கண்ணா உன் சொல் கேளாது போனால்?
கள்ளம் கபடமற்ற
கன்றுக்குட்டிக்கும்
கருணை காட்டும் கண்ணா
ஞானமில்லா இந்த
கற்றுகுட்டிக்கும்
கருணை செய்ய மாட்டாயா?
எவ்வுயிர்க்கும் இறைவன்
நீதான் என்றறிந்தால்
மானிடர் பிற உயிர்க்கு
தீங்கு விளைவிப்பரோ?
உள்ளத்தில் அன்பில்லா மனிதர்கள்
உயிர்களை வதைத்து
உன் வடிவங்களுக்கு பூஜை
செய்வதால் யாது பயன்?
அஞ்ஞானம் நீங்கிடவே
அர்ஜுனனுக்கு கீதை தந்தாய்
அகிலத்து மாந்தர் அதன் உண்மை
பொருளுணராது அவரவர்
மனம்போல் அர்த்தம் கொண்டனர்
அனர்த்தம் விளைவித்தனர்
அமைதி இழந்து தவிக்கின்றனர்
அனைத்து செயல்களின் பலனையும் உன்
திருவடிக்கு அர்ப்பணம் செய்ய சொன்னாய்
அப்போது உன்னை காக்கும் பொறுப்பு
தன்னுடையதென்றாய் .
அகந்தை கொண்ட மானிடரோ
அனைத்தும் தன்னால்தான் என்று
பிதற்றி திரிகின்றார்..எப்போதும்
மன நிம்மதியின்றி தவிக்கின்றார்
உன் சன்னதிக்கு வந்தாலும்
உன்புகழ் பாடினாலும்
உன் சொல் கேளாது போனால்
யாது நன்மை விளையும்?
கள்ளம் கபடமற்ற
கன்றுக்குட்டிக்கும்
கருணை காட்டும் கண்ணா
ஞானமில்லா இந்த
கற்றுகுட்டிக்கும்
கருணை செய்ய மாட்டாயா?
எவ்வுயிர்க்கும் இறைவன்
நீதான் என்றறிந்தால்
மானிடர் பிற உயிர்க்கு
தீங்கு விளைவிப்பரோ?
உள்ளத்தில் அன்பில்லா மனிதர்கள்
உயிர்களை வதைத்து
உன் வடிவங்களுக்கு பூஜை
செய்வதால் யாது பயன்?
அஞ்ஞானம் நீங்கிடவே
அர்ஜுனனுக்கு கீதை தந்தாய்
அகிலத்து மாந்தர் அதன் உண்மை
பொருளுணராது அவரவர்
மனம்போல் அர்த்தம் கொண்டனர்
அனர்த்தம் விளைவித்தனர்
அமைதி இழந்து தவிக்கின்றனர்
அனைத்து செயல்களின் பலனையும் உன்
திருவடிக்கு அர்ப்பணம் செய்ய சொன்னாய்
அப்போது உன்னை காக்கும் பொறுப்பு
தன்னுடையதென்றாய் .
அகந்தை கொண்ட மானிடரோ
அனைத்தும் தன்னால்தான் என்று
பிதற்றி திரிகின்றார்..எப்போதும்
மன நிம்மதியின்றி தவிக்கின்றார்
உன் சன்னதிக்கு வந்தாலும்
உன்புகழ் பாடினாலும்
உன் சொல் கேளாது போனால்
யாது நன்மை விளையும்?
//உன் சன்னதிக்கு வந்தாலும்
ReplyDeleteஉன்புகழ் பாடினாலும்
உன் சொல் கேளாது போனால்
யாது நன்மை விளையும்?//
கண்ணா = அண்ணா.
அண்ணா சொல் கேளாது போனால் தம்பிக்கு அடி விழும்.
அடி உதவுவதுபோல்
Deleteஅண்ணன் தம்பி
உதவ மாட்டான் என்பார்கள்
அடித்து விட்டேன் உரிமையில்
எல்லாம் உங்கள் நன்மைக்காக