Tuesday, August 13, 2013

குன்றை குடையாய் பிடித்தவனே குணசீல பெருமானே!

குன்றை குடையாய் பிடித்தவனே 
குணசீல பெருமானே!





பிறவிதோறும் செய்த பாவங்கள்
குன்று போல் சேர்ந்து உன்னை
நினைக்க விடாமல் என்னை
அழுத்திவிட்டன என்பதை
நீ அறியாயோ?

எல்லாம் அறிந்த ஹரியே
என் நிலையை மட்டும் அறிய
மறுக்கின்றாய் ?

சொந்தபந்தங்களைமறந்து
சொல்லாலும் நினைவாலும்
நினைக்கின்றேன்
என் ஆன்மாவில் கலந்துவிட்ட
உன்னை எப்போதும்

இன்பமும் துன்பமும்
மாறி மாறி வந்து போகும்
இவ்வுலக வாழ்க்கை நிலையற்றது
என்றறிந்தேன்

தவறாது காக்கும் உன் திருவடிகளை
சரணடைந்தேன் .தயை கூர்ந்து
என்னை காத்தருள். 

10 comments:

  1. When I am living in Kulithalai, often.. I go to Gunaseelam..every Thursday, SANTHANA KAPPU FOR PERUMAL..A"Pirambu" in his right hand..for driven away the demon..next day the Santhana Kappu Santhanam given as Prasadam..the divine smell will continue for more than 6 months...Sorry my tamil fonts are not working...
    Perumalai ninaivu paduthiyatharku Nandri.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் புண்ணியம் செய்துள்ளீர்கள்
      குணசீல பெருமானின் தரிசனம் காண

      இவன் அவனைக் காணாவிட்டாலும்
      பல ஆண்டுகளாக என் மனதில் அவன்
      திருவடிவத்தை வரையும் ஆசை இருந்துகொண்டே
      இருந்தது. இவ்வாண்டுதான் வரைந்து
      மகிழ்ந்தேன். வலை நண்பர்களுக்காக
      பதிவிட்டேன்.
      நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு
      நன்றி.
      தமிழ் எழுத்துகளுக்கு கீழே கண்ட
      வலைமுகவரியை பயன்படுத்தவும்.

      http://tamilbloggersunit.blogspot.in/2013/08/blog-post_13.html

      Delete
  2. அவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. நம்பியவருக்கு நிச்சயம் கிடைக்கும்

      Delete
  3. எங்களின் பிரதான குலதெய்வமான குணசீலம் பெருமாளை அழகாக வரைந்துள்ளீர்கள். நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு முதல்முடி காணிக்கையும் கொடுப்பதும் இந்தக்கோயிலுக்குத்தான்.

    நல்லதொரு பகிர்வு நன்றி.

    ReplyDelete
  4. எல்லாம் அறிந்த ஹரியே
    என் நிலையை மட்டும் அறிய
    மறுக்கின்றாய் ?

    குணசீலப்பெருமாள் அருமையான படம் ..!
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.
      பாராட்டுக்கும் சீராட்டுக்கும்
      உரியவன் ஹரியே

      Delete
  5. ஆயிரமாவது பதிவுக்கு
    வாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
    மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!

    ReplyDelete
    Replies
    1. உள்ளதை சொன்னேன்
      உளமகிழ்ந்து சொன்னேன்
      நன்றி

      Delete