Saturday, November 30, 2013

இன்று யோகி ராம்சூரத்குமார் அவதார தினம்

இன்று  யோகி  ராம்சூரத்குமார்  
அவதார  தினம்  (1.12.2013)






அவனியில்  ஆன்மீக  ஞானிகள்
தோன்றும்  புண்ணிய  பூமி  பாரதமே

இந்த  மண்ணில்தான்  தெய்வங்களும் ,
தெய்வீக  புருஷர்களும் தோன்றி
மக்களிடையே  நடமாடி   இறைவனை
 அடையும்  மார்க்கத்தை
காட்டியுள்ளனர் ,
வழிகாட்டியும்  வருகின்றனர் .

அப்படி  தோன்றிய
எண்ணற்ற  மகான்களுள்
யோகி  ராம்  சூரத்குமாரும்   ஒருவர் .

அவர்  பாவங்களைப்  போக்கும்  
பாகீரதி நதியாம்    கங்கை
 நதிக்   கரையில்
முளைத்தெழுந்த  ஜோதி





அங்கிருந்து வந்து அருணையில்
வாசம்  செய்து
அருணாச்சல  ஜோதியிலே
கலந்துவிட்ட   தெய்வீக  யோகி

மனிதராய்ப்   பிறந்தவன்  ராம  நாம
ஜபத்தினால்  தெய்வத்தின்  நிலைக்கு
உயரலாம்  என்று  உலகுக்கு  காட்டிய  ஞானி

எளிமையாய்  வாழ்ந்து  கட்டினார்
ஏற்றம் பெறும் வழியை  போதித்தார்
தன்னை  அண்டி  வந்த  அனைவருக்கும் .

மனித  நேயம்   கொண்டவர்கள்
அவர்  மாண்பினை  அறிந்துகொண்டனர்
நலம்  பெற்றனர்

மனித  நேயம்  அற்ற
மாக்களோ  இரக்கமின்றி  துன்புறுத்தினர்
அவர்களையும் அன்புடன் ஏற்றுக்கொண்டார் அவர்

அனைத்தையும் பொறுமையோடு
இறைவனின்  பிரசாதமாக
ஏற்றுக்கொண்டார் .
அவர்களிடமும்  அன்பைப்  பொழிந்தார்

ஜோதி  சுடராய்  விளங்கியவர்
ஜோதியில்  கலந்தவர்
இன்றும்   வழிகாட்டுகிறார்
அல்லலுறும் மாந்தர்களுக்கு

அவர்  காட்டிய   எளிமையான  வழி
ராம  நாமம்  ஜெபிப்பதுதான்

நாமும்  சொல்லுவோம்
நாளும் சொல்வோம் .

ஓம்  ஸ்ரீ  ராம்  ஜெய்  ராம்   ஜெய்  ஜெய்  ராம்

யோகிராம்  சூரத்குமார் யோகிராம்  சூரத்குமார்
யோகிராம்  சூரத்குமார்  ஜெயகுருராயா


7 comments:

  1. எளிமையான வழி : ராம நாமம் ஜெபிப்பதுதான்...


    அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  2. Saturday, November 30, 2013

    இன்று யோகி ராம்சூரத்குமார் அவதார தினம்
    இன்று யோகி ராம்சூரத்குமார்
    அவதார தினம் (1.12.2013)






    அவனியில் ஆன்மீக ஞானிகள்
    தோன்றும் புண்ணிய பூமி பாரதமே

    இந்த மண்ணில்தான் தெய்வங்களும் ,
    தெய்வீக புருஷர்களும் தோன்றி
    மக்களிடையே நடமாடி இறைவனை
    அடையும் மார்க்கத்தை
    காட்டியுள்ளனர் ,
    வழிகாட்டியும் வருகின்றனர் .

    அப்படி தோன்றிய
    எண்ணற்ற மகான்களுள்
    யோகி ராம் சூரத்குமாரும் ஒருவர் .

    அவர் பாவங்களைப் போக்கும்
    பாகீரதி நதியாம் கங்கை
    நதிக் கரையில்
    முளைத்தெழுந்த ஜோதி





    அங்கிருந்து வந்து அருணையில்
    வாசம் செய்து
    அருணாச்சல ஜோதியிலே
    கலந்துவிட்ட தெய்வீக யோகி

    மனிதராய்ப் பிறந்தவன் ராம நாம
    ஜபத்தினால் தெய்வத்தின் நிலைக்கு
    உயரலாம் என்று உலகுக்கு காட்டிய ஞானி

    எளிமையாய் வாழ்ந்து கட்டினார்
    ஏற்றம் பெறும் வழியை போதித்தார்
    தன்னை அண்டி வந்த அனைவருக்கும் .

    மனித நேயம் கொண்டவர்கள்
    அவர் மாண்பினை அறிந்துகொண்டனர்
    நலம் பெற்றனர்

    மனித நேயம் அற்ற
    மாக்களோ இரக்கமின்றி துன்புறுத்தினர்
    அவர்களையும் அன்புடன் ஏற்றுக்கொண்டார் அவர்

    அனைத்தையும் பொறுமையோடு
    இறைவனின் பிரசாதமாக
    ஏற்றுக்கொண்டார் .
    அவர்களிடமும் அன்பைப் பொழிந்தார்

    ஜோதி சுடராய் விளங்கியவர்
    ஜோதியில் கலந்தவர்
    இன்றும் வழிகாட்டுகிறார்
    அல்லலுறும் மாந்தர்களுக்கு

    அவர் காட்டிய எளிமையான வழி
    ராம நாமம் ஜெபிப்பதுதான்

    நாமும் சொல்லுவோம்
    நாளும் சொல்வோம் .

    ஓம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்

    யோகிராம் சூரத்குமார் யோகிராம் சூரத்குமார்
    யோகிராம் சூரத்குமார் ஜெயகுருராயா


    அறியாதன அறிந்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நாமும் சொல்லுவோம் நாளும் சொல்வோம் .
    ஓம் ஸ்ரீ ராம் ஜயராம் ஜய ஜய ராம் ;)))))

    அறியாதன அறிந்தேன் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. எளிமையான வழியைப் பின்பற்றுவோம்

    ReplyDelete