Tuesday, September 10, 2013

விநாயக சதுர்த்தி பண்டிகையின் பின்னணி

விநாயக சதுர்த்தி 
பண்டிகையின் பின்னணி 


விநாயக சதுர்த்தி பண்டிகை
ஒவ்வொரு ஆண்டும்
ஆவணி மாதம் வருகிறது.

கோடை காலங்களில் குளம்  குட்டைகள் ,ஏரிகள்
,நீராதாரங்கள் காய்ந்து போயிருக்கும்.
சிறிதளவு மழை பெய்து  நீர் நிரம்பியிருக்கும்.

நீரின் அடியில் வண்டல் மண்ணும்
களி  மண்ணும் நிறைந்து ஆழம் குறைவாக இருக்கும் .

அப்போது வண்டல் மண்ணை எடுத்து
விவசாயிகள் நிலங்களுக்கும்
களி  மண்ணை எடுத்து  பொம்மை செய்யவும்
மட்பாண்டங்கள் செய்யவும் மண்பாண்ட கலைஞர்கள்
 பயன்படுத்தி தங்கள் பிழைப்பை நடத்துவார்கள்

தொடர்ந்து மழைக்காலம் வருவதால்
நீர் நிலைகளில் தண்ணீர் தேங்க வசதியாய் இருக்கும்.

பிள்ளையார் சதுர்த்தியை அடுத்து






நவராத்திரி பண்டிகை வருவதால் ஒவ்வொரு வீடுகளிலும்
பொம்மை கொலு வைப்பதால் பல ஆயிரம்
குடும்பங்கள் பிழைக்கும் .

குளத்தின் அருகே முளைத்துள்ள அருகம்புல்லை 
சிலைமேல் போட்டு மஞ்சள் பூசி, 
ஆங்காங்கே முளைத்துள்ள எருக்கஞ்செடியில்
 பூத்துள்ள எருக்கம்பூவை போட்டு 
மண் சட்டியில் கடலையை வேகவைத்து 
படைத்தால்  போதும் இதுவே போதும் என்று மகிழ்ந்து 
மகிழ்ச்சியான வாழ்வை அருளும் தெய்வம் கணபதி 

ஆனால் இன்று அந்த விழா அரசியல்வாதிகளிடமும், கருப்பு பண முதலைகளிடமும் சிக்கி படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

அமைதியாக கொண்டாட வேண்டிய விழா இன்று
கலி கால கோலத்தின்படி  ஆர்பாட்டத்துடன் அமைதியை கெடுக்கும் விழாவாக ,சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் கேளிக்கையாக நடத்தப்படுகிறது.

இதை மனதில் வைத்தே பிள்ளையார் சதுர்த்தியை பச்சை களிமண்ணால் செய்த பிள்ளையார் வடிவத்தைக் கொண்டே பூஜை செய்து அதில் அவர் சக்தியை ஆவாஹனம் செய்து மீண்டும் பூஜை செய்து அந்த மண் படிமத்தை சகல மரியாதைகளுடன் நீர் நிலைகளில் சேர்க்க வேண்டும் என்ற நியமம் ஏற்ப்பட்டது. 




ஆனால் இன்று நீர் நிலைகளும் இல்லை .
அதனால் களி  மண்ணைக் கொண்டு
விநாயகர் வழிபாடு செய்வது மிகவும் குறைந்துவிட்டது.

காற்றையும், கடலையும், நீர் நிலைகளையும் மாசுபடுத்தும் கேடுகளை விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகளை வீம்புக்காக செய்து கலவரத்தையும், பதட்டத்தையும் தூண்டி விழாவை கொண்டாடி ஏற்கெனவே நாசமாய்ப்போன சாக்கடைகளை விடும் நீர்நிலைகளில் சிலைகளை கொடூரமான முறையில் கொண்டு கொட்டுகின்றனர். 




