Wednesday, November 27, 2013

பத்மாவதி தாயே சரணம்

பத்மாவதி   தாயே   சரணம்  

ஹரியின்  இதயத்திற்கு  
அருகில் வாசம் செய்யும்   ஹரிணியே

அடியவர்களின்   கூக்குரலை
அக்கறையோடு  கேட்டு
ஆவன  செய்யும்  நாரணியே

இல்லற   வாழ்வில்  இல்லை
என்ற சொல்லை இல்லாது செய்து
இனிய அறம் வளர்க்க உதவும்  இலக்குமியே

இல்லத்தில் அஷ்ட லக்ஷ்மியாய்
வந்தமர்ந்து  இணையில்லா  நலன்களை  தந்து
இன்ப வாழ்வைத் தரும் ஈடு  இணையில்லா
கற்பகத்தருவே  

ஏற்றிய   தீபத்தில்  சுடராய்  ஒளி
வீசி  அஞ்ஞான   இருளை
ஓட்டும் தீப லக்ஷ்மியே

அறிவாய்  நிறைந்து  தெளிவாய்
சிந்தித்து   வெற்றியுடன்
செயல்பட  வைக்கும்  வித்யா லக்ஷ்மியே

பயம் போக்கி அபயம் தந்து
அமைதியும் ஆனந்தமும்
தரும் வீர லக்ஷ்மியே

எட்டெழுத்து  மந்திரத்தை  கொண்டு
எட்டா  பொருளையும்
எட்டும்படி  செய்பவளே

எண்ணமெல்லாம்  நிறைந்து
வண்ணம்போல்  வளமான
வாழ்வு  அருளுபவளே .

திருவேங்கடத்தில்  நின்றருளும்
வெங்கடேசனின்  திருவடியில்
கோயில்  கொண்டு  வந்து
வணங்கும் அடியவர்களுக்கு
கேட்ட  வரங்களையெல்லாம்
தந்து வாழ்விப்பவளே

விண்ணுக்கும்  மண்ணுக்கும்
பாலமாய்  இருப்பவளே

நீயே  கதி  என்று
சரணடைவோருக்கு  
பலமாய்   விளங்குபவளே   .

பத்மாவதி   தாயே   சரணம்


 


மதியிலே உன்னை நினைந்து
 மலரிட்டு  வணங்கினேன்  .

அவனியில் அனைத்து  உயிர்களும்
துன்பமின்றி இன்பமாக வாழ
அருள் செய்வாயே.  

7 comments:

  1. சிறப்பான வரிகள் ஐயா... படம் பிரமாதம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //நீயே கதி என்று சரணடைவோருக்கு பலமாய் விளங்குபவளே பத்மாவதி தாயே சரணம் //

    படமும் பாடலும் பிரமாதம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. சிறப்புமிகு வரிகள் ஐயா

    ReplyDelete