Sunday, January 18, 2015

ராமரசம் 1000-ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் -பகுதி(2)(103)

ராமரசம் 1000


ஸ்ரீ தியாகராஜ  சுவாமிகளின் சிந்தனைகள் -பகுதி(2)(103)



ஆம் ராமரசம் வலைபூ பூக்கும்
1000 மாவது மலர்தான் இந்த பதிவு. 



ஸ்ரீராமனின் திருவடிகளைப் பற்றிய
ராம பக்தனான இவனை அவன்
பெருமைகளைப் பற்றி எழுத சொன்னான்

8.10.2011 அன்று தொடங்கியது முதல் பதிவு.
இவனின் அனுபவங்கள், அவனை
ஆராதித்து அளப்பரிய ஆனந்தத்தை
அடைந்த மகான்களின் அனுபவங்கள்,
என பூக்கள் மலர்ந்து மணம் பரப்பியதை
படித்து சுவைத்து இன்புற்ற வாசகர்களும்
பக்தர்களும் ஆனந்தம் அடைந்த அனைவருக்கும்
இந்த 1000 மாவது பூ சமர்ப்பணம்.



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்

நமக்கு வேண்டியதெல்லாம் அந்த
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் கருணையைத்
தவிர வேறென்ன வேண்டும்.?

ஸ்ரீ தியாகராஜ  சுவாமிகளின் சிந்தனைகள் -பகுதி(2)(103)

இந்த பதிவை ஸ்ரீ தியாகராஜா சுவாமியின் 
மோகன ராகத்தில்,ஆதி தாளத்தில் அமைந்துள்ள 
(கீர்த்தனை-626) 'தயராநீ-தராநீ தாசரதீ ராமா "
என்ற கீர்த்தனையின் மூலமாக ஸ்ரீராமனை அனைவரும் வேண்டி 
இன்பம் பெறுவோமாக. 

உனது கருணை வரட்டும்!
உனது தயை வருக! தசரதராமனே!

ரகு வீரனே என் மகிழ்ச்சியை விவரிக்க இயலுமா?

நினைத்தால் என்னுடல் புள காங்கிதமடைகிறது.
உன்னைக் காணும் ஆனந்தத்தால் கண்ணீரால் என் கண்கள் குளமாகின்றன

உன் மீது நான் பக்தி பூண்டபோது இவ்வுலகமே துரும்பாக ஆகிவிடுகிறது
உன் திருவடிகளைத் தழுவும்போது மெய்மறந்து போகின்றேன்
நீ என் அருகிலிருந்தால் என் கவலைகள் ஒழிகின்றன

உன் மர்மத்தை அறியாதவர்களுடன் (ஹரியை அறியாதவர்களுடன்)
நான் கூடுவதை என் வினைப்பயன் என்றே கருதுகிறேன்(இரவும் பகலும் என்னுள்ளத்தில்  உன் நாமம் ஒலிப்பதால் அவர்களின் தொடர்பு முற்றிலும் அகன்றுவிட்டது உண்மை)

எனக்காகவே நீ ராம அவதாரம் எடுத்தனையோ?(நிச்சயமாக)
என் போன்ற அடியார்களை காப்பதற்கே புறப்பட்டாயோ (முக்காலும் உண்மை)

மும்மூர்த்திகளுக்கும் ஆதி தெய்வம் நீயே?(நீயே உன் அடி பணிந்தவர்களை 
காக்கும் தெய்வம்,)(அடியார்களுக்கு அல்லல்தந்த அசுரக் கூட்டங்களை மாய்த்த தெய்வம் )(உன் திருவடியே கதி என்று நம்பியவர்களை உன்னோடு சேர்த்துக்கொண்ட கருணை தெய்வம்) 

ஸ்ரீ தியாகராஜனுக்கும் உயிர்த்தோழனும் நீயே (அவருக்கு மட்டுமல்ல எனக்கும்தான்)(உன்னை உள்ளன்போடு நாடும் அனைவருக்கும்தான்)



6 comments:

  1. மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. ஆயிரமாவது பதிவு!..

    மேலும் மேலும் தழைக்க வேண்டும்.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  3. அன்புள்ள ஸ்ரீராமரின் தாஸாதி தாஸனான

    என் அன்புக்குரிய அண்ணாவுக்கு ஆயிரம் நமஸ்காரங்கள்.

    பட்டாபிராம அண்ணா நீடூழி வாழ்க !

    பட்டாபிராம அண்ணாவின் திருநாமம் வாழ்க !!

    ஸ்ரீராமர் க்ருபையால் ஆயிரமாவது பதிவு அசத்தலாக அமர்க்களமாக அமைந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி அண்ணா.

    அன்புத்தம்பி கோபு

    ReplyDelete
  4. சிறுகதைப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வெளி நாட்டில் பயணம் மேற்கொண்டு வெற்றிக் களிப்பில் திளைக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள். அண்ணனை நினைவு கூர்ந்து ஆயிரமாவது பதிவிற்கு வந்து வாழ்த்து கூறியதற்கு நன்றி.

    ReplyDelete