பண்டரீ மிட்டாய்
மிட்டாய் வாங்கலையோ பண்டரீ
மிட்டாய் வாங்கலையோ
பாண்டுரங்கனாதர் வந்து
பக்தர்களை கொடுக்கச் சொன்ன (மி)
காம குரோதங்கள் ஒழிக்கும் மிட்டாய்
கர்ம வினைகள் தீர்க்கும் மிட்டாய்
நேமமுள்ள பக்தர் வாங்கும் மிட்டாய்
நிர்மல ஞானத்தை கொடுக்கும் மிட்டாய் (மி)
ராக த்வேஷங்கள் போக்கும் மிட்டாய்
ரகசியமானதை கிடைக்கும் மிட்டாய்
மோக இச்சையை கெடுக்கும் மிட்டாய்
முக்தி பதத்தை கொடுக்கும் மிட்டாய் (மி)
பாசபந்தகள் அறுக்கும் மிட்டாய்
நேசமுடன் பரம் சேர்க்கும் மிட்டாய்
ஆசைகளற்ற அன்பர்கள்
விசுவாசமாக வாங்கும் மிட்டாய் (மி)
நிலையற்றதை தவிர்க்கும் மிட்டாய்
நிலைத்த பொருளில் சேர்க்கும் மிட்டாய்
விலைமதிக்க ஒண்ணாத மிட்டாய்
விட்டலநாமமளிக்கும் மிட்டாய் (மி)
காசு பணத்தினால் சிக்காத மிட்டாய்
கவலையுள்ளோர்ற்கு சிக்காத மிட்டாய்
நேசமாய் பரவாசுதேவனை
நித்யம் நினைப்போர் வாங்கும் மிட்டாய் (மி)
பக்திரசத்தினை நிறைத்த மிட்டாய்
பகவானுக்குகந்த மிட்டாய்
முக்தரனு தினம் மோனத்தில் நின்று
முகுந்தனை துதித்த மிட்டாய் (மி)
மங்கள புரிதனிலே
மாணிக்கத் தெருவினிலே
மகத்துவமாய் நின்றிலங்கும்
மனோகரமான மிட்டாய் (மி)
பாமரர்கள் போலில்லாமல்
பற்றற்ற நிலையில் நின்று
ராமலிங்க தாசர் நிதம் ரம்யமாய்
புசிக்கப்பட்ட மிட்டாய். (மி)
(இந்த கீர்த்தனையை இயற்றியவர் சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ ராமலிங்க பாகவத ஸ்வாமிகள் ஆவார். இவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் சீடராவார்.அவர் இதுபோன்ற பல எளிமையான பாடல்களை சௌராஷ்ட்ரம்,தமிழ்,தெலுங்கு மொழிகளில் இயற்றியுள்ளார். அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் விவேகானந்தாச்ரமம் 1969 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு நூலிலிருந்து பக்தர்களுக்காக தந்துள்ளேன்)
மிட்டாய் வாங்கலையோ பண்டரீ
மிட்டாய் வாங்கலையோ
பாண்டுரங்கனாதர் வந்து
பக்தர்களை கொடுக்கச் சொன்ன (மி)
காம குரோதங்கள் ஒழிக்கும் மிட்டாய்
கர்ம வினைகள் தீர்க்கும் மிட்டாய்
நேமமுள்ள பக்தர் வாங்கும் மிட்டாய்
நிர்மல ஞானத்தை கொடுக்கும் மிட்டாய் (மி)
ராக த்வேஷங்கள் போக்கும் மிட்டாய்
ரகசியமானதை கிடைக்கும் மிட்டாய்
மோக இச்சையை கெடுக்கும் மிட்டாய்
முக்தி பதத்தை கொடுக்கும் மிட்டாய் (மி)
பாசபந்தகள் அறுக்கும் மிட்டாய்
நேசமுடன் பரம் சேர்க்கும் மிட்டாய்
ஆசைகளற்ற அன்பர்கள்
விசுவாசமாக வாங்கும் மிட்டாய் (மி)
நிலையற்றதை தவிர்க்கும் மிட்டாய்
நிலைத்த பொருளில் சேர்க்கும் மிட்டாய்
விலைமதிக்க ஒண்ணாத மிட்டாய்
விட்டலநாமமளிக்கும் மிட்டாய் (மி)
காசு பணத்தினால் சிக்காத மிட்டாய்
கவலையுள்ளோர்ற்கு சிக்காத மிட்டாய்
நேசமாய் பரவாசுதேவனை
நித்யம் நினைப்போர் வாங்கும் மிட்டாய் (மி)
பக்திரசத்தினை நிறைத்த மிட்டாய்
பகவானுக்குகந்த மிட்டாய்
முக்தரனு தினம் மோனத்தில் நின்று
முகுந்தனை துதித்த மிட்டாய் (மி)
மங்கள புரிதனிலே
மாணிக்கத் தெருவினிலே
மகத்துவமாய் நின்றிலங்கும்
மனோகரமான மிட்டாய் (மி)
பாமரர்கள் போலில்லாமல்
பற்றற்ற நிலையில் நின்று
ராமலிங்க தாசர் நிதம் ரம்யமாய்
புசிக்கப்பட்ட மிட்டாய். (மி)
(இந்த கீர்த்தனையை இயற்றியவர் சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ ராமலிங்க பாகவத ஸ்வாமிகள் ஆவார். இவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் சீடராவார்.அவர் இதுபோன்ற பல எளிமையான பாடல்களை சௌராஷ்ட்ரம்,தமிழ்,தெலுங்கு மொழிகளில் இயற்றியுள்ளார். அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் விவேகானந்தாச்ரமம் 1969 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு நூலிலிருந்து பக்தர்களுக்காக தந்துள்ளேன்)
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஎனக்கு ஒரு மிட்டாய் தாங்கோ அண்ணா !
அழகான பாடல் மிட்டாயாக இனிக்கிறதே !
பாராட்டுக்கள்.
மிட்டாய் என்றாலே இனிக்கத்தான் செய்யும் அதுவும் பண்டரிபுரம் மிட்டாய் இனிக்காமல் போகுமா?
Delete