Thursday, September 19, 2013

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(2)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(2)

இராமனுக்கு நிகர் இராமபிரானே !(2)

கைகேயி இராமனை அழைத்தாள் .





உனக்கு அரசர் ஒரு கட்டளை பிறப்பித்திருக்கிறார். 
உன் தம்பி பரதன் ஆழி சூழ் உலகெல்லாம் ஆள  வேண்டும். நீதாழிரும் சடைகள் தங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு பூமி வெம் கானகம் நண்ணிப் புண்ணியத்துறைகள் ஆடி ஏழ் இராண்டில் திரும்பி வரவேண்டும் என்றாள் 

ஒவ்வொரு மனிதரையும் இந்த லகில் வாழும்போதும், இந்த உலகை விட்டு செல்லும்போது அவனுடன் கூடவே சென்று அவனை காப்பாற்றுவது அவன் செய்யும் புண்ணிய செயல்களே என்பது உண்மை. 

அதை அறிந்துதான் கைகேயி இராமனை  புண்ணியத்துறைகள் சென்று நீராடுமாறு பணிக்கின்றாள். 

இந்த உத்தரவைப் அரசர் 
பிறப்பிக்க செய்ய வைத்தவளே அவள்தான். 

அவளால் அந்த உத்தரவை பிறப்பிக்க 
அவள் மனம் ஒப்பாது.

 ஏனெனில் அவள் தன்  மகன் பரதனை விட 
அதிகமாக இராமனை நேசிப்பவள் அவள்.

இராமனும் அவளை தன்  
தாயைப் போல் அவளை நேசித்தான்.   

ஆனால் விதி விளையாடிவிட்டது. 
அவள் உலகோர் பழிசொல்லுக்காளாகிவிட்டாள்  

இராமன் மீது பாசம் கொண்டவர்களின் 
இழி சொல்லுக்கும் ஆளாகிவிட்டாள் 
என்ன செய்ய?

இராமனோ தந்தை சொல்லையும் மீறவில்லை
தன் தாயைப் போல் அளவற்ற அன்பு காட்டிய 
கைகேயியின் சொல்லையும் மீறவில்லை. 

ஒரு அரசால் தான் பட்டமேற்பதர்க்கு முன்  
பல அனுபவங்களை பெறுதல் அவசியம் 

அவன் நாடு முழுவதும் சுற்றவேண்டும்.
ஒவ்வொரு பகுதியையும் அறிந்துகொள்ளவேண்டும்

மக்களின் நிலை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.அவர்களின் பிரச்சினைகளை பற்றி நன்கு தெரிந்து கொள்ளவேண்டும்.

பல அனுபவங்களைப் பெறவேண்டும். 

போர்த் திறனில் பயிற்சி பெற வேண்டும்.




இதெல்லாம் ஒரு அரசனாக 
பொறுப்பேற்றுவிட்டால்   
எதுவும் நிகழாது. 

அவன் என்று சென்றாலும் 
அவன் அரசனாகத்தான் பார்க்கப்படுவான். 

அவனுக்கு உண்மை நிலவரம் தெரிய 
வாய்ப்பு எழாமலே  போய்விடும்.

அந்த காரணத்தினால்தான் 
துறவுக் கோலத்தில் செல்லுமாறு 
அவனுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அப்போதுதான் நடுவுநிலையாக   நின்று மக்களோடு பழகி  பிரச்சினைகளை அறிந்து கொள்ள இயலும்.  

அனுபவங்களை பெற்ற ஒருவனால்தான் 
திறம்பட அனைவருக்கும் நன்மை ஏற்படும் 
வகையில் ஆட்சி நடத்த முடியும். 

மக்களோடு பழகாமலேயே ,நாட்டின் உண்மை நிலவரங்களை அறியாமலேயே ஆட்சியில் அமர வைப்பது சரியாக அமையாது என்பதை உணர்ந்தே இராமனை கைகேயி தன்  கணவன் தசரதன் மூலம் இந்த உத்தரவைப் பிறப்பித்தாள் .

ஏனென்றால் பாசத்தில் மூழ்கியிருந்த தசரதனுக்கு அந்த உத்தரவை பிறப்பிக்கும் மனநிலை கிடையாது என்பதை அவள் 
நன்றாக உணர்ந்திருந்ததே அதற்கு காரணம். 

இந்த உண்மை புரியாமல் காலம் காலமாக இந்த உலகம் கைகேயி மீது பழி சுமத்தி அவளை வசை பாடிக் கொண்டிருக்கிறது. இனியாவது அந்த போக்கு மாறவேண்டும். 

(இன்னும் வரும்) 

5 comments:

  1. மாறுபட்ட
    கோணத்தில்
    தங்களின்
    பார்வை
    புதியக் கருத்துக்களை
    விதைக்கின்றது ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நண்பர்களுக்கு இவன்
      கருத்துக்களை கொண்டு செல்லுங்கள்.

      Delete
  2. /// அனுபவங்களை பெற்ற ஒருவனால்தான்
    திறம்பட அனைவருக்கும் நன்மை ஏற்படும் வகையில் ஆட்சி நடத்த முடியும்... ///

    அருமையான கருத்துக்கள் பல... நன்றி ஐயா... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஆஹா, இராமாயணத்தில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய இதுபோன்ற விஷயங்கள் ஏராளமாக உள்ளன.

    கைகேயிக்குப் பாராட்டுக்கள்; அண்ணாவுக்கு வாழ்த்துகள்.

    வித்யாசமான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete