Monday, November 25, 2013

மாதவா! மதுசூதனா!

மாதவா!
மதுசூதனா!




யார் மா தவம்
செய்தார்கள்?

நீ யாதவனாய்
இப்பூமியில் அவதரிக்க

அவருக்கு அனந்த
கோடி வணக்கங்கள்

ஆயிரமாயிரம் ஆண்டுகள்
கடந்தபின்னும்
இன்னும் உன் சரிதம்
தெவிட்டாத தேனமுதாய்
இனிக்கிறதே!

உன் லீலைகள் உள்ளத்தில்
இன்பத் தேனைக் சுரக்கிறதே?

அடியவர்களைக்  கண்ணிமைபோல்
காப்பதனால்  கண்ணன்
என்று  பேர்  பெற்றாயோ ?

அலைபாயும்  மனதை  அடக்கும்
உபாயம்  சிலை  வடிவாய்  நீ நிற்கும்
மோகன  வடிவத்தை வணங்குவதே!

உன்னை அடையும் வழியை
எளிதாக்கி தந்தாய் கீதை வடிவிலே!

பக்தி வசப்பட்டு உன்னிடம் தன்னை
இழந்த கோபியரை இவ்வுலகோர்
குறை காணிடினும் குறை காணாது
நிறைவான வாழ்வு அளித்தவனே!

காண்பவை யாவினும் உன்னோடு
தொடர்புடையவை
அன்றோ இவ்வுலகில்

என்றென்றும் உன் நாமம்
என் நினைவில்
நிலைத்து நிற்கட்டும்.

நிலையில்லா இவ்வுடலின்
உள்ளத்தில் உன் திருவடிவம்
ஒளியாய் நின்று
அருள் செய்யட்டும்.

ராதே கிருஷ்ணா!

9 comments:

  1. /// நிலையில்லா இவ்வுடலின்...

    என் நினைவில்
    நிலைத்து நிற்கட்டும்... ///

    அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அடியவர்களைக் கண்ணிமைபோல்
    காப்பதனால் கண்ணன்
    என்று பேர் பெற்றாயோ ?

    கண்போல் காக்கும் கண்ணன் ...!
    அருமையான வரிகள்..!

    ReplyDelete
  3. நிலையில்லா
    இவ்வுடலின்
    உள்ளத்தால்தானே
    உலகில்
    எங்கெங்கும் பிரச்சனைகள்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விக்கு
      பதிலாய் மலந்தது ஒரு பதிவு.

      காண வேண்டுகிறேன்.
      கரந்தையாரே

      Delete
  4. ராதே கிருஷ்ணா!

    //அடியவர்களைக் கண்ணிமைபோல் காப்பதனால் கண்ணன் என்று பேர் பெற்றாயோ ?//

    //என்றென்றும் உன் நாமம் என் நினைவில் நிலைத்து நிற்கட்டும்.//

    அதே அதே ! அருமை அண்ணா. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  5. படமும் நல்லாவே ......... இருக்குது ! ;)

    ReplyDelete
    Replies
    1. நானா வரைகின்றேன். ?

      எந்த ஓவிய பள்ளியிலும்
      படிக்கவில்லை

      எவரிடமும் ஓவியம்
      கற்கவில்லை

      எல்லாம் சகலகலாவல்லி
      என்னுள் புகுந்துகொண்டு
      வரைந்து தள்ளுகின்றாள்

      இவன் ஒரு கருவியே.

      படத்தை வரைந்து அதற்க்கான
      விளக்கங்களையும்
      அவள்தான் எழுதுகிறாள்.

      இவன் எதுவும் தயார் செய்துகொண்டு
      எழுதுவது கிடையாது VGK

      எல்லா பாராட்டும்
      அவள் திருவடிகளுக்கே.

      Delete