பராசக்தி ஸ்துதி
ஸ்ரீ ராமலிங்க பாகவதர் கீர்த்தனைகள் (4)
ஸ்ரீ ராமலிங்க பாகவதர் கீர்த்தனைகள் (4)
(இந்த கீர்த்தனையை இயற்றியவர் சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ ராமலிங்க பாகவத ஸ்வாமிகள் ஆவார். இவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் சீடராவார்.1882 ஆம் ஆண்டு அவர் இதுபோன்ற பல எளிமையான பாடல்களை சௌராஷ்ட்ரம்,தமிழ்,தெலுங்கு மொழிகளில் இயற்றியுள்ளார். அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் விவேகானந்தாச்ரமம் 1969 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு நூலிலிருந்து பக்தர்களுக்காக தந்துள்ளேன்)

1. அன்பே சிவமாய்
அணைப்பாள் நம்மை பராசக்தி
2.ஆறுதல் சொல்லி
அமுதம் பொழிவாள் ஆதிபராசக்தி
3.இப்புவி இன்பம் வேண்டாமென்பாள்
அன்னை பராசக்தி
4.ஈடில்லாத சாஷியாய்
இருப்பாள் ஆதிபராசக்தி
5.உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள்
அன்னை பராசக்தி
6.ஊக்கமிருந்தால் போதும்
என்பாள் ஆதி பராசக்தி
7.எங்கும் நிறைந்த
ஜோதியாய் இருப்பாள்
ஆதிபராசக்தி
8.ஏகாஷரியாய் எங்குமிருப்பாள்
ஆதி பராசக்தி
9.ஐந்கரனாதனை ஆதியில் தந்தாள்
அன்னை பராசக்தி
10.ஒட்டியான பீடத்திலமர்வாள்
ஆதி பராசக்தி
11.ஓம் ஓம் ஒமேன்றாலே
ஓடியே வருவாள் ஆதி பராசக்தி
12.அவ்வை எனவே அவனியில்
வந்தாள் அன்னை பராசக்தி
13.அருள் வடிவாகவே
நின்றாள் ஆதி பராசக்தி
15.மாதா மாதா மாதா என்றால்
உளம் கனிந்தருள்வாள்
அன்னை பராசக்தி
16. ஜெகன்மாதா என்றால்
மகிழ்ந்து வருவாள் ஆதி பராசக்தி.
அடுத்தடுத்து வரும் அருமையான கீர்த்தனைகள் மனதை மயங்கச்செய்கின்றன.
ReplyDeleteபடம் வரைந்துள்ள அண்ணா பாராட்டுக்குரியவர்.