Tuesday, September 3, 2013

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் -பகுதி-2(102)

ஸ்ரீ தியாகராஜ  சுவாமிகளின்  
சிந்தனைகள் -பகுதி-2(102)

மனமே  எவ்விதத்திலேனும்
பக்தி வருவதற்கு முயற்சி செய்வாய் 

கீர்த்தனை (301)-எடுலைன பக்தி வச்சுடகே  - ராகம்-சாம (மேள -28)-
தாளம்-சாபு 


எயவ்வித்திலேனும் பக்தி வருவதற்கு
முயற்சி செய்வாய்
மனமே!

கனத்த மாயை சூழ்ந்த இவ்வுலகை
நமதென்று எண்ணாமல் ஆலிலைமேல்
துயில்பவனின் திருவடிகளில்
(பக்தி உண்டாவதற்கு முயற்சி செய்)

கல்வி கற்றதன் கர்வம் உனக்கேன்?
நீ அஞ்ஞானத்தின் வசமாவதும் எதற்கு?




சூரியகுல திலகனின் பட்டணமாகிய
அயோத்தியை அடையும் புத்தி உனக்கு
விரைவில் தோன்றாததேன் ?


 


இராம நாம சங்கீர்த்தனம்
செய்ய வெட்கமா?

இது உனக்குத் தகாது
ஒன்றும் பேசமாட்டாயா?
உன் வாயில் புண்ணா?
பெண்களிடம் முறை தவறி நடக்காதேஎன்றால்
உனக்கு அவமானமா?

இப்பாமர உடலை நம்பினால்
அது நீர்க்குமிழியாக முடியும்

நீ பாக்கியங்களை அனுபவிக்கும்போழுதும் கூட
 உண்மையான பாகவதர்களைத் தவிர மற்றோர்
உறவை ஒழித்து பகவானை நன்கு தியானம் செய்.
அதுவே சம்சாரமென்னும் வியாதிக்கு மருந்து.


மனதிற்கு அருமையான உபதேசங்களை 
இந்த கீர்த்தனையில் வாரி வழங்குகின்றார் ஸ்வாமிகள். 

உலக படைப்புகளை எண்ணாமல்
உலகை படைத்த ஆலிலைமேல் தவழும்
கண்ணனை நினைக்க தூண்டுகிறார்






கல்வி கற்பதின்  பயன் கடவுளை
அறிந்து தெளிவதர்க்கே என்று வள்ளுவரின் குரலை
இங்கே எதிரொலிக்கிறார்

நீர்க்குமிழிபோல் எந்நேரமும்
வெடித்து சிதறும்
இந்த உடலை நம்பி காம சேற்றில்
மூழ்கி மோசம் போகாதே என்று எச்சரிக்கிறார்

இந்த உலகில் எந்த இன்பங்களை 
அனுபவித்தாலும் இராமச்சந்திர மூர்த்தியின் 
நினைவு மனதை விட்டகலக்கூடாது என்று வலியுறுத்துகிறார்

அவர் சொல்.  கேட்போம். 
நலம் தரும் சொல்லை நாடுவோம். 
நன்மையை அடைவோம். 

Pic.courtesy-google images 

4 comments:

  1. மனதிற்கு அருமையான உபதேசங்களை
    இந்த கீர்த்தனையில் வாரி வழங்குகின்றார் ஸ்வாமிகள்.

    அருமையான ஓவியங்களும் சிறப்பு சேர்க்கின்றன பதிவுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. நமஸ்காரம்...வரும் வியாழன் முதல் 10 நாட்கள்,மங்களகிரி,ஸ்ரீ கூர்மம்,பூரி ஜெகநாதர்,பத்திராசலம்,அஹோபிலம் போகவுள்ளோம்..தங்கள் பதிவில் ஸ்ரீ ராமர்..வேறு என்னவேண்டும் ?மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
    Replies
    1. paraman meethu baktiyil nilaipera
      payanam uthavattum.

      kannukkiniyaanai kanndu
      paravasam adaiyungal.

      payanam inithe nadaipera
      vaazhthukkal

      Delete
  3. எவ்விதத்திலேனும் பக்தி வருவதற்கு முயற்சி செய்வாய் மனமே!

    அருமையான பதிவு + அற்புதமான படங்கள்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete