Monday, November 4, 2013

எல்லாம் அவன் கொடுத்தது

எல்லாம் அவன் கொடுத்தது








கொடுக்க கொடுக்க
இன்பம் பிறக்குமே...

கொடுத்துப் கொடுத்துப் பார் உங்கள் அன்பை
அனுபவித்துப் பார் பார் அதன் தெம்பை...

பிறருக்கு கொடுப்பவன் தனக்கு தானே
கொடுத்துக்கொள்கிறான் -நீதி சாஸ்திரம்

எல்லாம் அவன் கொடுத்தது 

நாம் எடுத்தது போக மீதியை
அவனிடமே கொடுத்துவிட்டால் நிம்மதி

நாமே வைத்துக்கொண்டால்
தினமும் பயந்து பயந்து
பீதியில்தான் வாழவேண்டும்.

எந்த திருடன்வருவானோ?
அடித்துபோட்டுவிட்டு எல்லாவற்றையும்
கொள்ளை கொண்டுபோய் நம்மை
ஆறா துன்பத்தில் ஆழ்த்துவானோ?

கணக்கு கேட்டு வம்பில் மாட்டிவைக்க
எந்த ஆபீசர் வருவானோ?

எந்த ஏமாற்றுக்காரன்
நம் மூளையை சலவை செய்து
அனைத்தையும் கொண்டுபோவானோ?

நாமே எதிலாவது பேராசைக்கு ஆட்பட்டு
முழுவதையும் இழந்து நடைபிணமாய்
அலைவோமோ?

சொத்து பத்துக்கு ஆசைப்பட்டு
சொந்த பந்தங்களினால்
அடிபட்டு சாக நேரிடுமோ?

யாருக்கு தெரியும்?

-அது தேவையா?

எவன் கொடுத்தானோ
அதை அவனிடமே மீண்டும்
ஒப்படைத்துவிட்டால் போதும்

அவன் அதை எல்லோருக்கும்
கொடுத்துவிடுவான் -

அதனால்தான் அந்த எழுமலையான்
கோயிலில் உண்டியை வைத்து
எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு
 நம்மையெல்லாம் காப்பாற்றுகிறான்-

அவன் எந்த கணக்கையும்
கேட்கமாட்டான்.

-ஏனென்றால் அவனுக்கு எல்லா கணக்கு
வழக்குகளும் அத்துப்படி.

படியேறி வந்தால் போதும் -
அடிபணிந்தால் போதும்
அடி விழாமல்-
அடி படாமல் காப்பாற்றுவான் -

செய்த பாவத்தை புண்ணியமாக்கி 
நம்மை புனிதப்படுத்துவான். 

ஒரு கணம் அவன் பாதார விந்தத்தை 
தரிசித்தால் போதும்.

கோடி பிறவிகளில் செய்த பாவங்கள் யாவும் 
பறந்தோடிவிடும் கேதார்நாத்தில் அனைத்தையும்  
அடித்து சென்ற வெள்ளம் போல 

திமிர் பிடித்து அலைந்தால் 
திரும்பவும் எழ முடியாதவாறு 
மகாபலியை பாதாள லோகத்தில் 
தள்ளியதைபோல்  தள்ளிவிடுவான். 

எண்ணிய எண்ணங்களை ஈடேற்றும்
ஏழுமலையானை சரணடைவோம்.
ஏற்றம் பெறுவோம்

வானிலிருந்து என்றோ வந்தவன் 
சிலையாய் நிலையாய்
நின்றுவிட்டான்
நிலை தடுமாறும் நம்மையெல்லாம் 
கடைத்தேற்ற எண்ணம் கொண்டு 


அலையாய் வரும் துன்பங்களை
அக்கணமே அகற்றுவான் அன்போடு
மனம் உருகி வழிபட்டால்

அவன் பெயரை கோவிந்தா கோவிந்தா என்று
சொல்ல சொல்ல ஆனந்தம் 

ஆதி சங்கரரே  சொல்லிவிட்டார்
அவன்  நாமத்தை சொல்லுங்கள்
மற்றதை விடுங்கள் என்று.

அவன் வடிவத்தை எத்தனை முறை
தரிசித்தாலும் ஆனந்தம்.
வாழ்வில் என்றும் நிலைத்திடும்
பரமானந்தமே!

ஓம் நமோ வேங்கடேசாய !

1 comment:

  1. //அவன் பெயரை கோவிந்தா கோவிந்தா என்று சொல்ல சொல்ல ஆனந்தம் //

    ஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே !!!

    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    முதலில் உள்ள படமும் அழகோ அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    http://gopu1949.blogspot.in/2013/11/75-1-2.html
    http://gopu1949.blogspot.in/2013/11/75-2-2.html
    http://gopu1949.blogspot.in/2013/11/74.html0

    இவற்றில் உன்னைக் [உங்களைக்] காணாத கண்ணும் கண்ணல்ல ! ;(((

    அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக
    ஆனாலும் ...... அன்புடன் கோபு

    ReplyDelete