Thursday, January 8, 2015

ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை )பாசுரம் 25


ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(25)




பாடல்-25
ஒருத்தி மகனாய் பிறந்து 
ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து  வளர 
தரிக்கிலானாகி தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து 
கஞ்சன் வயிற்றில் நின்ற நெடுமாலே 
உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் 
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி 
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ  ரெம்பாவாய் 
விளக்கம் 
ஒரு இரவில் தேவகியின் மைந்தனாகப் பிறந்து 
அதே இரவில் யசோதையின் மகனாக 
ஒளிந்து வளர்ந்தவனே 
இதை அறிந்த கம்சன் உன்னைக் கொல்ல  நினைத்தபோது அவனது வயிற்றில் நெருப்பாக நின்ற பெருமாளே உன்னிடம் நாங்கள் 
உன்னையே கேட்டு யாசித்து வந்துளோம் 
எங்கள் வேண்டுகோளை ஏற்று உன்னை நீ  எங்களுக்கு தந்தாயானால்
திருமகளையும் உன்னையும் போற்றிப் பாடி மகிழ்வோம்  

தேவகிக்கு வசுதேவருடன் திருமணம் நடந்து அவள் வசுதேவரின் வீட்டிற்கு செல்லும்போது கம்சன் தேரை ஒட்டி செல்கிறான். அப்போது தேவகிக்கு  பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனின் உயிரை மாய்க்கும் என்று அசரீரி சொல்வதை கேட்ட கம்சன் தேவகியை கொல்லத்  துணிகிறான். வசுதேவர் அவனை சாந்தப்படுத்தி அவளைக் கொல்லாதே நான் பிறக்கும்  8 குழந்தைகளையும் உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன் என்று சொன்னவுடன் அவர்களை உயிரோடு விட்டு விடுகிறான். இருந்தாலும் அவர்களை நம்பாமல் சிறையில் அடைத்து விடுகிறான். 
7 குழந்தைகளை கொன்று விடுகிறான். 8 ஆவது குழந்தையாக் பிறப்பெடுக்கும் கண்ணபிரான் பிறந்தவுடன் 


யாரும் அறியாமல் கோகுலம் சென்று விடுகிறான்.கண்ணனுக்கு பதிலாக அங்கு இருந்த யோகமாயை எட்டாவது குழந்தை என எண்ணி அதை கம்சன் கொல்ல  முனையும்போது அது அவன் கையில் அகப்படாமல் மறைவதுடன் ஒரு செய்தியையும் விட்டுவிட்டு செல்கிறது.


 ஏ மூடனே உன்னை கொல்ல வந்த  குழந்தை கோகுலத்தில் வளர்கிறது என்று அவன் வயிற்றில் பயம் என்னும் நெருப்பை தோற்றுவிட்டு மறைகிறது.

எட்டெழுத்து மந்திரத்தின் மகிமையை அறியாத கம்சன் போன்ற மூடர்கள்தான் மரணத்தைக் கண்டு பயப்படுவார்கள். 

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் எட்டெழுத்து மந்திரத்தின் நாயகனாகிய நாராயணனின் தாள்களை பற்றிக்கொள்ளவேண்டும். 

அப்படிப் பற்றிகொண்டால். மாயையிலிருந்து விடுபடலாம்
 எப்படிப்பட்ட ஆபத்துக்கள் வந்தாலும்  கண்ணின் கருணையால் நாம் காப்பாற்றப்படுவோம் என்பதை தெள்ள தெளிவாக உணர்ந்துகொண்ட  பக்தர்கள்  மரண பயமில்லாமல் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். 

1 comment: