Tuesday, September 17, 2013

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(1)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(1)



கற்பார்  இராமபிரானையல்லால்
மற்றும் கற்பரோ?
என்றுகேட்டார்
நம்மாழ்வார்.

அவனுக்கு நிகர் வேறு யாரும் இல்லை
என்பதுதானே இதன் பொருள்.

இதை மனதில் வைத்துக்கொண்டுதான்
சத்குரு  ஸ்ரீ. தியாகராஜ ஸ்வாமிகள்
"ராம  நீ சமானம் எவரு? என்று
ஓர் அருமையான  பாடலை பாடினார்

கற்பது  என்றால் என்ன ?

வாழ்க்கைக்கு பயன்படும் வகையில்
ஒன்றைக் கற்பதுதான் என்பது பொருள்.

தனக்காக
வாழ்வது வாழ்க்கையாகாதே!

விலங்கு
தனக்காகவே வாழ்கிறது.

மனிதர்களும் அவ்வண்ணமே செய்தால்
அவர்களை எப்படி தங்களை மனிதர்கள்
என்று அழைத்துக்கொள்ள முடியும்?

மற்றவர்களுக்கு என வாழும்
வாழ்க்கைதான்  வாழ்க்கை .

அவ்வாறு தன்னை பற்றியே சிந்தித்து
எப்பொதும்  வாழ்பவர்கள் தலையில் 
விரைவில்விழும் வழுக்கை

பிறரை வஞ்சித்து வாழ்பவர்கள்
ஒருநாள் சந்திக்கவேண்டும்
நீதிமன்றங்களில் வழக்கை.

மற்றவர்களுக்காக
வாழ்ந்தவன்  இராமன்

தியாக செம்மலாக எல்லா உயிர்க்கும்
இரக்கம் காட்டுபவனாக
அவன் வாழ்ந்திருக்கிறான்.

அவனைக் காராளும்
கருணாகரமூர்த்தி என்றார் கம்பர்.

இராமபிரானைக் கற்பதால்
நமது வாழ்க்கை வையகத்துக்காக
 பயன்படும் வாழ்க்கையாக அமையும்

 (இன்னும் வரும்)

7 comments:

  1. Replies
    1. நன்றி DD
      பதிவர் சந்திப்பு விழா
      நன்றாக நடைபெற்றதா?

      Delete
  2. //மற்றவர்களுக்கு என வாழும் வாழ்க்கைதான் வாழ்க்கை

    மற்றவர்களுக்காக வாழ்ந்தவன் இராமன்//

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    ReplyDelete
  3. காராளும் கருணாகரமூர்த்தி ..

    கருணை ததும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நம் அனைவரும் சேர்ந்து
      இராமபிரானை பாராட்டுவோம்.

      Delete