Sunday, September 15, 2013

நான்மறைகள் போற்றும் நாரணனே

நான்மறைகள் போற்றும் நாரணனே




நான்மறைகள் போற்றும் நாரணனே
அறம் ,பொருள்,இன்பம் வீடு, என்னும்
நால்வகைப் பேற்றினை வணங்கும்
அடியவர்களுக்கு அருள்பவனே

பூமகளும் அலைமகளும் இருபுறம்
நின்று அருட்காட்சி தரும் ஆராவமுதனே

தாமரைக் கண்ணுடையாய் ,வரங்கள்
தருவதில் சோர்வடையாய் வாமனாய்
வடிவெடுத்தாய்   ,மகாபலியின் அகந்தையடக்க
விண்ணும் மண்ணும்  உயர்ந்து வடிவெடுத்து
நெடுமானாலானாய்

அனைவரின் அகத்தே ஒளியாய் இருந்தாலும்
துதிக்கும் அடியவர் மகிழ கோயிலில்
காண்போர் காணும் எழில் வடிவானாய்.

மலர்களும், மாலைகளும் சாற்றிக்கொண்டு
தேவியருடன் அருட்காட்சி தரும் மாலே
எல்லா உயிரும் இன்புற்று வாழ்ந்து
உன் அருட்பதம்  அடைய அருளிடுவாய். 

4 comments:

  1. அனைவரின் அகத்தே ஒளியாய் இருந்தாலும்
    துதிக்கும் அடியவர் மகிழ கோயிலில்
    காண்போர் காணும் எழில் வடிவானாய்.

    எழிலான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. நான்மறைகள் போற்றும் நாரணனே

    நல்லதோர் எழில் மிகுந்த பதிவு, பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எழிலோனை ரசிக்கக்
      கற்றுக்கொள்வோம்.

      அப்புறம் இந்த உலகில்
      எல்லாம் ரசிக்கும்.

      Delete