Saturday, January 3, 2015

துன்பங்களையும் தோல்விகளையும் கண்டு துவளாதீர்


துன்பங்களையும்  தோல்விகளையும் 
கண்டு துவளாதீர் 

பிறவியென்னும் பெருங்கடலில்
விழுந்துவிட்ட ஜீவர்காள்
கடலைக் கடக்க உபாயம்
காணாது தவிப்பதேன்?

தேனினுமினிய கண்ணன் என்னும்
நாமம் கைவசமிருக்க அதைக்
தோணியாய்க்  கொண்டு
கடலை எளிதாக கடக்க
முயலாததேன்?

மூடியுள்ள எரிமலைக்குள்
ஒளியும் அனலும்  கொண்ட
குழம்பிருக்கும் .எரிமலை வெடித்தால்
அது தானே வெளி வரும்

ஊனுடம்பான நம் உடல் என்னும்
எரிமலைக்குள் எம்பெருமான் ஒளியாய்,ஒலியாய்
இருக்கின்றான்

பக்தியுடன் அவன் பாதம் பற்றினால்
சக்தியோடு அவன் வெளிப்படுவான்
பாவ சுமைகளால் மூடப்பட்ட நம் மனதை
உடைத்துக்கொண்டு

நரசிங்கனைப்போல் தூணிலிருந்து
வெளிப்படுவான் நாவால் அவன் நாமத்தை
துதித்துக் கொண்டிருந்தால்

கவலைகள் என்னும் குட்டையில்
மட்டைகள் போல் கிடந்து மக்கி
மடியாதீர்.




துன்பங்களையும்  தோல்விகளையும்
கண்டு துவளாதீர்  தொடர்ந்து ராம நாமம்
சொல்வீர்.

ராமனின் திருவடிகளில் தஞ்சம் அடைந்து
அன்னையின் அருளால் நிலையான
பதம் அடைந்து நம்மையெல்லாம்
காக்க காத்திருக்கும் அனுமனின்
பாதம் பணிந்து அவனைப் போல்
பக்தியில் நிலைத்திருப்பீர்.


No comments:

Post a Comment