நல்லதோர் நாடு நம்நாடு
அவன்தான்
அந்நாளில் முடி சார்ந்த
மன்னரும் அவன்
திருவடி பணிந்து
மகிழ்ந்தனர்.
காலத்தால் நிலைத்து நிற்கும்
கலைக் கோயில்களை அமைத்து
மகிழ்ந்தனர்.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்
என்று பிதற்றி திரியும் தற்கால
மனிதர்கள் இறைவனே இல்லை
என்று அகந்தை கொண்டு
தானே இறைவன் என்று
அகந்தையுடன் அலைகின்றனர்.
இருந்தும் இறை பக்தி
மக்களின் உள்ளத்தில் பூமிக்கடியில்
உள்ள நீரூற்று போல் அவ்வப்போது
வெளிப்பட்டுதான் கொண்டிருக்கிறது.
கடவுளே இல்லை என்ற மூடர்களின் பிரசாரம்
இருளில் சிறிதுநேரமே பிரகாசிக்கும்
மின் மினிப் பூச்சிகள் போல் பொழுது விடிந்தால்
ஆதவன் முன் காணாமல் போகுமன்றோ?
அலை பாயும் மனதை அடக்கும் வழி
அந்த அலைகடல் மேல் துயிலும் மாதவன்
திருவடிகள்தான் என்பதை உணர்ந்தோர் அவன்
கோயிலை நாடி செல்கின்றனர் இன்று.
சோதி சுடராய் நின்ற சிவனோ
குளிர்ந்தான் அண்ணா மலையாக
அடியவர்களுக்கு நிலைத்த
ஆனந்தம் தரவே
வேலுண்டு வினையில்லை
அவன் தாளுண்டு பயமில்லை என்று
குன்றுதோறும் குடியிருக்கும் குமரன் கோயிலை
நாடி ஓடுது பக்தர் கூட்டம்
அம்மா அம்மா என்றழைத்தால்
அக்கணமே ஓடி வந்து துன்பம் போக்கும்
அம்மன் சன்னதிக்கு தீ மிதிக்க போட்டி
போட்டுக்கொண்டு ஆடி பாடி செல்கிறது
ஆயிரமாயிரம் அன்பர் கூட்டம்
உள்ளத்திலே சாய் நாமம் கொண்டால்
இவ்வுலக வாழ்வு இனித்திடும் என்பதை
கண்டுகொண்டோர் அவன் கோயிலை
அனுதினமும் நாடி பணிந்து
மகிழ்கின்றார் கோடி கோடி
எல்லாம் அவன் செயல் என்றறிந்த
நல்லோர் சும்மா இருந்து சுகம் பெறுகின்றார்.
ஆருயிர்கெல்லாம் அன்பு செய்து
அகம் குளிர்கின்றார்.
நல்லதோர் நாடு நம்நாடு
எப்போதும் நல்லதையே நாடும் நாடு
எல்லோரும் எல்லாமும் பெற்று
இன்புற்றிருக்க எண்ணம் கொண்ட நாடு
இந்நாட்டில் பிறக்க புண்ணியம்
பல செய்திருக்கவேண்டும்.
அழியாப் பதம் அருளும் ஆனந்த அழகு
திருவடிவங்களாம் தெய்வங்கள் ஆயிரமாயிரம்
இங்கிருக்க அதை உணராது
அழியும் பொருள் தேடுவதே வாழ்க்கை
என்று எண்ணி அலைந்தால் என்ன செய்ய ?
//நல்லதோர் நாடு நம்நாடு
ReplyDeleteஎப்போதும் நல்லதையே நாடும் நாடு
எல்லோரும் எல்லாமும் பெற்று
இன்புற்றிருக்க எண்ணம் கொண்ட நாடு
இந்நாட்டில் பிறக்க புண்ணியம்
பல செய்திருக்கவேண்டும்.//
மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். புண்ணிய பூமியாம் பாரத நாட்டில் பிறந்ததே நமக்கோர் பெருமை.
எல்லாம்
Deleteபழத்தில்தான் இருக்கிறது.
நாரதர் கொடுத்த மாம்பழத்தினால்தான்
நமக்கு வேழமுகம் கிடைத்தது
அதோடு ஆறுமுகமும் கிடைத்தது
காரைக்காலம்மையாரின்
சிவன் புகழ் பாடும்
அற்புத திருவந்தாதி கிடைத்தது.
அதியமான் அளித்த
நெல்லிக்கனியினால் அல்லவோ
நெடுநாள் வாழ்ந்த அவ்வை விநாயகர் அகவல்
உள்ளிட்ட ஏராளமான ஞான நூல்களை
நமக்கு அளித்துள்ளாள் .
பரிஷித்து மகாராஜா பெற்ற சாபத்தினால்
அல்லவோ எலிமிச்சை வடிவில் வந்த விதி
நமக்கு கண்ண பரமாத்மாவின் பாகவதம்
கிடைக்க வழி கோலிற்று