Tuesday, September 10, 2013

அகந்தையும் துணி துவைக்கும் கல்லும்

அகந்தையும் 
துணி துவைக்கும் கல்லும் 

என்ன புதிராக உள்ளதா?

இரண்டிற்கும் என்ன சம்பந்தம்
என்று கேட்க தோன்றுகிறதா?

ஒன்று உயிருடன் தொடர்புள்ளது

மற்றொன்றோ உயிரில்லாத ஜடம்
 (நாம் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம்)
.
ஆனால் உண்மையில் கல்லுக்குள்ளும்
 ஒரு ஆத்மா ஒளிந்துகொண்டிருகிறது.
ராமாயணத்தில் வரும் அகலிகை இதற்கு சான்று.

கல்லாய் இருக்கும் ஒரு வடிவமற்ற கல்
ஒரு கைதேர்ந்த சிற்பியின் பார்வை பட்டால்
தெய்வ சிலையாக மாறிவிடும்.
கோயிலில் அமர்ந்துவிடும்.
 மந்திர சக்தி ஊட்டப்பட்டால்
அது தெய்வ சாநித்தியம் பெற்று
அனைவருக்கும் அருள் செய்யத்
தொடங்கிவிடும்.

ஆனால் எந்த கல் தூள் தூளாக உடைந்து
 சாலைகளிலும் அடுக்கு மாடி கட்டிட பில்லர்களிலும் போகுமோ
அல்லது கோயில்களில் சுவர் கல்லாகுமோ  அல்லது சிலையாகுமோ அல்லது பெயர் பலகையாகுமோ, அல்லது கல்லறைமேல்  பதிக்கப்படுமோ அல்லது சுயம்புவாக மாறி லட்சக்கணக்கான மக்களுக்கு தெய்வமாக விளங்குமோ யாருக்கு தெரியும்?

மனிதன் படும் துன்பம் அனைத்திற்கும்
மூல காரணம் அவன் விடாமல் பற்றிகொண்டிரும்
அகந்தை என்னும் தீய குணம்தான்.

அது முற்றும் துறந்த முனிவர்களையும் விடுவதில்லை.
முக்கண் கொண்ட ஈசனையும் விடுவதில்லை.

அதனால் அனைவரும் படுகின்றார்பல தொல்லை.

சரி நம் கட்டுரையின் தலைப்பிற்கு செல்வோம்.(இன்னும் வரும்)

2 comments:

  1. //ஆனால் எந்த கல் தூள் தூளாக உடைந்து சாலைகளிலும் அடுக்கு மாடி கட்டிட பில்லர்களிலும் போகுமோ
    அல்லது கோயில்களில் சுவர் கல்லாகுமோ அல்லது சிலையாகுமோ அல்லது பெயர் பலகையாகுமோ, அல்லது கல்லறைமேல் பதிக்கப்படுமோ அல்லது சுயம்புவாக மாறி லட்சக்கணக்கான மக்களுக்கு தெய்வமாக விளங்குமோ யாருக்கு தெரியும்?//

    அதானே ! யாருக்குத்தெரியும்?

    அருமை அருமையாக அண்ணா எழுதத் துவங்கிவிட்டார்கள்.

    தொடரும் ..., இன்னும் வரும் .... வரட்டும். மகிழ்ச்சியே !

    கல் பற்றிய கருத்துக்கள் கல்கண்டாக இனிக்கிறது. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. வித்தியாசமான சிந்தனை தொடரட்டும் ஐயா...

    ReplyDelete