கண்ணா கண்ணா என்று
கண்மூடி அழைத்தாலே ...
கண்ணா கண்ணா என்று
கண்மூடி அழைத்தாலே
கண் முன்னே
வந்து நின்றிடுவான்
கவலைகளைஎல்லாம்
போக்கிடுவான்
காலமெல்லாம் உடனிருந்து
கண்ணிமைபோல் காத்திடுவான்
அன்புடன் தினமும்
அவன் நாமம்
நாவிலும் நினைவிலும்
ஒலிக்க விட்டால்
ஒயாது சலிக்கும்
மனமும் ஒடுங்கிவிடும்.
அரக்கரை அழிக்க
சீதையின் நாயகனாய்
தரணிக்கு வந்த இராமனவன்
அதர்மத்தை அழித்து தர்மத்தை
நிலை நாட்டிய கீதா நாயகனவன்
சிலையாய் புறத்தே நின்றிடினும்
என் அகத்தே நிலையாய்
நின்றருள் செய்திடவே
ஓதுகின்றேன் அவன் திருநாமம்
கண்மூடி அழைத்தாலே ...
கண்ணா கண்ணா என்று
கண்மூடி அழைத்தாலே
கண் முன்னே
வந்து நின்றிடுவான்
கவலைகளைஎல்லாம்
போக்கிடுவான்
காலமெல்லாம் உடனிருந்து
கண்ணிமைபோல் காத்திடுவான்
அன்புடன் தினமும்
அவன் நாமம்
நாவிலும் நினைவிலும்
ஒலிக்க விட்டால்
ஒயாது சலிக்கும்
மனமும் ஒடுங்கிவிடும்.
அரக்கரை அழிக்க
சீதையின் நாயகனாய்
தரணிக்கு வந்த இராமனவன்
அதர்மத்தை அழித்து தர்மத்தை
நிலை நாட்டிய கீதா நாயகனவன்
சிலையாய் புறத்தே நின்றிடினும்
என் அகத்தே நிலையாய்
நின்றருள் செய்திடவே
ஓதுகின்றேன் அவன் திருநாமம்
வரைந்துள்ள படமும் அழகு. சொல்லியுள்ள விஷயங்களும் அருமை. பாராட்டுக்கள்.
ReplyDeleteஉடனே புறப்பட்டு வாங்கோ அண்ணா [கண்ணா]:
http://gopu1949.blogspot.in/2013/08/36.html
தங்கள் கண்ணன் பாட்டும் படமும் வலைச்சரத்தில் இணைக்கின்ற பாக்கியத்தை எனக்குக் கொடுத்தது. நன்றி
ReplyDeleteகோகுலாஷ்டமி வாழ்த்துகள்
நன்றி
Deleteகபீர் அன்பன் அவர்களே
இவன் எண்ணங்களை
வலைசரத்தில் இணைத்தமைக்கு
உங்களுக்கும் காண்பவர்களனைவருக்கும்
கண்ணன் அருள் தடையின்றி கிடைக்கட்டும்.
கண்ணனைப் பற்றிய சிந்தனைகள்
கடந்த சில நாட்களாக என் மனதை
ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதால்
பல கவிதைகளை வெளியிட்டுள்ளேன் .
படித்து இன்புறுங்கள்.