Sunday, August 18, 2013

எல்லாம் இருந்தும் அது இருந்தால் அழிவுதான்

எல்லாம் இருந்தும் 
அது   இருந்தால் அழிவுதான் 




எல்லாம் இருந்தும் கண்டிப்பாக
இருக்க கூடாதது ஒன்று உள்ளது
அது இருந்தால் எல்லாம் வீணே
அது என்ன?

ராவணன் இசை மேதை 
இசையில்வல்லவனாயிருந்தும் அவனால்
மற்றவர்களுடன் இசைந்து வாழ முடியவில்லை
காரணம் என்ன ?அது அவனிடத்தில் இருந்ததால்
அவனுக்கு அமைதியில்லை. அது   என்ன ?

அதுதான் பொறாமை .
பொறாமை இருந்தால்
அவ்வளவும் வீணே. அது
ஒரு அணையாத நெருப்பு.
அதை முழுவதும் அணைக்கப்படாவிடில்
அது இருக்கும் இடத்தையே எரித்து சாம்பலாக்கிவிடுவதொடு அவனை அண்டியிருப்பவர்களியும், சுற்றியிருப்பவர்களையும் தின்று தீர்த்துவிடும்.


ராவணன் சிறந்த சிவ  பக்தன் 
சிவனை துதித்து  பல வரங்களை பெற்றவன்.
இருந்தும்  ஆணவத்தால் அறிவிழந்து தனக்கு வரம் கொடுத்த
சிவன் உறையும் கைலாய மலையையே பிடித்து உலுக்கினான்.
சிவன் கோபம் கொண்டு தன்  கால் கட்டை விரலால்
மலையை அழுத்த அதன் அடியில் அமுங்கி போனான்.

பிறகு அவனை துதிக்க அவன் 90 தலைகளை கொய்து
பத்து  தலைகளுடன் லங்காபுரிக்கு  செல்ல அனுமதிதான்
அப்போதும் அது அவனிடம் தலை தூக்கி நின்றது.
90 தலைகளை இழந்தும் அவன் பாடம் கற்கவில்லை.

உலகை நெறிப்படுத்தும் கோள்களை
அவன் தனக்கு அடிமையாக்கினான்
உலகனைத்தும் . தனக்கு அடிமை செய்ய.

வாலியை எதிர்த்து அவனிடம்
 உதை  வாங்கினான் .அடங்கி அமரசம் செய்துகொண்டான்.

ராவணன் சர்வ சக்தி படைத்தவன்.
அவனுக்கு அழகான மனைவிமண்டொதரி மற்றும் ஏராளமான
நாயகிகள். இருந்தும் அவன் தன தங்கை சூர்பனகை பேச்சை கேட்டு
சீதையை கவர்ந்து ராமன்விட்ட அம்பினால் மாண்டான்.
அவன் குலமும் அழிந்தது

இதற்கெல்லாம் காரணம் ஆணவம் 
என்னும் அகந்தைதான். 

எல்லாம் இருந்தும் அது இருந்துவிட்டால்
அழிவுதான் அனுதினமும் அவர்களை தொடரும்.

அழிவில்லாமல் இருக்க பல  ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து பெற்ற வரத்தை மூடர்கள் கையில் கிடைத்த செல்வம் அவர்களுக்கு பயன்படாமல் வீணாவதைப்போல்  அவர்கள் கண் முன்னேயே அவர்கள் அழிவை சந்திப்பார்கள் என்பதற்கு ராவணன் ஒரு உதாரணம்.

வாலியைப் போல் பலம் பொருந்தியவன் 
எந்த உலகத்திலும் கிடையாது. அவனை வெல்ல எந்த சக்தியும் இல்லை. ஆணவத்தினால். தம்பி சுக்ரீவனின் கூறிய உண்மையை செவி மடுக்காமல் அவனை கொல்ல  துணிந்து அவன் மனைவியையும் தனதாக்கிகொண்டான். முடிவில் மனிதஉருவில் வந்த இறைவனால் மாண்டான்.

காரணம் என்ன?

அவனிடத்தில் அன்பில்லை. பொறுமையில்லை சகிப்புத்தன்மை இல்லை ஆணவம்தான் மேலோங்கி நின்றது. அதுவே அவனை அழித்தது.

இந்த உலகில் கோடிக்கணக்கான 
பராக்கிரமசாலிகள் தவத்தினால் கிடைத்த சக்திகளை கொண்டு பிறருக்கு நன்மை செய்ய படுத்தியவர்கள் கோடியில் ஒருவரே.

மற்றவர்களெல்லாம் அகந்தை கொண்டு 
பிறரை துன்புறுத்தி. தானும் அழிந்தனர் என்பதுதான் புராணங்களும் இதிகாசங்களும் நமக்கு புகட்டும் பாடம்.

இது போன்ற மூடர்களை ஒழுக்க கேடர்களை 
தலைவனாக ஏற்றுக்கொண்ட நாடுகள் 
தரைமட்டமாக அழிந்து போயின என்பதற்கு 
நடந்து முடிந்த உலக போர்களே சான்று, 

சர்வாதிகாரிகள் கையில் சிக்கி சீரழிந்துபோன  
பல நாட்டு வரலாறுகளே சான்று. 

புராண கதைகளை படித்தால் மட்டும் போதாது.
அனுதினமும் கேட்டால் மட்டும் போதாது

பலாப்பழத்தில் உள்ள இனிப்பான,
நன்மைதரும் பழத்தையும் ,பருப்பையும்
எடுத்து பயன்படுத்திக்கொள்ள தெரிந்து கொள்ளவேண்டும்.

இல்லாவிடில் அவர்கள் இரண்டையும் விட்டுவிட்டு
ஒன்றுக்கும் உதவாத மேல்தொலையும்
சடையையும் தின்னும் மாடுகளுக்கு ஒப்பாவார்கள்.

சிந்தையில் அகந்தை தலை தூக்காதிருக்க 
அகந்தை வடிவாம் ராவணனை, வாலியை,அழித்த 
நம் எண்ணங்களில் புகுந்துகொண்டு நம்மையெல்லாம் 
ஒவ்வொரு கணமும் ஆட்டிப் படைக்கும் தீய குணங்கள் என்னும் அசுரர்களை அழிக்க ஆத்மராமனை சரணடைவோம்.  

2 comments:

  1. /// பலாப்பழத்தில் உள்ள இனிப்பான,
    நன்மைதரும் பழத்தையும் ,பருப்பையும்
    எடுத்து பயன்படுத்திக்கொள்ள தெரிந்து கொள்ளவேண்டும். ///

    சரியான விளக்கம் ஐயா.... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பன்ருட்டி பலாச்சுளை போன்ற சுவையான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete