Friday, August 30, 2013

கோகுலாஷ்டமி சிந்தனைகள்

கோகுலாஷ்டமி சிந்தனைகள் 





கோகுலாஷ்டமியை
கோலாகலமாக
கொண்டாடி ,மகிழ்ந்தது
கோவிந்தனின்
அடியார்கள் கூட்டம்




கண்ணுக்கினியானை
காண்போர் உள்ளத்தை
கொள்ளை  கொள்வானை
தன்னை கொல்ல கம்சன்
அனுப்பிய மதம் கொண்ட
யானையை கொன்றவனான கண்ணன்
மதம் பிடித்து மற்றவர்களை
துன்புறுத்தும் மனிதர்களை திருத்தி
மனித நேயமுள்ளவர்களாக
மாற்றியருளட்டும்




அழியும் உடலே தானென்று எண்ணி
மதி மயங்கி இருந்த மக்கள் கூட்டத்திற்கு
தான் உடலல்ல அழியாத,எந்த சக்தியாலும்
அழிக்கமுடியாத ஆன்மா என்று
ஒவ்வொரு மனிதரின் உள்ளத்தில்
நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்கும்
நடைபெறும் இடைவிடாத போரின் இடையே
இனிக்க இனிக்க தன்  திருவாயால் மொழிந்த
கீதை ஆசிரியனான கண்ணனுக்கு
நாம் அனைவரும் நன்றி கூறுவோமாக




உடலும் உடலும் சேரும் காம இச்சையை
இன்பமென்று எண்ணி திரிந்த காமுகர்களுக்கு
நிலைத்த இன்பம் ஜீவாத்மாவும்  பரமாத்மாவும்
கூடுவதுதான் என்று தன்  ராச  லீலை மூலம்
உலகுக்குணர்த்திய உத்தம பேரொளியே
உனக்கு வணக்கம்

எதைக் கொண்டு வந்தாய்
நீ இவ்வுலகத்திற்கு வரும்போது
எதைக் கொண்டு செல்லமுடியும்
உன்னோடு  இவ்வுலகத்தை விட்டு நீங்கும்போது
பற்றுகளை விட்டுவிட்டு பரந்தாமனாகிய
என் பாதங்களை பற்றிக்கொள் என்று
பரம கருணையுடன் பாருக்குரைத்த
அந்த பரம தயாள மூர்த்தியின்
பாதங்களை பற்றிகொள்வோம்.




உன்னை கண்டாலும் இன்பம்
உன் சரிதம் கேட்டாலும் இன்பம்
உன் மொழிகளை செவி மடுத்து செயல்பட்டால்
இப்புவியில் உள்ளோரை என்றும் பற்றாது துன்பம்

Pic.courtesy-google images. 

2 comments:

  1. அற்புதமான படங்களுடன் அருமையான சிந்தனைகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    [ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தங்களை அழைக்கிறார். உடனே வாங்கோ. பகுதி-44 இல் தரிஸனம் செய்து கொள்ளுங்கோ]

    ReplyDelete