பணிந்து போற்றுவோம்.
ஆடிபூரத்தில் அவதரித்த
அழகுத் தெய்வம் ஆண்டாள்
ஆடிப் பூரம் நன்னாளில்
அவனியில் அவதரித்து
வந்தாள் கோதை என்னும்
ஆண்டாள் அரங்கனின்
ஆன்மாவோடு கலந்திட்டாள்
மறையோர்கள் தனக்கு
மட்டும் சொந்தமாக கொண்டாடிய
இறை ஞானத்தை பாமரரும்
கற்று உய்ய எளிமையாக்கி தந்தாள்
திருப்பாவை என்னும் பாசுரமாய்
மார்கழியாம்மாதம் தன்னை
மாலவனின் புகழ் பாடும்
மாதமாய் ஆக்கிகொண்டான்
அந்த சூடி கொடுத்த சுடர்க்கொடியோன்
இவ்வுலக மோக சுரம் நீங்கிடவே
திருப்பாவை பாசுரங்கள்
பக்தியோடு பாடி பரவுபவர்கள்
பரமனின் திருவடிகள்
பத்திரமாய் அடைந்திடுவார்.
பாரெங்கும் பசுமை தழைக்க
பாங்காகப் பண்கள் பாடினாள்
வள்ளல் பெரும்பசுக்களை
வானளாவ வாழ்த்திப் புகழ்ந்தாள்
மழை கடவுளாம் மாலே
மணிவண்ணனின் புகழ்பாடி
மாநிலத்தில் மழை பொழியச் செய்தாள்
மக்களின் மனங்களிலும்
பக்தி மழையையும் சேர்த்து
துளசி வனத்தில் பெரியாழ்வார்
கண்டெடுத்த தூய மலர் கோதை
கண்ணனின் புகழ் பாடுவதை
தவிர வேறொன்றும் அறியாத பேதை
அடியவரின் வேதை தீர அன்புடனே
பாசுரங்கள் தந்த அந்த தெய்வத்தை
அனுதினமும் போற்றுவோம்.
அடிபணிந்து இக புற சுகமெல்லாம்
பெற்று மகிழ்வோம்.
ஆடிபூரத்தில் அவதரித்த
அழகுத் தெய்வம் ஆண்டாள்
ஆடிப் பூரம் நன்னாளில்
அவனியில் அவதரித்து
வந்தாள் கோதை என்னும்
ஆண்டாள் அரங்கனின்
ஆன்மாவோடு கலந்திட்டாள்
மறையோர்கள் தனக்கு
மட்டும் சொந்தமாக கொண்டாடிய
இறை ஞானத்தை பாமரரும்
கற்று உய்ய எளிமையாக்கி தந்தாள்
திருப்பாவை என்னும் பாசுரமாய்
மார்கழியாம்மாதம் தன்னை
மாலவனின் புகழ் பாடும்
மாதமாய் ஆக்கிகொண்டான்
அந்த சூடி கொடுத்த சுடர்க்கொடியோன்
இவ்வுலக மோக சுரம் நீங்கிடவே
திருப்பாவை பாசுரங்கள்
பக்தியோடு பாடி பரவுபவர்கள்
பரமனின் திருவடிகள்
பத்திரமாய் அடைந்திடுவார்.
பாரெங்கும் பசுமை தழைக்க
பாங்காகப் பண்கள் பாடினாள்
வள்ளல் பெரும்பசுக்களை
வானளாவ வாழ்த்திப் புகழ்ந்தாள்
மழை கடவுளாம் மாலே
மணிவண்ணனின் புகழ்பாடி
மாநிலத்தில் மழை பொழியச் செய்தாள்
மக்களின் மனங்களிலும்
பக்தி மழையையும் சேர்த்து
துளசி வனத்தில் பெரியாழ்வார்
கண்டெடுத்த தூய மலர் கோதை
கண்ணனின் புகழ் பாடுவதை
தவிர வேறொன்றும் அறியாத பேதை
அடியவரின் வேதை தீர அன்புடனே
பாசுரங்கள் தந்த அந்த தெய்வத்தை
அனுதினமும் போற்றுவோம்.
அடிபணிந்து இக புற சுகமெல்லாம்
பெற்று மகிழ்வோம்.
ஆடிப் பூரத்தில் அவதரித்த ஆண்டாளை பணிந்து போற்றுவோம்
ReplyDeleteபணிந்து போற்றுவோம்
Deleteஆண்டாள் ..... அந்தப்பெயரே அழகு.
ReplyDeleteஎங்கள் தெருவினை சிலர் ’ஆண்டாள் தெரு’ என்றும் சிலர் ’ஆண்டார் தெரு’ என்றும் அழைக்கிறார்கள்.
ஆண்டாள் படமும், தங்கள் பதிவும் என் மனதை மயக்குது.
பாராட்டுக்கள், ஸ்வாமீ.
இரண்டும் ஒன்றுதான்
Deleteஇறைவனை ஆண்டவள் ஆண்டாள்
அவளை ஆட்கொண்டவர் ஆண்டார்