Sunday, August 18, 2013

எதனாலே?

எதனாலே?




தரையில் விழுந்து கிடக்கும்
காய்ந்த சிறகு
வானத்தில் பறப்பது
எதனாலே?

கண்ணுக்கு தெரியா
காற்று வீசி
அதை பறக்க வைத்தது
அதனாலே

ஆற்று நீரில் விழுந்த
கட்டை ஓடுவது எதனாலே?

ஓடும் ஆற்று நீரினால்
கட்டை அடித்து சென்றது
அதனாலே

உயிர்கள் இங்குமங்கும்
ஓடுவது எதனாலே?

அதன் உள்ளும் புறமும்
வந்து போகும்
மூச்சுக்  காற்றாலே

கவின்மிகு காட்சிகளை
கண்களால் காண்பது
எதனாலே?

ஒளியாம் இறைவன்
உள்ளும் புறமும்
ஒளி வீசுவதினாலே

தேனினும் இனிமையாம்
ஒலியை கேட்டு
மகிழ்வது எதனாலே?

நாத பிரம்மமாம்
இறைவனிடமிருந்து
வெளிப்படும்
ஓம்கார ஒலியாலே ?

எல்லாம் இருந்தும்
அவன் உன் உள்ளே
இல்லாமல்
போனால்
நீ மண்ணுக்குள்ளே
அல்லவோ
போக நேரிடும்?

இந்த உண்மையை
எண்ணி பார்ப்பீர்

அகந்தையை விட்டு
அவன் பாதம்
சரணடைவீர்.
அன்புடன் வாழ்வீர்
ஆனந்தம் பெறுவீர். 

7 comments:

  1. பாடலாக பாடிப் பார்த்தேன்... அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. எங்கே உங்களை நெடுநாட்களாக காணோம்?
      என்னை மறந்துவிட்டீர்கள் என்று நினைத்தேன்.
      வருகைக்கு நன்றி

      Delete
  2. அருமை அருமை.

    எதனாலே? என்றே அறியாமல் அறியாமையில் இருந்த எங்களைத் தெளிய .+ தெரியச்செய்த அண்ணா வாழ்க.

    ReplyDelete
  3. ஆகா ஆகா... அருமையான கவிதை... எதனாலே, அதனாலே... நல்ல தொகுப்பு....

    பாராட்டுகள்...

    ReplyDelete
  4. எதனாலே
    எதனாலே
    என்றே கேட்டு
    எல்லாம்
    அவனாலே
    அவனாலே

    என்று
    எளிமையாய்
    அருமையாய்
    சொன்னீர்கள்
    அய்ய நன்றி

    உணர்ந்தால்
    உண்டு
    நன்மை

    ReplyDelete