மதம் பிடித்து
அலைவதால் என்ன பயன்?
இன்று பெரும்பாலான மக்கள்
ஏதாவதொரு மதத்தை சார்ந்து
நிற்கிறார்கள்.
எந்த மதங்களிலும் பிடிப்பு இல்லாமல்
காலத்தை ஓட்டுபவர்களும் உண்டு
ஏதாவது ஒரு மத அடையாளத்தை
வெளிக்காட்டிக்கொண்டு திரிவதில்
அனைவருக்கும் ஒரு வெறியே உண்டு.
மத நெறிகளைப் பின்பற்றாமல் வெறி பிடித்து
அலையும் கூட்டம் எல்லா மதங்களிலும்
உண்டு.
மதம் பிடித்து அலையும் மனதை
அமைதியடைய செய்து உண்மையை
நோக்கிப் பயணம் செய்பவர்கள் மிக குறைவே.
கோட்பாடுகளை கடைபிடிப்பதாகக் விளம்பரம் செய்து
கூப்பாடுகள். போடும் கூட்டம்தான் இன்று உலகில்
அதிகம்.
தங்கள் மதக் கொள்கைகளை விளம்பரம் செய்து
மக்களை மூளை சலவை செய்யும்.
சலவைத் தொழிலாளர்கள்தான்
இன்று பெருகிவிட்டார்கள்.
அன்பே வடிவான இறைவனை அந்த அன்பை
தங்கள் வாழ்வில் கடைபிடித்தால் மட்டுமே
உயரிய தெய்வீக உணர்வை நிரந்தரமாக அடைந்து
தானும் நிம்மதியாகவும், மற்றவர்களோடு
இணக்கத்துடன் வாழமுடியும்.
அதற்கு யாரும் தயாரில்லை.
அந்நிலை வரும் வரை
இந்த மத மோதல்கள்
இருந்துகொண்டு தான் இருக்கும்.
இந்த உலகத்தினர் அனைவருக்கும் ஒரே
ஆதவன் தான் ஒளி தருகின்றான்.
வாழ வைக்கின்றான்.
ஆனாலும் ஒவ்வொரு மொழி பேசுபவர்களாலும்
வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றான்.
அதுபோல் வெவ்வேறு பெயர்களில்
அழைக்கப்படும் இறைவனும் ஒன்றே.
வடிவமில்லாத அவன் கணக்கற்ற
வடிவங்களில் தோன்றினாலும்
அவன் ஒன்றே .
இந்த உண்மையை மனித சமூகம் உணரும்வரை.
இந்த உலகம் இப்படித்தான் இருக்கும்.
கடலில் அலைகள் வந்து போய்க்கொண்டிருந்தாலும்
அதை பயன்படுத்துபவர்கள்
அதைப் பொருட்படுத்துவதில்லை.
அதுபோல்தான் ஆத்ம ஞானம் பெற்றவர்களும்
மக்களிடையே எந்த வேறுபாடுகளையும் பார்ப்பதில்லை.
அவ்வை கூறியுள்ளதுபோல்
"ஒன்றாக காண்பதே காட்சி" என்ற
உயர்ந்த நிலையில் வாழ்ந்து இந்த
உலகிற்கு தொண்டாற்றுகிறார்கள்.
பகவான் ரமண மகரிஷியிடம்
உலகம் முழுவதும் இருந்து ,
மக்கள் அனைத்து வேறுபாடுகளையும்
கடந்து வந்து ஞானம் பெற்று சென்றதே இதற்கு சாட்சி/
அலைவதால் என்ன பயன்?
இன்று பெரும்பாலான மக்கள்
ஏதாவதொரு மதத்தை சார்ந்து
நிற்கிறார்கள்.
எந்த மதங்களிலும் பிடிப்பு இல்லாமல்
காலத்தை ஓட்டுபவர்களும் உண்டு
ஏதாவது ஒரு மத அடையாளத்தை
வெளிக்காட்டிக்கொண்டு திரிவதில்
அனைவருக்கும் ஒரு வெறியே உண்டு.
மத நெறிகளைப் பின்பற்றாமல் வெறி பிடித்து
அலையும் கூட்டம் எல்லா மதங்களிலும்
உண்டு.
மதம் பிடித்து அலையும் மனதை
அமைதியடைய செய்து உண்மையை
நோக்கிப் பயணம் செய்பவர்கள் மிக குறைவே.
கோட்பாடுகளை கடைபிடிப்பதாகக் விளம்பரம் செய்து
கூப்பாடுகள். போடும் கூட்டம்தான் இன்று உலகில்
அதிகம்.
தங்கள் மதக் கொள்கைகளை விளம்பரம் செய்து
மக்களை மூளை சலவை செய்யும்.
சலவைத் தொழிலாளர்கள்தான்
இன்று பெருகிவிட்டார்கள்.
அன்பே வடிவான இறைவனை அந்த அன்பை
தங்கள் வாழ்வில் கடைபிடித்தால் மட்டுமே
உயரிய தெய்வீக உணர்வை நிரந்தரமாக அடைந்து
தானும் நிம்மதியாகவும், மற்றவர்களோடு
இணக்கத்துடன் வாழமுடியும்.
அதற்கு யாரும் தயாரில்லை.
அந்நிலை வரும் வரை
இந்த மத மோதல்கள்
இருந்துகொண்டு தான் இருக்கும்.
இந்த உலகத்தினர் அனைவருக்கும் ஒரே
ஆதவன் தான் ஒளி தருகின்றான்.
வாழ வைக்கின்றான்.
ஆனாலும் ஒவ்வொரு மொழி பேசுபவர்களாலும்
வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றான்.
அதுபோல் வெவ்வேறு பெயர்களில்
அழைக்கப்படும் இறைவனும் ஒன்றே.
வடிவமில்லாத அவன் கணக்கற்ற
வடிவங்களில் தோன்றினாலும்
அவன் ஒன்றே .
இந்த உண்மையை மனித சமூகம் உணரும்வரை.
இந்த உலகம் இப்படித்தான் இருக்கும்.
கடலில் அலைகள் வந்து போய்க்கொண்டிருந்தாலும்
அதை பயன்படுத்துபவர்கள்
அதைப் பொருட்படுத்துவதில்லை.
அதுபோல்தான் ஆத்ம ஞானம் பெற்றவர்களும்
மக்களிடையே எந்த வேறுபாடுகளையும் பார்ப்பதில்லை.
அவ்வை கூறியுள்ளதுபோல்
"ஒன்றாக காண்பதே காட்சி" என்ற
உயர்ந்த நிலையில் வாழ்ந்து இந்த
உலகிற்கு தொண்டாற்றுகிறார்கள்.
பகவான் ரமண மகரிஷியிடம்
உலகம் முழுவதும் இருந்து ,
மக்கள் அனைத்து வேறுபாடுகளையும்
கடந்து வந்து ஞானம் பெற்று சென்றதே இதற்கு சாட்சி/
ஒன்றாக காண்பதே காட்சி - அருமை...
ReplyDelete