(கோலாகலமாக பூஜை கண்ட உன் வடிவம் 
படும் பாட்டை பார்க்க கஷ்டமாக உள்ளதே !)

கொண்டாடுபவர்களுக்கும் பாதுகாப்பில்லை.
எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்று அரசுகள் பயந்து காவல் துறையினர் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான செலவில் வீணடிக்க வேண்டியுள்ளது.

எளிமையான கடவுள் வினாயகர் 
ஏக தந்தம் உடையவர் விநாயகர் 

ஏழைக்கும் ,ஏழடுக்கு மாளிகையில் 
வசிக்கும் மனிதருக்கும்
எந்த  வேறுபாடு காணாத விநாயகர்

பக்தியுடன் பணிந்தால்  பாலகனாவான்
சக்தி தரும் வேலவனாவான் 
முக்தி தரும் முகுந்தனாவான்
சங்கடங்கள் தீர்க்கும் சங்கரனாவான் 
அகந்தையின்றி அடிபணிந்தால்
 உன் சேவகனாவான்  
அவன் பெருமை எழுத்தில் வடித்தலரிது . 

pic. courtesy-google images 

7 comments:

  1. விநாயக சதுர்த்தி பண்டிகையின் பின்னணியை பின்னிப்பின்னி எழுதி அசத்தி விட்டீர்கள் ..... அண்ணா.

    காலம் மாறிப்போச்சு அண்ணா.

    அதைத்தான் என் படைப்பில் பிள்ளையார் பொம்மைகளைப்பற்றிய என் அனுபவத்தைச் சொல்லியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2011/08/1-of-2.html பகுதி-1

    சூப்பர் பகுதி-2

    http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2_31.html

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனதில் கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா?
      உங்கள் இஷ்ட தெய்வம் பிள்ளையார் படும் பாட்டைக் கண்டு?

      Delete
    2. ;)))))

      //உங்கள் மனதில் கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா? உங்கள் இஷ்ட தெய்வம் பிள்ளையார் படும் பாட்டைக் கண்டு?//

      நாம் என்ன செய்யமுடியும் ஸ்வாமீ???????

      பதிவு எழுத மட்டுமே நாம் இல்லை இல்லை நான் லாயக்கு !

      கண்டனம் தெரிவிக்கலாம், நம் பதிவுகளில்.
      அதையும் யாரும் லேஸில் படிக்க மாட்டார்கள்.

      வேறேதும் செய்யப்போனால் நம்மையும் ஆற்றிலோ, குளத்திலோ, ஏரியிலோ அடித்துப்போட்டு மிதக்க விட்டு விடுவார்களே, இந்த அரசியல் வா[ந்]திகள். ;(

      அன்புடன் கோபு

      Delete
  2. பிள்ளையார் படும் பாட்டை பார்க்க கஷ்டமாகத் தான் உள்ளது... என்று இந்நிலை மாறும்...?

    ReplyDelete
    Replies
    1. இனி மாறுவதற்கு
      வாய்ப்பில்லை
      நாம்தான் நம் மனதை
      மாற்றிக்கொள்ளவேண்டும். அல்லது
      இந்த காட்சிகளை காணாமல் கேட்காமல் இருப்பது.

      Delete
  3. காற்றையும், கடலையும், நீர் நிலைகளையும் மாசுபடுத்தும் கேடுகளை விளைவிக்கும் பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலைகளை வீம்புக்காக செய்து - நிதர்சனமான உண்மை . நிலை கெட்ட மனிதர்கள் இப்படியெல்லாம் செய்வார் என்பதனை பாரதி ... நெஞ்சு பொருக்குதில்லையே .... என்று பாடினார் என்று எண்ணவும் தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. இந்த காட்சிகளெல்லாம் நீ காண வேண்டாம் என்றுதான் பாரதியாரை இளம் வயதிலேயே கணேச பெருமான் யானை வடிவத்தில் வந்து அழைத்து சென்று விட்டார்போலும்!

      Delete