Tuesday, May 13, 2014

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி

ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி 


அலர்மேல் மங்கையுடன் உறையும்
அழகிய சிங்கனே அருள் தருவாய்

சோளிங்கபுர  மலையுச்சியில்
நிலை கொண்டவா  என்
இதயத் தாமரையில்
குடி கொள்ள வாராய்

அன்புடன் நினைக்கும் அடியவர்க்கு
துணையாவாய்

அரக்கமனம் கொண்டு
பிறரை துன்புறுத்தும்
பாதகரை அழிக்கும்
கணையாவாய்

மனம் உருகி அழைத்திட்டால்
அருகே இருந்து உதவும்
தோழனாவாய்

அணுவிற்குள்
அணுவாய் இருப்பவனே
உயிருக்குள்
உயிராய் உறைபவனே

உன் காலடியே கதி
என்றிருப்போர்க்கு
காவலனாய்
இருந்து காப்பவனே

கவலைகள் தோன்றிடில்
காணாது போகும்
உந்த திருநாமத்தை
உச்சரித்தால் போதும்

பிறவிக் கடலை
கடக்கும் உபாயம் நீ

பிரகலாதன் கண்டெடுத்த 
ரத்தினம் நீ

தந்தையும்  நீ தாயும் நீ
பந்துவும் நீ அனைத்தும் நீ
அருள்வாய் நீ


3 comments:

  1. அனைவருக்கும் அருள் புரியட்டும் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அருள் புரிவார்

      Delete
  2. பிரகலாதனைக் காரணமாக்கி வந்த ரத்தினம்! அவர் அருளுக்கு நாங்களும் காத்திருக்கிறோம்.

    ReplyDelete