Wednesday, August 7, 2013

வேமன்னாவின் சொல்லமுதம்(2)


வேமன்னாவின் சொல்லமுதம்(2)

வேமன்னாவின் சொல்லமுதம்  



ஆத்மாவில் சுத்தமில்லாமல் ஆச்சாரமாக மடியாக இருந்து என்ன பயன்? பாத்திரத்தை சுத்தமாக துலக்காமல் பாயசம் அதில் பண்ணி என்ன புண்ணியம்? சித்தத்தை அவன் பாலே வைக்காத சிவன் பூஜையால் யாருக்கு பலன் ?

ஆசாரம் என்றால் என்ன ?
சுத்தமாக இருத்தல் .சுத்தமாக என்றால்?
உடல் சுத்தமாக இருக்கவேண்டும்
சுத்தமான நீரில்  .நன்றாக குளித்து
துவைத்து உலர்ந்த துணிகளை உடுத்தவேண்டும்.
அவரவர் குல வழக்கப்படி இறைவனை
குறிக்கும் சின்னங்களை இறை நினைவோடு
அணிந்துகொள்ளவேண்டும்.

அதைதான் திருவள்ளுவர்.
புறத்தூய்மை நீரால் அமையும் என்றார்.

அப்புறம் மனம் சுத்தமாக
இருக்கவேண்டும்.

மனம் எப்படி சுத்தப்படும்.?

அகத் தூய்மை வாய்மையால் காணப்படும்
என்றார் திருவள்ளுவர்.

உண்மையே பேசவேண்டும்.
பொய் உரைக்கக்கூடாது.
ஏனென்றால் அது பல தீய பழக்கங்களுக்கு தாய்
ஒரு தீய பழக்கம் அதனுடன்  நூற்றுக்கணக்கான
தீய குணங்களை உற்பத்தி செய்துவிடும்.

தூய்மை இல்லாத மனத்தால்
பூஜை செய்து என்ன பயன்?

பூஜை செய்வதற்கு மனம்
ஒருமைப்படவேண்டும்.
புலன்களும் உடலும்
ஒத்துழைக்கவேண்டும்

அதோடு நம்மை சேர்ந்தவர்களும்
ஒத்துழைக்க வேண்டும்.
அதற்க்கு நாம் ஒழுங்காக
இருக்கவேண்டும்,
ஒழுக்கமாக இருக்கவேண்டும்.
நம்மை சார்ந்தவர்களையும்
நல்ல வழியில்
பயிற்ருவிக்கவேண்டும்

ஆனால் யாரும்
அதை செய்வது கிடையாது
சில வீடுகளில்  தாய் மட்டும்
அதிகாலையில் எழுந்து
குளித்து பூஜை செய்வாள்

மற்ற ஜன்மங்கள் கும்பகர்ணனுக்கு
இரண்டாவதாக தூங்கி
வழிந்துகொண்டிருக்கும்.

சில வீடுகளில் கணவன்பக்தியுடனிருப்பான்
மனைவியும், குழந்தைகளும் பல்லை கூடத் தேய்க்காமல்
தொலை காட்சியிலேயோ  கைபேசியிலேயோ  முகத்தை புதைத்துக்கொண்டிருக்கும்.

இப்படி இருந்தால் அந்த குடும்பம்
எப்படி உருப்படும்?என்று சொல்வார்கள்.
ஆனாலும் யாரோ செய்த புண்ணியத்தால்
அந்த குடும்பங்களும் உருப்படத்தான் செய்கின்றன.

இறைவனை மன ஒருமைப்பாட்டுடன்
நினைக்கவேண்டும். அப்படிப்பட்ட
ஒருவரோடுதான் உறவு கொள்ள வேண்டும்
என்று வள்ளலார் சொன்னார்.

உண்மையில் எங்கே
மனம் ஒருமைப்படுகிறது?

பூஜை செய்யும்போதுதான்
பல இடையூறுகள்.மனதுள்ளும்
நம்மை சுற்றியும்.

என்ன செய்வதுகடலில்
அலைகள் எங்கேயாவது ஓயுமா?.

எல்லா ஹிம்சைகளுக்கும்
இடையேதான் நாம்  சாதனை செய்து
ஆன்மாவை  கடைத்தேற்ற வேண்டும்

நன்றி-கவிதை மூலம்.http://amrithavarshini.proboards.com/thread/30/vemana-2

2 comments:

  1. //சில வீடுகளில் தாய் மட்டும் அதிகாலையில் எழுந்து
    குளித்து பூஜை செய்வாள். மற்ற ஜன்மங்கள் கும்பகர்ணனுக்கு இரண்டாவதாக தூங்கி வழிந்துகொண்டிருக்கும்.//

    //சில வீடுகளில் கணவன்பக்தியுடனிருப்பான்
    மனைவியும், குழந்தைகளும் பல்லை கூடத் தேய்க்காமல்
    தொலை காட்சியிலேயோ கைபேசியிலேயோ முகத்தை புதைத்துக்கொண்டிருக்கும்.//

    ஆமாம். மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். உருப்படாத தொலைகாட்சிப் பெட்டியைப் பார்ப்பதால் பல குடும்பங்களில் கணவன் மனைவி ஒற்றுமையே மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. யாரையும் யாரும் லட்சியமே செய்வது இல்லை.

    //எல்லா ஹிம்சைகளுக்கும் இடையேதான் நாம் சாதனை செய்து ஆன்மாவை கடைத்தேற்ற வேண்டும்.//

    மிகவும் கஷ்டமான சாதனை தான். ;)))))

    ReplyDelete
    Replies
    1. கஷ்டப்பட்டு சாதனை செய்தால்
      இஷ்டப்பட்டதைஎல்லாம்
      அடைந்து மகிழலாம்

      Delete