மனதிற்கு உபதேசம்
மனமே நீ எப்போதும்
ஸ்ரீராமபிரானின் திருவடிகளையே நாடு
அதுதான் உன் நிரந்தர வீடு
புலன்களின் பின்னே செல்லாதே
பின் துன்பங்களில் சிக்கி தவிக்காதே
சொந்தங்களும் பந்தங்களும்
விரிக்கும் வலையில் வீழாதே
எதையும் உனதென்று எண்ணாதே
எது வந்தாலும் மன அமைதியை இழக்காதே
வண்ண வண்ண ஜாலங்கள் காட்டும்
நீர்க்குமிழியே இவ்வுலக வாழ்வு
நீர்க் குமிழி வெடித்து வெளியேறும்
உள்ளிருக்கும் காற்று போல்
இந்த உடலில் உள்ளே வந்து போகும் காற்று
வெளியேறிவிடும் சந்தடியில்லாமல்.
இதயத்தில் உறையும் இறைவனைக்
கண்டுகொண்டால் என்றும் துன்பமில்லை
மனமே நீ எப்போதும்
ஸ்ரீராமபிரானின் திருவடிகளையே நாடு
அதுதான் உன் நிரந்தர வீடு
புலன்களின் பின்னே செல்லாதே
பின் துன்பங்களில் சிக்கி தவிக்காதே
சொந்தங்களும் பந்தங்களும்
விரிக்கும் வலையில் வீழாதே
எதையும் உனதென்று எண்ணாதே
எது வந்தாலும் மன அமைதியை இழக்காதே
வண்ண வண்ண ஜாலங்கள் காட்டும்
நீர்க்குமிழியே இவ்வுலக வாழ்வு
நீர்க் குமிழி வெடித்து வெளியேறும்
உள்ளிருக்கும் காற்று போல்
இந்த உடலில் உள்ளே வந்து போகும் காற்று
வெளியேறிவிடும் சந்தடியில்லாமல்.
இதயத்தில் உறையும் இறைவனைக்
கண்டுகொண்டால் என்றும் துன்பமில்லை
//எதையும் உனதென்று எண்ணாதே
ReplyDeleteஎது வந்தாலும் மன அமைதியை இழக்காதே//
சிறப்பான வரிகள். ஓவியம் அருமை.
நன்றி. sriraam
Delete// நீர்க்குமிழியே இவ்வுலக வாழ்வு //
ReplyDelete100% உண்மை...!