Friday, August 16, 2013

நான்மறைகள் போற்றும் நாரணனே

நான்மறைகள்  
போற்றும் நாரணனே 




நான்மறைகள்
போற்றும் நாரணனே
நல்லோர் வணங்கும் பூரணனே

யோகிகள் உள்ளத்தில்
ஒளியாய் இருப்பாய்
போகிகளின் இல்லத்தில்
சிலையாய்
நின்றருள் செய்வாய்

ஞானிகளின் கண்ணுக்கு
அனைத்துமானாய்

அஞ்ஞானிகளின் அறிவுக்கு
எட்டா பொருளானாய்

மாயையினால்
அனைத்தையும் மறைத்தாய்

மாலவனே  உன்னை
வேண்டி நின்றால்
மாயையை போக்கி
மலர்ப்பதம் அருளுவாய்

நாதமாய் விளங்கும்
 நாத பிரம்மமே
நல்லிசையால் உன்னை
பாடி துதித்தால்
ஓடி வந்து அருள் செய்யும்
ஓம்காரநாதனே  

கண்ணனாய்  அவதரித்து
கசடர்களை அழித்தாய்

உன் காலைப் பிடித்தவர்க்கு
காமக் க்ரோதாதிகளை
அழித்து காலனை வெல்லும்
வழியறிவித்தாய்

கடமையை செய்து
பலனை எதிர்பாராது
வாழும் பக்தர்களின்
நலத்தினை காக்கும்
பொறுப்பினை ஏற்றுக்கொண்டாய்.
அவர்களை உலகம்
போற்றும்படி செய்தாய்.

பக்தரைக் காக்கும் பரந்தாமா
அரக்கரை அழிக்கும் ஆத்மராமா
அல்லும் பகலும் துதிப்பேன்
உன் நாமம் என் நெஞ்சை விட்டு நீங்காது.

6 comments:

  1. அவன் நாமம் என்றுமே நெஞ்சை விட்டு அகலாது... இறைவன் அனைவருக்கும் அருள் புரியட்டும்...

    ReplyDelete
    Replies
    1. அவன் அருள காத்துக் கிடக்கின்றான்
      நாம்தான் நம் மனதில்
      அவனுக்கு இடம் கொடுப்பதில்லை

      Delete
  2. படித்தேன், ரஸித்தேன், மகிழ்ந்தேன்.

    எல்லாமே தேன் தான். படமும் ஜோர் தான்.

    மகிழ்ச்சி அண்ணா.

    ReplyDelete
  3. படித்ததும் மெய்மறந்து நாரணனது நினைவில் நிலைக்கச் செய்தது.
    அற்புதமானதொரு பகிர்விற்கு நன்றி அய்யா!

    ReplyDelete
  4. wonderful translation in nglish by Mr. V.S.Krishnan
    http://www.thiruppugazh.org/

    Thanks Mr VSK sir.

    He who is hailed by all the Vedas;
    who is worshiped by devotees,
    who resides as light in the heart of sages
    as idol in puja rooms,
    who manifests in the eyes of the knowledgeable,
    who is inaccessible to the ignorant,
    who veils by his power of Maya,
    who destroys the darkness caused by Maya
    I worship Thee.

    He who manifests in the eternal sound of music
    who blesses those who sing His glory
    who manifested as Lord Krishna
    and destroyed the evil forces
    and established Dharma
    he who eliminates the illusion of senses
    who liberates those who seek His Lotus feet
    I worship Thee

    He protects those who does duties
    without expectation of result,
    He who protects the devotees
    and destroys the evil forces
    I seek your Lotus Feet
    May Thy grace fall upon me.

    ReplyDelete