Thursday, November 21, 2013

குயிலே குயிலே நீ யாரோ?

குயிலே குயிலே நீ யாரோ?


நீதானோ அந்தக் குயில்?




இசைக் குயில், ஞானக் குயில், மோனக் குயில்,
கானக்  குயில் என்று பல இனிமைகளை
குயிலோடு தொடர்பு படுத்தி பேசுவது தமிழ் மரபு.

குயிலோசையை வெல்லும்
கண்ணனின் குழலோசை என்ற பாடல் பிரசித்தம்

சோகத்தையும் மகிழ்ச்சியையும்
வெளிப்படுத்தும் குயிலின் குரல்
வெளிப்படாத திரைப்படபாடல்கள்
இல்லை எனலாம்.

குயிலின் வடிவமும் அழகு
அதன்   குரலும்   அழகு

அதிகாலையில்  அது  க்ரீசிட்டுக்   கொண்டு
பறந்து  சென்று  அனைவரையும் துயிலெழுப்புவது அழகு.

மார்கழி மாத பனி சூழ்ந்த இரவில்
அது எழுப்பும் இனிமையும் சோகமும் கலந்த
 அந்த குரல் கேட்பவர் மனங்களை பாதிக்காமல் விடாது.

குயிலைப்பாடாத பற்றி பாடாத
கவிஞர்களே கிடையாது. பாரதியார் குயில் பாட்டு
என்று ஒரு அத்தியாயமே பாடி விட்டார்.

ஆண் குயிலும் பெண் குயிலும் மாறி மாறி இனிமையாக
குரல் எழுப்பி அங்குமிங்கும் பாடிக்கொண்டு
பறந்து செல்வதை காண்பது
இனிமையான அனுபவம்.

காகங்களுக்கும் குயில்களுக்கும்  என்றும் பகை .
காகம் குயிலை விரட்டுவதும் அது லாவகமாக
தப்பி மரக் கிளைகளுக்கும் புகுந்து கொள்வதும்
பார்ப்பதற்கு அருமையாக  இருக்கும்

இவ்வளவு அருமையாக குரலை  தனக்குள் வைத்திருக்கும்
குயிலுக்கு இருக்க கூடு கிடையாது.

அது தன் முட்டைகளை காகத்தின் கூட்டில் இட்டுவிடும்.
 காகம் அதை குஞ்சு பொரித்து விடும்.

இறைவனின் அற்புதம் பாருங்கள் !
அந்த குஞ்சுகள் தனக்கு பறக்கும் சக்தி வரும் வரைக்கும்
வாய் திறந்து குரல் எழுப்பாது.

 பறந்து  வெளி வரும்போதுதான்
குயில்போல்  ஒலிழுப்பும். .

அப்போதும் அந்த காகத்திற்கு
அது குயில் என்று தெரியாமல்
அதக்கு கா கா என்றுகூவப்பயிற்சி  கொடுக்கும்.
அந்த காட்சி பார்ப்பதற்கு  அழகாக  இருக்கும் .

கு  என்றால்  குமரன் ,குயிலி,
குருவாயூரப்பன் என்று இறைவன் பெயர்களை குறிக்கும்

ல் என்றால் இறைவன் இருக்கும் இடம் வீடு

குயிலின் உள்  இறைவன் இருக்கின்றான் ,

அதனால்தான் இருளில் ஒளி  வடிவான
இறைவன் வெளிப்படுவதைப் போல்.
கருமையான குயிலின் வாயிலிருந்து
இனிமையாக குரலாய் இறைவன் ஒலிக்கின்றான்.

இவன் வீட்டெதிரே குயில் ஒன்று
ஒய்யாரமாக அமர்ந்திருந்தது.
 படம் பிடித்தேன்.

ஒரு குயில் மற்றொரு குயிலுக்கு 
மந்திர   உபதேசம்  செய்கிறது .

என்ன  மந்திரம் ?

ராம மந்திரம்தான்.

அதுதானே நம்மையெல்லாம்
கடைதேற்றும்  மந்திரம். 

15 comments:

  1. அருமையான விளக்கங்களுடன் குயில்களின் சுயத்தை வர்ணித்த
    விதம் அருமை !¨ராம நாமமே மனதில் குடிகொண்டிருக்கும் வாழ்வும்
    சிறக்கும் .குயிலின் படத்தைத் ததுரூபமாகப் பிடித்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. அழகு தமிழில்
      அமுதமாய் கவிதைகளை
      வலையில் மிதக்க விடும்
      அம்மணிக்கு வணக்கம்.

