இசையும் நானும் (4)
மவுதார்கன் இசையில் என்னுடைய
நான்காவது பாடல்.
தமிழ் பாடல்.கண்ணன் மீது
கண்ணே என் கண்மணியே
கண்ணனே கண்வளராய் (க)
மண்ணுலகில் என் வாழ்வு
வளம் பெற வந்துதித்த (க)
குயிலிசை குழலோசை உன்
கொஞ்சு மொழிக்கு இணையாமோ
கொண்ட மன சஞ்சலங்கள் பஞ்சாய்
பறந்திடுமே (தாலேலோ..)
தேடாத என் நிதியே
தெவிட்டா தெள்ளமுதே
வாடாத மென் மலரே
மனதுள் இனிக்கும் தனி தேனே (தாலேலோ) (கண்ணே)
இந்த பாடலை மும்பை இசைக்குயில் ஜெயஸ்ரீ மிக
இனிமையாக பாடியதை கேட்ட பிறகு நானும் பாட முயற்சி செய்தேன்.
பாடவும் மட்டுமல்லாமல் மவுத்தார்கனிலும் இசைக்க முயற்சி செய்தேன்.
அந்த பாடல் கீழ்கண்ட இணைப்பில் கேட்கலாம். (குயிலோடு இவனால் போட்டி போட இயலாது -இருந்தும் காக்கையின் குரலிலும் ஒரு இனிமை
இருப்பதை மறுக்க முடியாது என்பது என் தாழ்மையான கருத்து)
https://www.youtube.com/watch?v=706yugfKIzk&feature=youtu.be
அருமை ஐயா...
ReplyDeleteதொடருங்கள்...