Saturday, November 2, 2013

எதற்கு இந்த மானிட பிறவி?

எதற்கு இந்த மானிட பிறவி?



நாயாய் அலையும் என் மனமே
நீ சேயாய் கிடந்தபோது
இருந்த மனமெங்கே?

அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தாய்
உன் அழகிய கண்களினாலே



அதை ரசித்து மகிழ்ந்தார் உன்னை
பெற்றோரும் மற்றோரும்




பேசத் தெரியாத உன் குரலின் மழலைக்
கேட்டு பலகாலம் பேசித் திரிந்தனர்
வெகுநாட்கள்

காலம் மாறியது.
நீ பேசாமல் கொஞ்சம் வாயை
மூடமாட்டாயா என்று அதட்டல்
போட்டது உன்னை சுற்றியிருந்த
அதே கூட்டம்.

குழந்தையாய் நீ இருந்தபோது உன்
முகத்தில் தவழ்ந்த அழகிய
புன்னகை எங்கே?

அதற்காக காத்திருந்து
கண்டு மகிழ்ந்த
சுற்றம் எங்கே?



அன்று உணவுக்காக அழுதாய்,




உடலை வருத்தும் பிணிகளால்
உண்டாகியவலிகளுக்காக  அழுதாய்

இன்றோ எதற்கெடுத்தாலும் அழுகிறாய்
அது ஏன் ?

இல்லையே என்று அழுகிறாய்
இருந்தும் அழுகிறாய்

உறவை நினைத்து அழுகிறாய்
பிரிவை  நினைத்து அழுகிறாய்



செய்த தவற்றை
நினைத்து அழுகிறாய்

யாராவது உன் மனதை
காயப்படுத்தினால் அழுகிறாய்.

ஆனால் இவைஅனைத்தும் நீ 
பிறருக்கு செய்தால் மட்டும் 
அழுவதில்லையே,அது ஏன் ?



உன் சுற்றத்திர்க்காக அழுகிறாய்
உன் நட்புக்காக அழுகிறாய்

உனக்காக நீ 
அழப்போவது எப்போது?

அலைகடலில் அடுத்தடுத்து 
அலைகள் வந்த வண்ண மிருக்கும்



அதுபோல்தான் மனம் என்னும் கடலில் 
எண்ணங்கள் என்னும் அலைகள்
வந்துகொண்டும் சென்றுகொண்டும்தான் 
இருக்கும் இந்த உடலில் மூச்சுக்  காற்று வந்து போய்க்கொண்டிருக்கும் வரை 

காற்றின் வேகத்தை பொறுத்து
அலைகளின் வேகமும் மாறுவதுபோல் 
இந்த உடலிலும் மூச்சு காற்றுள்ள வரை 
எண்ணங்களின் வேகமும் மாறும் 
என்பதை அறியாயோ?

மூச்சு நின்று போனால்
பேச்சும்  நின்றுபோகும்.

எண்ணங்களில் தெளிவிருந்தால் 
வாழ்வில் ஏற்றமுண்டு 

எதிர்காலம் என்று
ஒன்று உண்டு

வீணே அலைவதால் பயனொன்றுமில்லை
வீணர்களில் பேச்சைக் கேட்டு



மனம் அமைதியுற்றால் நம்மை படைத்த 
மகேசனை அறிந்து உய்யலாம்





மனம் அமைதியின்றி வாழ்ந்து
மண்டூகம்போல் காலன் என்னும்
பாம்புக்கு இரையாகி மண்ணுக்குள்
போவதற்கா இந்த கிடைத்தற்கரிய
மானிடப் பிறவியை அடைந்தோம் ?

pic-courtesy-google images.  

13 comments:

  1. சிந்திக்க வைத்த (வேண்டிய) கேள்விகள் ஐயா...

    ReplyDelete
  2. மண்டூகம் போல் தேவையே இல்லாமல் கத்தி கத்தி வாழ்ந்தது போதும்.
    ஆமைபோல் எல்லாவற்றையும் உள்ளே இழுத்துக்கொண்டு வாழ்.பிறர்
    அடித்தாலும் "மேல் ஓட்டில்தான் விழும்..வலிக்காது :(எனக்கு நானே
    சொல்லிக்கொள்வது) நன்றி...நமஸ்காரம்.

    ReplyDelete
  3. அருமையான ஆக்கம் அண்ணா! அற்புதமான படங்கள் அண்ணா!!

    இருப்பினும் ஓர் சிறு எழுத்துப்பிழை கண்களில் பட்டதே அண்ணா!

