ஸ்ரீ ராமலிங்க பாகவதர் கீர்த்தனைகள் (3)
(இந்த கீர்த்தனையை இயற்றியவர் சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ ராமலிங்க பாகவத ஸ்வாமிகள் ஆவார். இவர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளின் சீடராவார்.1882 ஆம் ஆண்டு அவர் இதுபோன்ற பல எளிமையான பாடல்களை சௌராஷ்ட்ரம்,தமிழ்,தெலுங்கு மொழிகளில் இயற்றியுள்ளார். அதில் ஒன்றுதான் திருப்பரங்குன்றம் விவேகானந்தாச்ரமம் 1969 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு நூலிலிருந்து பக்தர்களுக்காக தந்துள்ளேன்)
ராகம்-தன்யாசி-தாளம் ஆதி
பல்லவி
எப்போ வருகுவாரோ ஸ்ரீ ரகுராமன் (எ)
அனுபல்லவி
அப்போது கண்டு நான் அடியினை தொழுதேற்ற (எ)
சரணம்
1. ஒம்காரமான பொருள் உலகம் உய்விப்பதற்கு
பாங்குடன் தசரதற்கு பாலகனாய் உதித்த ராமன் (எ)
2 கௌசிகா வேள்வியை களிப்புடனே கார்த்த
பௌஷிகடதாடகியை பாரில்விழ சிதைத்த ராமன் (எ)
3. கனமான கல்லை கழிக்க பெண்ணுருவாக்கி
ஜனகன் வில்லையொடித்த ஜானகி மனோகரன் ராமன் (எ)
4. வீரத்துடனே வந்து சூரனென்ரு சொன்ன
தீரன் பரசுராமன் திண்டிராயழித்த ராமன் (எ)
5. கைகேசி கணவனிடம் கடுமையான வரத்தை கேட்க
கைகேசியை நமஸ்கரித்து கானகம் சென்ற ராமன்(எ)
6. சூதாக தன்னிடத்தில் சுகிக்கவென் றிச்சை கொண்ட
சூர்ப்பனகியை பங்கம் செய்த சுந்தர ராமன்(எ)
7. மாறு வேஷத்துடனே மானாக வந்து நின்ற
மாரீசனை கொன்ற மஹாதீர ரான ராமன்(எ )
8. சீதையை ராவணன் சிறை எடுத்துச் செல்ல
சீதையைக் காணாமல் தேடி திரிந்த ராமன் (எ)
9. ஜெடாயுவால் சீதையின் சேதி தெரிந்துகொண்டு
ஜெடாயுவை தகனகிரியை செய்து முடித்த ராமன்(எ)
10.பெண்ணான சபரியை பிரியமுடனடுத்து
கண்ணான ஹனுமானை கண்டுகளித்த ராமன் (எ)]
11.சுக்ரீவனைக் கண்டு சுகமுடன் நட்புக் கொண்டு
அக்ரமவாலியை ஹதம் செய்த ரகுராமன் (எ)
12.ஆஞ்சநேயரிடத்தில் அம்மன் குறிப்பு சொல்லி
வஞ்சகமாகவே வாரிதி தாண்ட வைத்த ராமன் எ)
13. அசோக வனத்தில் சென்று அம்மன் குறிப்பறிந்து
ஹதாஹதம் செய்துவந்த அனுமானை கார்த்த ராமன்.(எ)
14.லென்காபுரியில் சென்று ராவணாதிகளைக் கொன்று
பங்கஜலோசணியை சங்கை தீர்த்தாண்ட ராமன்(எ)
15.தேவ விமானத்தில் திவ்யமுடனே ஏற்றி
பாவகனால் சீதையை பவித்ரமென்ருணர்ந்த ராமன்(எ)
16.துஷ்டர்களை சிஷிக்க இஷ்டர்களை ரஷிக்க
திட்டமாய் அயோத்தியில் பட்டாபிஷேகம் பூண்ட ராமன் (எ)
17.ராமலிங்கதாசனை ரம்யமுடனே கார்க்க
பிரேமமாய் வந்துதித்த பரமாத்மாவான ராமர்.(எ)
(இந்த பாடலில் வரும் தமிழ் சொற்கள் 1882 ஆம் ஆண்டு வழக்கில் இருந்த சொற்கள் என்பதை கவனத்தில் கொள்ளவும்)

அருமையான கீர்த்தனைகள் போலிருக்கு. இருப்பினும் என்னால் ஏனோ கீர்த்தனைகளையெல்லாம் பொறுமையாக உட்கார்ந்து கேட்கவோ, படிக்கவோ ஆர்வம் இருப்பது இல்லை.
ReplyDeleteஎனினும் பகிர்வுக்கு நன்றிகள்.
உண்மையை
Deleteஒத்துக்கொண்டதற்கு நன்றி
கடுமையான காய்ச்சல் கண்டவனுக்கு
அறுசுவை உணவு பிடிக்காது.
வெறும் கஞ்சி மட்டும்
போதுமென்பான் .
அதுபோல்தான் உலக மோகத்தில்
மூழ்கியவர்களுக்கு உண்மை வழியை
காட்டும் ஞானிகளின் அறிவுரைகள்
கசப்பாகத்தான் இருக்கும்.
எல்லாவற்றிற்கும்
நேரம் காலம் வரவேண்டும்.
அப்போதுதான் எதையும்
உணர்ந்து கொள்ள இயலும்.
இறைவன் நம் உள்ளே இருக்கின்றான்
எதிரே இருக்கின்றான்.
எல்லா பக்கமும் இருக்கின்றான்.
எங்கு பார்த்தாலும் நீர்
ஆனால் குடிப்பதற்கு மட்டும்
ஒரு சொட்டு நீர் இல்லை
என்ற நிலைமைதான்
இந்த ஆன்மீக விஷயத்தில்.
அவனை
புரிந்துகொள்வது எளிதல்ல
இப்போது புரியாவிட்டாலும்
பரவாயில்லை.
இந்த மடயனுக்காக
ஒரு முறை படித்து விட்டு
உங்கள் வேலைகளை சந்தோஷமாக பாருங்கள்.
என்றாவது ஒருநாள்
உங்கள் மூளையில்
அது வேலை செய்யும்.
இந்த உலகத்தில்
எதுவும் ஒருநாள்
உதவாது போகும்போது
இந்த கருத்துக்கள்
உங்களுக்கு உதவும்.