      தங்களை இவனுக்கு
      அறிமுகம் செய்த
      வைகோவிற்கு நன்றி.

      பிடித்தது ஒரு குயில்தான்
      ஆனால் அது இரண்டாகி விட்டது
      உடனே ஒரு சேதி சொல்லியும் விட்டது.

      எல்லாம் அவன் செயல்.

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. //குயிலைப்பாடாத பற்றி பாடாத கவிஞர்களே கிடையாது.//

    குயிலைப்பற்றி பாடாத கவிஞர்களே கிடையாது, என்று அதை சரியாக எழுதுங்கோ, ப்ளீஸ்.

    >>>>>

    ReplyDelete
  3. //ஆண் குயிலும் பெண் குயிலும் மாறி மாறி இனிமையாக குரல் எழுப்பி அங்குமிங்கும் பாடிக்கொண்டு பறந்து செல்வதை காண்பது இனிமையான அனுபவம்.//

    அதே அதே, ஆணும் பெண்ணும் சேர்ந்தாலே இன்பமான இனிமையான அனுபவங்கள் தான். ;) நன்கு கவனித்துள்ளீர்கள் ! சபாஷ் !!

    ReplyDelete
    Replies
    1. சில செயல்கள் அனைத்துயிருக்கும்
      ஒன்றாயிருந்தாலும் அதை காண்பதோ
      அதை பற்றி பொதுவில் விவரிப்பது கூடாது
      என்பது நம்முடைய பண்பாடு.

      ரசிக்க வேண்டியதை
      மட்டும்தான் ரசிக்கவேண்டும்.

      ருசிக்க வேண்டியதை
      தனிமையில்தான் ருசிக்க வேண்டும்.

      தவறான இடங்களுக்கு
      சென்றால்கிடைப்பது வேறு

      Delete
  4. //இறைவனின் அற்புதம் பாருங்கள் ! அந்த குஞ்சுகள் தனக்கு பறக்கும் சக்தி வரும் வரைக்கும் வாய் திறந்து குரல் எழுப்பாது.//

    இறைவன் ஓர் மிக அற்புதமான படைப்பாளி தான். எவ்வளவு மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் அதிலும் நடப்பன, ஊர்வன, நீந்துவன, பறப்பன என படைத்துள்ளார் ! ;) ஆச்சர்யம் தான். ;)

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. படைப்புகளையே நினைத்துக் கொண்டிருந்தால்
      படைப்பவனை எப்போதுதான் நினைப்பது?

      அதனால்தான் எப்போதும்
      ராம நாமம் சொல்ல சொல்கிறான் இவன்.

      Delete
  5. //என்ன மந்திரம் ? - ராம மந்திரம்தான்.//

    கம்பன் வீட்டுக்கட்டுத்தறியும் கவிபாடும் என்பது போலவே அண்ணா வீட்டுக்குயில்களும் ராம மந்திரம் சொல்லும்.

    இங்கு ஸ்ரீரங்கத்தில் ராம மந்திரம் அபார்ட்மெண்ட்ஸ் என்றே ஒன்று உள்ளது. தாங்கள் தான் அந்த முழுக்கட்டடத்தின் ஓனராக இருக்க வேண்டும் என நான் அடிக்கடி நினைத்துக்கொள்வேன்.

    நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. எல்லாவற்றிற்கும் முதலாளி ஸ்ரீராமன்தான்
      நமக்கு ஒன்றும் சொந்தம் கிடையாது. இருக்கிறவரைக்கும் அவன் கொடுப்பதை அனுபவித்துக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

      குயிலைப் பார்த்தவுடன் குடந்தை சாரங்கபாணி நினைவுக்கு வந்தது.

      உடனே ஒரு எண்ணம் தோன்றியது. இந்த குயிலுக்கும் ராம நாம உபதேசம் செய்யலாம் என்று தோன்றியது.

      அப்போது ஒரு குயில்தான் மற்றொரு குயிலுக்கு உபதேசம் செய்யமுடியும் என்பதால் மற்றொரு குயிலை படைத்து விட்டேன்.

      Delete
  6. ஒரு குயில் மற்றொரு குயிலுக்கு
    மந்திர உபதேசம் செய்கிறது .

    என்ன மந்திரம் ?

    ராம மந்திரம்தான்.

    குயிலாய் குரல் கொடுக்கும் அருமையான தாரகமந்திரம்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. அருமையான மந்திரம் ஐயா...

    சொன்னவிதம் மிகவும் ரசிக்க வைத்தது....

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.DD

      Delete
  8. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete