குருமருந்து
பல்லவி
மருந்து வாங்கலையோ-குரு
மருந்து வாங்கலையோ (ம)
அனுபல்லவி
மருந்தருந்தினால் பிறந்திறக்கும்
மயக்கம் தீர்ந்து மகிழ்ந்திருக்க (ம)
சரணம்
1.நித்தியமான நிலைதனிலே
நிச்சயமாக நிற்க வைக்க (ம)
2.ஆணவ மாயை அகற்றி நித்ய
ஆனந்தத்தில் அமரச்செய்யும் (ம)
3.மாதர் மக்கள் மனைமீதிலாசை வைத்த
மகிழ்ச்சியை தினம் மறக்கச் செய்யும் (ம)
4.தத்வ ஆராய்ச்சியை செய்த முமுஷுக்கள்
தனித்துவாங்கி புசிக்கத்தக்க (ம)
5.இகபர ஞானத்தை தந்து
இன்ப வாழ்வில் நிலைக்க செய்யும் (ம)
6.நஞ்சுண்ட நாதனருள் நாடிநின்ற நண்பர் தினம்
நன்றாய் புசித்துக்கொண்டு நாட்டதினில் நிற்கச் செய்யும் (ம)
7.விலட்சனானந்த குரு விமலா பாதாம் புஜத்தில்
விருப்பமுடன் பக்தி செய்து வேண்டி கேட்கும்படியான(ம)
8.ராமலிங்கதாசர் நிதம் ரம்யமாக புசிப்பதைப்போல்
நேமமுடன் புசித்தொர்க்கு நிர்மல ஞானத்தை தரும் (ம).
(இந்த கீர்த்தனையை இயற்றியவர் சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ ராமலிங்க பாகவத ஸ்வாமிகள் ஆவார். இவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் சீடராவார்.அவர் இதுபோன்ற பல எளிமையான பாடல்களை சௌராஷ்ட்ரம்,தமிழ்,தெலுங்கு மொழிகளில் இயற்றியுள்ளார். அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் விவேகானந்தாச்ரமம் 1969 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு நூலிலிருந்து பக்தர்களுக்காக தந்துள்ளேன்)

பகிற்விற்க்கு நன்றி...
ReplyDelete//மருந்து வாங்கலையோ-குரு
ReplyDeleteமருந்து வாங்கலையோ (ம)//
அருமையான பாடல். குருவருளால் மட்டுமே அண்ணாவின் மூலம் கிடைத்துள்ளது. அண்ணாவே நம் குரு. அண்ணா தினசரிப்பதிவுகளில் அளிப்பது அனைத்துமே குருமருந்து தான்.
அண்ணா வாழ்க ! அண்ணா நாமம் வாழ்க !!
44 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்த மருந்து இது
Deleteஎன்றும் அதன் வீரியம் குறையாது. மருந்தை பக்தியுடனும் நம்பிக்கையுடனும் உட்கொள்ளுவோர் நலம் பெறுவது நிச்சயம்.