    இதோ இங்கே:

    //எதிர்காலம் என்று ஒன்று ஒண்டு//

    கடைசியில் உள்ள ’ஒண்டு’ என்பதை ‘உண்டு” என்று ஆக்குங்கள் அண்ணா !

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. தைலேஷு லக்ஷ்மி
      ஜலேஷு கங்கா
      என்ற ச்லொகத்தின்படி
      வீட்டு குழாய் தண்ணீரை கங்கா
      ஜலமாக நினைத்துக்கொண்டு
      ஸ்நானம் பண்ணினேன்.

      அவ்வளவுதான். மற்றபடி
      இவன் எங்கும் செல்வது கிடையாது.

      "ஒண்டு" என்று போட்டதற்கு காரணம்
      நீங்கள் சரியாக ப்ரூப் பார்க்கிறீர்களா
      என்பதை கண்டறியத்தான் "

      சந்தோஷம் VGK

      Delete
    2. // மற்றபடி இவன் எங்கும் செல்வது கிடையாது. //

      இது விஷயத்தில் மட்டும், இப்போது நான் உங்களின் அண்ணா தான். மஹா மஹா சோம்பேறி ஆகிவிட்டேன். But really enjoying the Life ...... ;)))))

      //"ஒண்டு" என்று போட்டதற்கு காரணம் நீங்கள் சரியாக ப்ரூப் பார்க்கிறீர்களா என்பதை கண்டறியத்தான் "//

      ஆஹா,

      “மாறியது ..... நெஞ்சம் ...... மாற்றியவர் ..... யாரோ ......
      காரிகையின் உள்ளம் ...... காண வருவாரோ”

      என்ற அழகான பாட்டு “பணமா பாசமா” என்ற படத்தில் வருவது ஏனோ ஞாபகம் வந்தது.

      என் குறைகள் / தவறுகள் எனக்குத்தெரியாமலேயே போய் விடுகிறது. யாரும் எடுத்துச் சொல்வதோ என் கவனத்திற்கு அதைக் கொண்டு வருவதோ இல்லை.பிறகு நானாகவே பார்த்து கண்ணில் பட்டால் திருத்துவதும் உண்டு.

      ஆனால் பிறர் எழுத்துக்களில் உள்ள எழுத்துப்பிழைகள் உடனே என் கண்களில் பட்டு உறுத்துவது உண்டு. ;(

      அதனால் கோச்சுக்காமல் என்னை [இந்தப்பொடியனை[ மன்னிச்சுக்கோங்கோ அண்ணா ...... ப்ளீஸ்.

      VGK

      Delete
    3. தமிழில் ஒரு பழமொழி வழக்கில் உண்டு
      ஐஞ்சுக்கு இரண்டு பழுதில்லாமல் என்பார்கள். அதுபோல்.ஒண்டு என்று நான் எழுதவில்லை
      நான் உண்டு என்றுதான் எழுதினாலும் கணினி
      அது எந்த வார்த்தையை நினைக்கிறதோ அதை போட்டுவிடுகிறது சில சமயம். இந்த பதிவை நான் எழுதியபோது இரவு 2.45 மணி. அதனால் கணினி செய்த தவறை கவனிக்கவில்லை. தற்போது சரி செய்து விட்டேன் கவனிக்கவும்.

      Delete
  4. //குழந்தையாய் நீ இருந்தபோது உன் முகத்தில் தவழ்ந்த அழகிய புன்னகை எங்கே?//

    ;)))))

    அதைத்தான் நாய் அலைச்சல் அலைந்து நானும் தேடுகிறேன். ஆனால் இன்னும் கிடைக்கவில்லையே ! ;(

    கங்கா ஸ்நானம் ஆச்சா. சந்தோஷம் அண்ணா. ;)

    ReplyDelete
    Replies
    1. அதிர்ஷ்டவசமாக என்னுடைய குழந்தை மூஞ்சியை பத்திரமாக வைத்திருக்கிறேன். அதை பாருங்கோ..

      Delete
    2. அருமை. மிகவும் அருமை.

      அன்று புலிக்குட்டி பொம்மைகளுடன் விளையாடியுள்ள என் அன்பின் அண்ணா, இன்று சிங்கமாக ...

      சீறும் சிங்கமாக எழுத்துலகில் .....

      http://gopu1949.blogspot.in/2013/09/45-6-6.html

      அச்சா ... பஹூத் அச்சா. வாழ்த்துகள்.

      Delete
    3. ஆம் இவன் சிம்ம ராசிதான்
      உங்கள் கணிப்பு சரியே
      பாராட்டுக்கள்

      Delete