Saturday, August 31, 2013

தெய்வம் நின்று கொல்லும்


தெய்வம் நின்று கொல்லும்





உள்ளம் என்பது ஒரு கோயில்
அதில் தெய்வத்தைத்தான்
குடி வைக்க வேண்டுமே தவிர
குடி கெடுக்கும் அகந்தைக்கு
இடம் தரக்கூடாது

கோயில் தீபங்கள்தான்
ஒளி சிந்த வேண்டுமே தவிர
சினம், மோகம் போன்ற துர்நாற்றம் வீசி
அழிவைத் தரும் குப்பைகளை
எரிய அனுமதிக்கக்கூடாது

கோயிலில்  குடி இருக்கும் இறைவனுக்கு
நறுமணம் வீசி நன்மை பயக்கும் மலர்களை
சாற்றி மகிழ வேண்டுமே அல்லாது மணமில்லா
மலர்களை அணிவித்தல் கூடாது

அதைப்போல் உள்ளத்தில் அன்பு ஊற்றெடுத்து
அது பெருக்கெடுத்து சுற்றிப் பரவ வேண்டும்
மாறாது அது அழுக்காறு என்னும்
பொறாமை குணமாக
மாறி தானும் கெட்டு பிறரையும் அழிக்கும்
செயலாக  விடக்கூடாது

இறைவன் சந்நிதியில் அமைதி நிலவ வேண்டும்
ஆனந்தம் பெருக வேண்டும்.அதைபோல்தான்
ஒவ்வொருவர் உள்ளத்திலும் அமைதி பெருகினால்
அன்பு ஊற்றெடுத்தால் இந்த அவனியெல்லாம்
அவன் அருட்ப்ரவாகம் பெருகி
அனைவருக்கும் நன்மைகள் விளையும்

ஒவ்வொரு உயிரின் இதயத்திலும்
இறைவன் குடி கொண்டுள்ளான்

அவர்கள் அறிந்தாலும் அறியாவிட்டாலும்
அனைத்தையும் அவன் கண்காணிக்கின்றான்.

இந்த உண்மையை உணர்ந்துகொண்டோர்
தவறு செய்வதில்லை

உணராத மூடர்கள் இறைவன் எங்கோ
இருக்கிறான் என்று எண்ணி
அவனை நினையாது தொடர்ந்து
தவறுகளை செய்து பாவக் குழியில்
வீழ்ந்து துன்புறுகின்றனர்.

அவனை உணர்ந்தவர்களோ
மன அமைதியும் ஆனந்தமும் பெற்று
இக பர சுகங்களை அடைந்து
இனிதே வாழ்கிறார்கள்.

எச்சரிக்கை.
நம் செயல்கள்  அனைத்தையும் நம்மை
படைத்த தெய்வம் கண்காணிக்கிறது
என்பதை மறவாதீர்.

யாராயினும் தவறு செய்தால்
தண்டனை தவறாமல் உண்டு.

தெய்வம் நின்று கொல்லும்  

6 comments:

  1. அழகாக வரைந்துள்ள படத்துடன் அற்புதமான பதிவு. பாராட்டுக்கள். நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    //தெய்வம் நின்று கொல்லும் //

    அதற்குள் என் தொடரின் பகுதி-44 க்கு ஓர் பஞ்சாதி சொல்லிட்டுப்போங்கோ. எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள், அண்ணா.

    ReplyDelete
  2. அவனை உணர்ந்தவர்களோ
    மன அமைதியும் ஆனந்தமும் பெற்று
    இக பர சுகங்களை அடைந்து
    இனிதே வாழ்கிறார்கள்.


    அருமையான இனிமையான ஆக்கம்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் ஆக்கபூர்வமான கருத்துக்களை பதிவு செய்தமைக்கும் நன்றி

      Delete
  3. நல்ல மனது
    இறைவன்
    வாழும்
    ஆலயம்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களை
      பதிவு செய்தமைக்கும் நன்றி

      Delete