கண்ணனை நினைத்தால்
கள்ள மனம் காட்டும் பாதையில்
காலமெல்லாம் சென்று கண்ட
பலன் என்னவென்று கணநேரமாவது
சிந்தித்துப் பார்ப்பீர் மானிடரே ?
கடன் வாங்கி காசை தொலைத்து
கற்ற கல்வியைக் கொண்டு
கடல்கடந்து சென்று பாழும் பொருளைத்
தேடி என்ன பயன் ?
இன்பம் பொருட்களிலே தான்
இருக்கிறதென்று
நம்பி அழியும் பொருட்களை
பார்த்து பார்த்து
வீட்டை நிரப்பும் மானிடரே
சற்றே சிந்தியுங்கள்.
பொருட்களில் இன்பம் இல்லை
ஒருநாள் அழிந்துபோகும் இந்த
உடலிற்குள்தான் அந்த இன்பம்
ஒளிந்திருக்கிறது என்பதை என்றுதான்
அறிந்துகொண்டு தெளிவீரோ ?
காம சேற்றில் தள்ளி
காலமெல்லாமின்பம்
தருவதுபோல் தோற்றமளித்து
மீளா நரகத்தில் தள்ளும்
எண்ணங்களுக்கு மனதில்
இடம் தருவதை என்றுதான்
விடைகொடுக்க போகின்றீரோ ?
உருவமற்று வெளியில்
திரிந்துவந்த ஆன்மா
பிண்டமாய் தாயின் வயிற்றில்
புகுந்து குழந்தையாய்
உருவெடுத்து வெளிவந்த நாள்
முதல் தன் வடிவத்தை
மாற்றிக்கொண்டே
இருக்கும் உண்மையைக் கண்ட
பின்னும் மூடராய்
இருந்து மடிவதேனோ?
அழியாப் பதம் அளிக்க
காத்திருக்கும்
ஆபத்பாந்தவனை,
ஆயர்குல திலகனை
ஒவ்வொரு கணமும்
நினையுங்கள்.
பக்தருக்கு அனைத்தையும்
கேளாது வழங்கும்
கண்ணனை நினைத்தால்
மாளாது சலிக்கும் மனம் அடங்கும்
அவன் திருவடியில் ஒடுங்கும்
பரிதியைக் கண்ட தாமரை போல்
உள்ளம் மலரும்
வாழ்வு சிறக்கும்.
pic. courtesy-google images
-
கள்ள மனம் காட்டும் பாதையில்
காலமெல்லாம் சென்று கண்ட
பலன் என்னவென்று கணநேரமாவது
சிந்தித்துப் பார்ப்பீர் மானிடரே ?
கடன் வாங்கி காசை தொலைத்து
கற்ற கல்வியைக் கொண்டு
கடல்கடந்து சென்று பாழும் பொருளைத்
தேடி என்ன பயன் ?
இன்பம் பொருட்களிலே தான்
இருக்கிறதென்று
நம்பி அழியும் பொருட்களை
பார்த்து பார்த்து
வீட்டை நிரப்பும் மானிடரே
சற்றே சிந்தியுங்கள்.
பொருட்களில் இன்பம் இல்லை
ஒருநாள் அழிந்துபோகும் இந்த
உடலிற்குள்தான் அந்த இன்பம்
ஒளிந்திருக்கிறது என்பதை என்றுதான்
அறிந்துகொண்டு தெளிவீரோ ?
காம சேற்றில் தள்ளி
காலமெல்லாமின்பம்
தருவதுபோல் தோற்றமளித்து
மீளா நரகத்தில் தள்ளும்
எண்ணங்களுக்கு மனதில்
இடம் தருவதை என்றுதான்
விடைகொடுக்க போகின்றீரோ ?
உருவமற்று வெளியில்
திரிந்துவந்த ஆன்மா
பிண்டமாய் தாயின் வயிற்றில்
புகுந்து குழந்தையாய்
உருவெடுத்து வெளிவந்த நாள்
முதல் தன் வடிவத்தை
மாற்றிக்கொண்டே
இருக்கும் உண்மையைக் கண்ட
பின்னும் மூடராய்
இருந்து மடிவதேனோ?
அழியாப் பதம் அளிக்க
காத்திருக்கும்
ஆபத்பாந்தவனை,
ஆயர்குல திலகனை
ஒவ்வொரு கணமும்
நினையுங்கள்.
பக்தருக்கு அனைத்தையும்
கேளாது வழங்கும்
கண்ணனை நினைத்தால்
மாளாது சலிக்கும் மனம் அடங்கும்
அவன் திருவடியில் ஒடுங்கும்
பரிதியைக் கண்ட தாமரை போல்
உள்ளம் மலரும்
வாழ்வு சிறக்கும்.
pic. courtesy-google images
-
இன்பம் பொருட்களிலே தான்
ReplyDeleteஇருக்கிறதென்று
நம்பி அழியும் பொருட்களை
பார்த்து பார்த்து
வீட்டை நிரப்பும் மானிடரே
சற்றே சிந்தியுங்கள்.
நன்று சொன்னீர் ஐயா
உண்மை
இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ
அலைகின்றார்
ஞானத் தங்கமே
என்ற பாடல் வரிகள்
நினைவுக்கு வருகின்றன
ஐயா
நன்றி
நன்றி
Deleteஅழியாப் பதம் அளிக்க
ReplyDeleteகாத்திருக்கும்
ஆபத்பாந்தவனை,
ஆயர்குல திலகனை
ஒவ்வொரு கணமும்
நினையுங்கள்.
கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும் ..
கோலாகல கோகுலாஷ்டமி வாழ்த்துகள்..!
நன்றி.
Deleteகோகுலாஷ்டமி வாழ்த்துகள்..!
உங்களுக்கும்
உங்களோடு இணைந்தவர்களுக்கும்
As usual Sri Krishnan arrived in my (our)house...through you...Namaskaram
ReplyDeleteஎன்னிடமிருந்து கண்ணன்
Deleteஉங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டானா!
அவனை காணாமல்
தேடிக்கொண்டிருந்தேன்.
அது சரி அவன்தான்
எல்லா இடங்களிலும்
நிறைந்திருப்பவனாயிற்றே
நன்றி
கிருஷ்ண ஜெயந்தி
வாழ்த்துக்கள்
சிறப்புக் கவிதை மிக மிகச் சிறப்பு
ReplyDeleteகவிதைப் பொருளில்மேல் ஆசை
படர்வதை தவிர்க்க இயலவில்லை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி.
Deleteகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்
உங்களுக்கும் உங்கள் வீட்டிலுள்ள
அனைவருக்கும்.
நண்பர்களுக்கும்.
//அழியாப் பதம் அளிக்க
ReplyDeleteகாத்திருக்கும்
ஆபத்பாந்தவனை,
ஆயர்குல திலகனை
ஒவ்வொரு கணமும்
நினையுங்கள்.//
இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.
>>>>>
உங்களுக்கும் உங்கள் வீட்டிலுள்ள
Deleteஅனைவருக்கும். நண்பர்களுக்கும்.
இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்
//இன்பம் பொருட்களிலே தான்
ReplyDeleteஇருக்கிறதென்று
நம்பி அழியும் பொருட்களை
பார்த்து பார்த்து ....... // ;)))))
ஆஹா, இந்த வரிகளைப்படித்ததும் சிரித்து விட்டேன்.
மேலே காட்டியுள்ள படத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணனை ரஸித்துப்பார்த்து வந்த நான், அவன் அருகில் அவனுக்கு நிவேதனம் செய்ய வைத்துள்ள பொருட்களைக்கண்டேன். உடனே அவனை மறந்தேன்.
நானே அவனாக என்னை மாற்றிக்கொண்டேன். ஏனெனில் வஸ்துக்களில் பிரியமுள்ள கோபாலகிருஷ்ணனே நான்.
;))))) அண்ணாவிடம் அடிவாங்கும் முன் அடியேன் எஸ்கேப் ;)))))
இதற்கும் பதில் தருவீர்கள்.
அதற்கான பதில்: எஸ்கேப் ஆகி மறையக்கூடியவனும் ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் .... தாயே ..... யசோதா உந்தன் மாயன் கோபாலகிருஷ்ணன் ..... பாடலை நினைத்துப்பாருங்கோ.
பிரியமுள்ள
கோபாலகிருஷ்ணன்
கண்ணனின் நாம ருசிக்கு
Deleteநீங்கள் அடிமையாகும் வரை
உங்கள் நாவின் ருசிக்கு
அடிமையாக இருந்து துன்பபடுவது
தவிர்க்க முடியாதது.
இனிப்பை அளவுக்கு மீறி தின்றால்
கசப்பான மருந்துகளை அவைகளுக்கு
பதிலாக தின்ன நேரிடும்.
கேளாது வழங்கும்
ReplyDeleteகண்ணனை நினைத்தால்
மாளாது சலிக்கும் மனம் அடங்கும்
அவன் திருவடியில் ஒடுங்கும்////அற்புதம்! அற்புதம்!
நன்றி ஐயா!
நன்றி
Deleteஉங்களுக்கும் உங்கள் வீட்டிலுள்ள
அனைவருக்கும். நண்பர்களுக்கும்.
இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்