மார்கழி என்றதுமே .....
மார்கழி என்றதுமே மனதில்
மாமாயன் கண்ணின் நினைவு
வருகிறது
மூவுலகை தன் திருவடியால் அளந்த
அந்த உலகளந்த உத்தமனின் பேர் பாட
நம்மை அதிகாலையில் அழைக்க வரும்
மங்கை நல்லாள், ஆண்டாளின்
அமுத மொழி நம் காதில்
விழுகிறது
விழிக்கும் நேரமெல்லாம் வெறுமனே ஊர் சுற்றி
வீண் கதைகள் பேசி திரிந்து கண்டதை உண்டு
களைத்துப் போய் கண்ணுறங்கும்
நம்மையெல்லாம் கடைதேற்ற
மனம் கொண்டு மண் மடந்தை
கோதையாக அவதரித்ததை
எண்ணும்போது எடுத்த இப்பிறவி
வீண் போகவில்லை என்று
மனதில் உற்சாகபிறக்குது
காமப் பேய்கள் உண்ணும் பிச்சா என்னும்
உணவின் மீது மோகம் கொண்டு திரிவோரே
மார்கழி மாதத்தில்அதிகாலையில் எழுந்திருந்து
ஆனந்தமாக குளிர் நீரில் நீராடி குவலயத்தைக் காக்கும்
கோமான் கண்ணனின் கோயில் சென்று அவன் புகழ் பாடி
அவன் அருளோடு கிடைக்கும் பொங்கல் பிரசாதத்தை
உண்டு உடல் நலம் காத்திடுவீர்.
வேதத்தின் சாரத்தை தமிழில் தந்தவள்
வேண்டாத குணங்களை விடுபட செய்பவள்
வேண்டும் வரங்களை தந்திடும்
வேத நர்ராயநணனை ஆயுள் முழுவதும்
துதித்து மகிழ திருப்பாவை பாடல்களை தந்தவள்
தான் இறைவனோடு கலந்து இன்புற்ற நிலையை
நமக்கும் காட்டி தந்தவள்
எப்போதும்எந்நாளும் ,எந்நேரமும்
அடியார்களின் நலனை விரும்பும்
ஸ்ரீ ஆண்டாளின் புகழ் பாடுவோம்.
உள்ளத்தில் வஞ்சம் வைத்து உதட்டில்
புன்னகைஉடன் புறத்தே திரியும்
மனிதர்களின் கூட்டுறவை தவிர்ப்போம்
உலகளந்த பெருமானை, திருவேங்கட மலையின் மேல்
நின்று நம்மையெல்லாம் வேங்கடவனை ,துயர் போக்கும்
தூமணி வண்ணனை உள்ளதைக் கொண்டு துதிக்கும்
முனிவர்களும், யோகிகளும் காட்டும் வழியை
நாடி நற்கதி அடைவோம்.
மார்கழி என்றதுமே மனதில்
மாமாயன் கண்ணின் நினைவு
வருகிறது
மூவுலகை தன் திருவடியால் அளந்த
அந்த உலகளந்த உத்தமனின் பேர் பாட
நம்மை அதிகாலையில் அழைக்க வரும்
மங்கை நல்லாள், ஆண்டாளின்
அமுத மொழி நம் காதில்
விழுகிறது
விழிக்கும் நேரமெல்லாம் வெறுமனே ஊர் சுற்றி
வீண் கதைகள் பேசி திரிந்து கண்டதை உண்டு
களைத்துப் போய் கண்ணுறங்கும்
நம்மையெல்லாம் கடைதேற்ற
மனம் கொண்டு மண் மடந்தை
கோதையாக அவதரித்ததை
எண்ணும்போது எடுத்த இப்பிறவி
வீண் போகவில்லை என்று
மனதில் உற்சாகபிறக்குது
காமப் பேய்கள் உண்ணும் பிச்சா என்னும்
உணவின் மீது மோகம் கொண்டு திரிவோரே
மார்கழி மாதத்தில்அதிகாலையில் எழுந்திருந்து
ஆனந்தமாக குளிர் நீரில் நீராடி குவலயத்தைக் காக்கும்
கோமான் கண்ணனின் கோயில் சென்று அவன் புகழ் பாடி
அவன் அருளோடு கிடைக்கும் பொங்கல் பிரசாதத்தை
உண்டு உடல் நலம் காத்திடுவீர்.
வேதத்தின் சாரத்தை தமிழில் தந்தவள்
வேண்டாத குணங்களை விடுபட செய்பவள்
வேண்டும் வரங்களை தந்திடும்
வேத நர்ராயநணனை ஆயுள் முழுவதும்
துதித்து மகிழ திருப்பாவை பாடல்களை தந்தவள்
தான் இறைவனோடு கலந்து இன்புற்ற நிலையை
நமக்கும் காட்டி தந்தவள்
எப்போதும்எந்நாளும் ,எந்நேரமும்
அடியார்களின் நலனை விரும்பும்
ஸ்ரீ ஆண்டாளின் புகழ் பாடுவோம்.
உள்ளத்தில் வஞ்சம் வைத்து உதட்டில்
புன்னகைஉடன் புறத்தே திரியும்
மனிதர்களின் கூட்டுறவை தவிர்ப்போம்
உலகளந்த பெருமானை, திருவேங்கட மலையின் மேல்
நின்று நம்மையெல்லாம் வேங்கடவனை ,துயர் போக்கும்
தூமணி வண்ணனை உள்ளதைக் கொண்டு துதிக்கும்
முனிவர்களும், யோகிகளும் காட்டும் வழியை
நாடி நற்கதி அடைவோம்.
நீங்கள் சொல்லும் மனிதர்களின் கூட்டுறவை தவிர்க்க முடிவதில்லை ஐயா...
ReplyDeleteஇவ்வுலகில்முயன்றால் முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை
Delete