயையில் மூழ்கி மாண்டு போகிறது
மாந்தர் கூட்டம்.

அறியாமையை அகற்றி ஆன்மீக நெறியில்
செலுத்த வந்த குருவின் திருவடிகளைப் பற்றுவோம்
பற்றருப்போம். பிறவிக்கடலை கடப்போம் எளிதாக 

2 comments:

  1. கரை சேர இன்னும் பிறவிகள் இருக்கின்றன என்று பொருளோ...

    ReplyDelete