Saturday, September 28, 2013

வேய்ங்குழலில் வேணுகானம் இசைக்கும் வேணுகோபாலனே

வேய்ங்குழலில் 
வேணுகானம்   இசைக்கும் 
வேணுகோபாலனே 




வேதங்களும் காண இயலா
திருவடிகளை உடையவனே

உடையவர் போற்றி கொண்டாடிய
சம்பத்குமாரனே

கோகுலத்தில் கோக்களை மேய்த்து
கோபர்களுடன் கூடிக் களித்தவனே

கோபியர்களின்தூய  பக்திக்கு
அடிமையானவனே

அதர்மத்தை அழித்து அஞ்ஞானத்தை
அழிக்கும் ஆத்மா போதமளிக்கும்
கீதையை அளித்தவனே

ஆடாது அசங்காது உன் திருவடிவம்
என் நெஞ்சை விட்டு அகலாது
நின்றருள வேண்டுகிறேன்.

நினைத்தாலே இன்பம் தரும் நின் வடிவம்
உன் நாமம் உரைத்தாலே தொலையும்
அனைத்து  பாவங்களும் அக்கணமே

ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

5 comments:

  1. அண்ணா, இன்று புரட்டாசி சனிக்கிழமை.

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    //நினைத்தாலே இன்பம் தரும் நின் வடிவம்
    உன் நாமம் உரைத்தாலே தொலையும்
    அனைத்து பாவங்களும் அக்கணமே//

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!

    ReplyDelete
  2. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இந்த ஞாயிறு,திருநின்றவூர் சென்று, ஸ்ரீ பாக்தவச்ல பெருமாளையும் ,தாயாரையும் தரிசித்தேன்...அருகில் ஒரு ஏரி காத்த ராமர்..அவரையும் தரிசனம்..மஹாலய பட்சம்..தசமி என் தாயாரின் திதி..எதிர்பாராமல் tv-ஐ போட்டபோது இந்த கோவிலை காட்டினார்கள்..தாயாரின் திருநாமம்,"என்னை பெற்ற தாயார்"கோவிலில் உள்ள தாயாரை தரிசித்தபோது, என் அம்மாவை கண்டது போல் சந்தோஷம்...மாலை 6.30..பசுவுக்கு,அகத்திகீரை தரவேண்டுமே..கிடைக்குமா?..ஒரு கடயில் ஒரேஒரு கட்டு..வாங்கி கொண்டு..இருட்டி வருகிறதே..பசுவை தேடவேண்டுமே..என்று நினைக்கும் போதே..தொலைவில் மேய்ச்ல்லுக்கு போன பசு ஒன்று வருவது தெரிந்தது...பிறகு என்ன?? தாங்கள் கூறுவது போல "எண்ணம்தான் வாழ்க்கையா? ராமனும்,கிரிஷ்ணனும் நமக்கு 2 கண்கள்..நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இராமனும் கிருஷ்ணனும்
      நம் கண்கள் மட்டும் அல்ல

      அதன் மூலம் வெளிப்பட்டு
      நம் அஞ்ஞான இருளை அகற்றும் ஒளி

      அவன் ஒளி மட்டுமல்ல
      நம் இதயத்தின் ஒலி

      அவன் நாமமே பிறவிப் பிணியிலிருந்து
      நம்மை கடைதேற்றும் வழி

      அவன் நாமத்தை எப்போதும் நாவில் இசைப்பதும்,
      சுவைப்பதும் நம் ஆன்மாவிற்கு விருந்து.

      எண்ணம்போல்தான்

      வாழ்வு என்றார்கள்.
      அதனால்தான் எப்போதும்
      நல்லதையே எண்ணவேண்டும்

      எனவே எப்போதும் வெறும்
      ரூபாய் தாள்களை மட்டும்
      எண்ணிக் கொண்டிருக்கக்கூடாது.

      இறைவனின் தாள்களைப் பற்றிதான்
      சிந்தித்துக் கொண்டிருக்கவேண்டும்.

      அப்போது வரவேண்டியவை தானாகவே
      ஒன்று என்ற எண்ணுடன் பூஜ்யம்
      ஒட்டிக்கொள்ளுவதுபோல்
      அனைத்தும் நலன்களும் வந்து சேரும்.

      Delete