ஸ்ரீ ஆண்டாள் காட்டும் அருட்பாதை (பாசுரம்(27)
பாடல்-27
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு
யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடு செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்
விளக்கம்
ஜீவாத்மாவாகிய உயிர்கள்
பரமாத்மாமிடமிருந்து மாயை வசப்பட்டு
பிரிந்து வந்துவிட்டது .
வந்தது மட்டுமல்லாமல் புலனின்பங்களை
நாடி அதிலேயே மூழ்கிபோய்
இன்ப துன்பங்களில் சிக்கிக்கொண்டு
தான் யார் என்பதையே மறந்துவிட்டது.
மீண்டும் வினைகளை அனுபவிக்க
பிறப்பதும் மீண்டும் மரணம் என்னும்
உறக்கத்தில் ஆழ்வதும்
நீண்ட உறக்கத்தில் ஆழ்வதுமாகி
துன்பப்படிருக்கும் ஆன்மாக்களை
ஆண்டாள் எழுப்பி அவர்களின்
உண்மை நிலையை அறிய செய்து
இந்த சுழலிலிருந்து விடுபடும்
வழியைக் காட்டி அருளினாள்
அப்படி இறைவனுடன் கூடாமல்
அழியும் உயிர்களோடு கூடி கிடக்கும்
உயிர்களின் அறியாமையை அழித்து
நற்கதியை தந்து உயிர்களைக்
கடைதேற்றுபவன் கோவிந்தன்
அப்படிப்பட்ட கருணாமூர்த்தியான
திருவேங்கடவனே
உன் புகழைப் பாடி பரவுவதால்
உன் அருள் கிட்டுமாகையாதலால்
நாங்கள் நன்றாக அலங்கரித்துக்கொண்டு
புத்தாடை உடுத்திக்கொண்டு
கோகுலத்து வள்ளல் பெரும் பசுக்கள் தந்த
பாலில் நெய் சேர்த்து அமுது செய்து
அனைவரும் கூடி உண்டு இன்புறுவோம்.
உயிர்கள் உறவுகளோடு கூடி
அன்பால் இணைந்து இன்புற்று வாழ வேண்டும்.
இருந்தும் அந்த இன்பம் நிலையற்றது.
நிலைத்த இன்பம் பெறவேண்டுமானால்
ஜீவாத்மாவும் பரமாத்வாவாகிய அரங்கனுடன் கூடி
மீண்டும்பிறவா நிலை எய்தி என்று
அழியா இன்பம் பெறவேண்டும்.
அதனை விலக்கிடுவான் கண்ணன் என்றான்
மஹாகவி பாரதி
யாருக்கு?
தினமும் அவன் சன்னதியில்
விளக்கிட்டு வணங்குபவர்களுக்கு
ஜோதியை தினமும் தரிசிபவர்களுக்கு ஜோ (ஒளி ) திடம்
(நம்பிக்கை) தானே ஏற்படும்
ஜோதிடர்கள் பின்னே அலையவேண்டியதில்லை
இறைவனை நம்பிக் கெட்டவர்கள் எவருமில்லை.
அவன் அளிக்கும் சோதனைகளுக்கு அஞ்சி பூதனை,கம்சன், ராவணன், போன்றவர்கள் பின்னால் போனவர்கள்தான் அழிந்தார்கள்.
நாராயண பரஞ்சோதி என்னும் ஜோதி சுடர்
நினைப்பவர் உள்ளத்தில் "தோற்றமாய் நின்ற சுடரே" என்று ஸ்ரீஆண்டாளின் கூற்றை மெய்யாக்கும்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஜோதி சுடர் விளக்கமும் அருமை ஐயா...
ReplyDelete