இறைவன் இருக்கிறானா?
அனைவரையும் படைத்தவன் இறைவன்
அனைத்தையும் படைத்தவனும் அவனே
அனைத்திலும் ஆன்ம ஒளியாய் இருந்து
ஆட்டுவிப்பவனும் அவனே
இருந்து அவனை அறிந்தவர் யாருமில்லை
அவனை அறிய துணிபவரும்
அவனியில் யாருமில்லை
அவனை மறக்கின்றார்
அவனியில் உள்ள பொருட்கள் மீதும்
உயிர்கள் மீதும் மோகம் கொள்கின்றார்
இன்பம் என்றெண்ணி சோகத்தையே
பரிசாக கொள்கின்றார்.
வாரிசுகளுக்காக சொத்து சேர்க்கின்றார்
இவர்கள் தாங்கியுள்ள உடல் ஒவ்வொரு
கணமும் சொத்தையாகி மக்கி
தரிசாகப் போய்கொண்டிருப்பதை
உணர மறுக்கின்றார்.
இவ்வுலக வாழ்வு மாயை என்று
பிதற்றுகிறார் தன்னோடு வந்தவரெல்லாம்
மண்ணுக்கும் நெருப்புக்கும்
இரையாகும் நேரத்தில் .
அடுத்த கணம் அதை மறந்து பேசுகின்றார்.
இது இயற்கை என்று அவர் மனம்
இழுக்கும் வழிநோக்கி செல்கின்றார் .
என்னே மனித இனம் ?
எவ்வளவு துன்பம் அடைந்தாலும்
இவ்வுலக வாழ்வின்மீது விடுவதில்லை மோகம் .
அழியாப் பதமஅருளும்
திங்களை முடியில் தரித்த
தில்லை நடராஜனை நினைப்பதில்லை
தித்திக்கும் அவன் நாமம் சொல்வதில்லை
மாறாக இறைவன் இருக்கின்றானா என்று
கேட்கின்றது ஒரு சில மூடர் கூட்டம்
மேலும் கேட்கிறது அவனை எனக்கு காட்டு
என்று அவனை வணங்கி மகிழும்
அடியவர்களை பார்த்து
தேனின் சுவையை
எழுத்தில் வடிக்க இயலுமோ?
சோதி பெருமானின் புகழை
சொல்லால்தான் விளக்க இயலுமோ?
தேனை உண்ணும் வண்டு
அதன் இனிமையில் மயங்கிபாடித் திரிகிறது.
இறைவனின் நாமத்தை
ஒருமையுடன்,பொறுமையுடன் ஓதினால்தான்
அவன் வடிவை சிந்தை செய்தால்தான்
அதன் இனிமை தெரியும்
மனம் தெளியும்.
மாளா பிறவி மாளும் .
அனைவரையும் படைத்தவன் இறைவன்
அனைத்தையும் படைத்தவனும் அவனே
அனைத்திலும் ஆன்ம ஒளியாய் இருந்து
ஆட்டுவிப்பவனும் அவனே
இருந்து அவனை அறிந்தவர் யாருமில்லை
அவனை அறிய துணிபவரும்
அவனியில் யாருமில்லை
அவனை மறக்கின்றார்
அவனியில் உள்ள பொருட்கள் மீதும்
உயிர்கள் மீதும் மோகம் கொள்கின்றார்
இன்பம் என்றெண்ணி சோகத்தையே
பரிசாக கொள்கின்றார்.
வாரிசுகளுக்காக சொத்து சேர்க்கின்றார்
இவர்கள் தாங்கியுள்ள உடல் ஒவ்வொரு
கணமும் சொத்தையாகி மக்கி
தரிசாகப் போய்கொண்டிருப்பதை
உணர மறுக்கின்றார்.
இவ்வுலக வாழ்வு மாயை என்று
பிதற்றுகிறார் தன்னோடு வந்தவரெல்லாம்
மண்ணுக்கும் நெருப்புக்கும்
இரையாகும் நேரத்தில் .
அடுத்த கணம் அதை மறந்து பேசுகின்றார்.
இது இயற்கை என்று அவர் மனம்
இழுக்கும் வழிநோக்கி செல்கின்றார் .
என்னே மனித இனம் ?
எவ்வளவு துன்பம் அடைந்தாலும்
இவ்வுலக வாழ்வின்மீது விடுவதில்லை மோகம் .
அழியாப் பதமஅருளும்
திங்களை முடியில் தரித்த
தில்லை நடராஜனை நினைப்பதில்லை
தித்திக்கும் அவன் நாமம் சொல்வதில்லை
மாறாக இறைவன் இருக்கின்றானா என்று
கேட்கின்றது ஒரு சில மூடர் கூட்டம்
மேலும் கேட்கிறது அவனை எனக்கு காட்டு
என்று அவனை வணங்கி மகிழும்
அடியவர்களை பார்த்து
தேனின் சுவையை
எழுத்தில் வடிக்க இயலுமோ?
சோதி பெருமானின் புகழை
சொல்லால்தான் விளக்க இயலுமோ?
தேனை உண்ணும் வண்டு
அதன் இனிமையில் மயங்கிபாடித் திரிகிறது.
இறைவனின் நாமத்தை
ஒருமையுடன்,பொறுமையுடன் ஓதினால்தான்
அவன் வடிவை சிந்தை செய்தால்தான்
அதன் இனிமை தெரியும்
மனம் தெளியும்.
மாளா பிறவி மாளும் .
//எவ்வளவு துன்பம் அடைந்தாலும் இவ்வுலக வாழ்வின்மீது விடுவதில்லை மோகம் .//
ReplyDeleteஅது தான் மோகத்தின் தனிச்சிறப்பு.
//தேனின் சுவையை எழுத்தில் வடிக்க இயலுமோ?//
அதெப்படி இயலும். ஆனாலும் அண்ணாவின் எழுத்துக்கள் தேனாக இனிக்குது எனக்கு. பாராட்டுக்கள்.
மோகம் என்ற சொல்லிலேயே மருந்து இருக்கிறது.
Deleteமோ அதாவது மோதகத்தை விரும்பும் கம் (கம் கணபதயே நமஹ என்பது கணபதியின் மந்திரம்).விநாயகனை பணிந்தால் மோகம் நம்மை விட்டு அகன்றுவிடும்.
ஆனால் அதன் உண்மை பொருளை உணராமல்
மக்கள் கம்முன்னு கிட என்று சொல்கிறார்கள்.
அதைதான் மௌனம்சர்வார்த்த சாதகம் என்று சொல்கிறார்கள்.
மௌனமாக இருந்தாலே நாட்டிலும் வீட்டிலும் பல பிரச்சினைகள் தீர்ந்துவிடும்