முதுமை வந்தால் எனக்கென்ன?
முதுமையே
நீ ஒரு முற்றிய கோதுமை
கோதுமை மாவிலிருந்து என் உயிர் வாழ
சப்பாத்தியாய் ஆவதுபோல்
கடினமாய் இருந்த என் மனம்
அன்பு என்னும் ஈரம் கசிந்து
வாழ்வின் இன்ப அனுபவங்களின்
ருசியோடும், துன்ப அனுபவங்களின் காரத்தோடும்
சுவையாக அல்லவோஆகி விட்டது முதுமையிலே ?
முதுமையில்
கோதுமை அல்வா போல்
அல்லவா இனிக்கின்றாய்
அன்பான சுற்றமுடன்,
அழகியபேரக் குழந்தைகளுடன்
அன்பை கொடுத்தால் அது
பன்மடங்காகப் பெருகும் என்பதை அறிந்து கொள்ளுவீர்
முதுமைக்காலத்தில் இருப்போரே தெரிந்துகொள்வீர்
அலுத்து கொள்ளாதீர்
உங்கள் சுற்றி உள்ளவர்களின்
பொறுமையை சோதித்து
முதியோர் முகாமிற்கு
தள்ளிவிட செய்யாதீர்.
முற்றியகதிர்தான்
விதையை தரும்
மீண்டும் முளைக்க
முதுமைதான் ஒருவனுக்கு
அருமையான சிந்தனைகளை தரும்
தானும் பலன்பெற்று தன்னை
சுற்றியுள்ளோரும்
பலமும் பலனும் பெற்று வாழ
படிப்பினைகளை தரும்.
உடலில் சக்தியில்லாவிட்டாலும்
உள்ளத்தில் சக்தி கொண்டு
நம்மை நாமே உணர்ந்து
கொள்ளும் வழியை நாடுவோம்.
வயிறு முட்ட முட்ட கண்டதை
எல்லாம் நிரப்பாதீர்.
நாவிலிருந்து
யாரையும் புண்படும்
சொற்களை பேசாதீர்.
உங்களை ஏசினாலும் அதை
பொருட்படுத்தாதீர்.
முக்தியில் நாட்டம் பெற வைக்கும்
முதுமையை போற்றுவோம்.
மூச்சு நிற்கும் மட்டும்
முக்தியளிக்கும்
முகுந்தனை மறவாதீர்
நம்மையெல்லாம் ஆட்டிவைக்கும்
சிவனை சிந்தனை செய்வீர்
வினைகளை எல்லாம் விரட்டியடிக்கும்
வேலனை மறவாதீர்.
அருகிலிருந்து காக்கும் ஐங்கரனை
அனுதினமும்வணங்கிடுவீர்
காண்கின்ற பெண்ணினத்தை
சக்தியாய் கண்டு வழிபடுவீர்.
பிறர் தாழ்வு அடைய நினையாதீர்
வாய் நிறைய மனம் நிறைய
வாழ்த்துவீர் அனைவரையும்.
இருக்கும்வரை இனிக்கும்
இந்த உலக வாழ்வு.
அதற்க்கு முயலாது முனகும்
முட்டாள்களை பற்றி நமக்கு
எதற்கு சிந்தனை?
/// தானும் பலன்பெற்று தன்னை சுற்றியுள்ளோரும் பலமும் பலனும் பெற்று வாழ படிப்பினைகளை தரும்...///
ReplyDeleteஉண்மை உண்மை உண்மை ஐயா...
வாழ்த்துக்கள்... நன்றி...
கோதுமையைப்பற்றி ஆன்மிக குருஜி, [ஸ்ரீ ரவிசங்கர் குருஜி என்பவர்] சமீபத்தில் ஓர் மிகச்சிறந்த உரையாற்றினார் - தொலைகாட்சியில் கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றில்.
ReplyDeleteஅதே போல இன்று தாங்களும் இந்தப்பதிவினில் சொல்லி அசத்தியுள்ளீர்கள், அண்ணா. அருமையான பதிவு, பாராட்டுக்கள்..
//முதுமை வந்தால் எனக்கென்ன?// அது சரி. முட்டிக்குமுட்டி வலிக்குதே !
வரைந்துள்ள குட்டிக்கிருஷ்ணன் ஜோர் ஜோர். ;)
முட்டிக்கு முட்டி தட்டினால்
Deleteமூட்டு வலி பறந்துபோயவிடும் .
முட்டிக்கு முட்டி எப்படி தட்டுவது?
யார் தட்டுவது?
விடை கண்டு பிடியுங்கள்.
எனக்கு வடை கிடைத்தால் போதும் ! ;))))).
Deleteவிடையெல்லாம் கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறோம்?
சரியாக
கண்டுபிடித்துவிட்டீர்கள்
அதுதான் VGK
அதுதான் அனைத்து
முட்டி வலிக்கும் காரணம் .
மூக்கு முட்ட சுடச் சுட
உள்ளே போகும் வடைகளின்
எண்ணிக்கையையும்
அதில் சேர்க்கப்படும் உப்பின் அளவையும்
குறைத்துக்கொண்டால் போதும்
முட்டி வலி குறைந்துவிடும்.
மேலும் வடைகளை உள்ளே தள்ளிவிட்டு
உட்கார்ந்து கொண்டு ஊர்வம்பு பேசுவதை விடுத்து
தினம் 5 கிலோமீட்டர் நடந்தால்
முட்டி வலி காணாமல் போய்விடும்.
//மேலும் வடைகளை உள்ளே தள்ளிவிட்டு உட்கார்ந்து கொண்டு ஊர்வம்பு பேசுவதை விடுத்து தினம் 5 கிலோமீட்டர் நடந்தால் முட்டி வலி காணாமல் போய்விடும்.//
Delete;))))) இதற்கான என் வடை ஸாரி விடை [ அதாவது என் பதில் ] விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது இந்தப்பதிவினில்:.
http://gopu1949.blogspot.in/2011/05/1-of-3.html
ஒவ்வொரு பகுதிக்கும் தங்கள் கருத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கும், உங்கள் கோபு.
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்.
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2014/09/blog-post_8.html
-do- ...................... as above
ReplyDeleteஎன் வாழ்த்துகளும் நமஸ்காரங்களும் ..... அண்ணா