Friday, November 29, 2013

எளிதான மார்க்கம்

எளிதான மார்க்கம்  

இறைவா நீ
வெட்ட வெளியாய் இருக்கிறாய்

வெட்ட வெளியில்
இருக்கும் அனைத்தும்
உன்னிலிருந்து தோன்றியவைதான்

அண்டங்களும் அதில் வசிக்கும்
எம்மைப் போன்ற
பிண்டங்களுக்கும் உள்ளிருந்து
அசையவைப்பதும் நீதான்

இருளாய் இருப்பவனும் நீதான்
அந்த இருள் நடுவே
ஒளியாய் தோன்றுவதும் நீதான்

ஆசைகளை தூண்டி விட்டு
அதில் சிக்க வைக்கும்
சூத்திரதாரியும் நீதான்

வலையில்  சிக்கிகொண்ட
மீன்கள்  போல ,
வேடன் விரித்த பொறியில்
சிக்கிகொண்ட  மான்  போல
சம்சாரம்  என்னும்  பொறியில்  எங்களை
எளிதாக  சிக்க வைத்து  விடுகிறாய்

மற்ற  உயிரினங்கள்   வலையில்  சிக்கி
மாண்டு  போகும்  காப்பாற்ற  நீ இருக்கிறாய்
என்பதை  அறியாது (கஜேந்திரன்  என்னும்
யானை  மட்டும்  விதிவிலக்கு ) .

ஆனால்   மனிதராய்   பிறந்த   எங்களுக்கு
நீதான் புகலிடம்  என்று  தெரிந்திருந்தும்
அதை  உணரா மூடராய் வீணே காலத்தை
 காசு தேடுவதிலும் சேர்த்து வைத்த
பொருட்களின் மீது சேர்ந்துவிட்ட
தூசைத் தட்டி வைப்பதிலும் கழித்து
வெட்டியாய் பொழுது போக்கி
முடிவில் வெட்டியான்
கையால் தீக்கு இரையாகும்
மனிதர்களைப் பார்க்கும்போது
வேதனையே மிஞ்சுகிறது. என்று
ஞானிகள் பலர் காப்பாற்ற வந்து
முடியாமல் போய்விட்டனரே!

உறவுகளோடு சேர்வதால்
இன்பமும் பிரிவதால் வரும் துன்பமும்
எத்தனை காலத்திற்குதான் அல்லல்படுவது?

உன்னை அடையும்
மார்க்கமோ கோடி கோடி

அதில்   அனைவருக்கும் எளிதான மார்க்கம்
எது  என்று தேடி கண்டுகொண்டேன்


செப்புகின்றேன் அனைவருக்கும்

எளிதான மார்க்கம் அவன் நாமத்தை
சொல்வதுதான் அல்லும் பகலும்
என்றுணர்ந்தேன்

சொல்லிக்கொண்டிருக்கிறேன்
ராம நாமம். அனைவரும்
சொல்லுங்கள் நம்பிக்கையோடு

நாம் வாழும் உடலில் உறைபவன்
உயிருக்கு உயிராய் இருப்பவன்
உற்றபோது துணை நிற்ப்பவன்
பதறும்போது  சிதறாமல் காப்பவன்
அந்த இராமபிரானே.  

2 comments:

  1. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

    நல்ல பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. /// நீதான் புகலிடம் என்று தெரிந்திருந்தும் ///

    அறியாமை தான் ஐயா...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete