Monday, August 12, 2013

ஹே ! குருவாயூரப்பா!

ஹே ! குருவாயூரப்பா!








தாபத்தினால் தவிக்கும் 
மனதை தளிர்விக்கும் 
சங்கும் சக்கரமும் 
ஏந்திய தடைக்கையனே!

உன் திருவடிவம் கண்டவுடன்
மனதின் இரைச்சல்களும்
போடும் கூச்சல்களும்
அக்கணமே மறைந்ததே
அதுஎன்ன மாயம்?

மண்ணானாய், மாசில்லா
பொன்னானாய் ,மரகத
வண்ணனாய் வலம்வந்தாய்
மானிடர் வாழ்வில் ஒளி வீச
கண்ணுக்குக் கண்ணானாய்
என் சொல்வேன்
யான் பெற்ற பேற்றை

அழியும் உடலை அளித்தாய் 
நில்லாதோடும் மனதை 
அதில் வைத்தாய் .அதன் நடுவே 
என் இதயத்தில் வந்து நின்றாய் 
எப்போதும் என்னைக் காத்திடவே 
என்னே உன் கருணை !

என்ன சொல்லி உன்னை போற்றிடுவேன்
என்ன தந்து கைம்மாறு செய்வேன்.
என்றென்றும் உன் ஆயிரம் நாமங்களை
சொல்லுவேன் அன்புடனே

நான் எடுக்கும் அனைத்து பிறவிகளிலும் 
உன்னை மறவாதிருக்க வரம் அருள்வாய் 

அதுவரை அடியேனைக் காத்தருள்.
உன்னுடன் நான் அயிக்கியமாகும்  வரை. 

2 comments:

  1. அடடா, நாலாவது பதிவா? அட நாராயணா !!

    படம் ஓரளவு நல்லா இருக்கு அண்ணா.

    [இப்படிச்சொல்கிறேனே என கோச்சுக்கக்கூடாது.]

    நான் எடுக்கும் அனைத்து பிறவிகளிலும் உன்னை மறவாதிருக்க வரம் அருள்வாய் பட்டாபிராம அண்ணா. ;)))))

    நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள், அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. 20 ஆண்டுகளுக்கு முன்பு பென்சிலால் வரைந்தது
      காகிதமும் மக்கிபோய் படம் கலருக்கு வந்துவிட்டது.
      இருந்தும் கணினி உதவியுடன் ஒப்பேற்றி வைத்தேன்.
      விரைவில் புதிய படம் வெளியாகும்.

      Delete