Thursday, August 22, 2013

நினைத்தாலே இன்பம் தரும் நிர்மலனே

நினைத்தாலே 
இன்பம் தரும்  நிர்மலனே 





சிலையாய்
நின்று அருள்வோனே

மலைமேல் நிற்கும்
வேங்கடவனும் நீதான்
மதில் சூழ் காவிரி  நடுவில்
பள்ளிகொண்ட
அரங்கனும் நீதான்

குருவாயூரில் குழந்தையாய் கையில்
குழலோடு வெண்ணையுடன் காட்சி
தந்தருள்பவனும்  நீதான்.

காண்போரைஎல்லாம்
ரமிக்க  செய்யும் ராமனே
கள்ளமில்லா உள்ளங்களில்
உறையும் தூயவனே

நாமம் சொல்லச் சொல்ல
காமம் அகற்றிடுவாய்
உந்த திருவடியை சிந்திக்க சிந்திக்க
பாவங்கள் களைந்திடுவாய்.

வாடாமலர் மலர் போல் காட்சி தரும்
வானவர்களின் தலைவனே
ஒளியாய் அனைவரின் உள்ளும்
ஒளிரும் ஓங்காரநாதனே

என்றும் உன் நாமம்
என்  நாவில் இருக்கட்டும்

என் கண்கள் உன் அழகிய
திருவடிவை காணட்டும்

திக்கெட்டும் உன் புகழ்
என் செவியில் கேட்கட்டும்.

என் ஜீவன்
உன்னோடு
அயிக்கியமாகும்வரை  

4 comments:

  1. //என்றும் உன் நாமம் என் நாவில் இருக்கட்டும்;

    என் கண்கள் உன் அழகிய திருவடிவை காணட்டும்

    திக்கெட்டும் உன் புகழ் என் செவியில் கேட்கட்டும்.

    என் ஜீவன் உன்னோடு அயிக்கியமாகும்வரை //

    நினைத்தாலே இன்பம் தரும் நிர்மலனே
    அருமை, மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. படிக்க படிக்க இன்பம் தருகிறது... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete